கருப்பு விலைமகளொருத்தி - குமாரி பெர்னாந்து

Photo by FLY:D on Unsplash

வளையல்களைத் தேர்ந்தெடுத்த இடத்தில்!
நான் சந்தித்த விலைமகள்!
மிகவும் அகங்காரத்துடனும்!
அழகுடனும்!
கருப்பாகவுமிருந்தாள்!
!
காலையில் நாம் உணவுக்காகச் செல்லும்!
உணவகத்தின் இன்னுமொரு மூலையில்!
பீங்கான் நிறையச் சோறெடுத்து உண்பாள்!
அவளது வயிறு மேடிட்டிருப்பதை!
கதிரைகளுக்கிடையேயிருந்து கண்டேன்!
கருவுற்றிருந்தாள்!
பசியகன்றதும்!
மரத்தடிக்குச் சென்றாள்!
!
நாள்தோறும் சந்திக்க நேரும்!
அவ் வதனத்தை!
எவ்வாறு தாங்கிக்கொள்ள இயலும்!
வங்கி முன்னாலிருக்கும்!
ஒரேயொரு சிறு நிழல் மரம்!
அவளது இருப்பிடம்!
ஒருவர் மாத்திரமே இருக்க முடியுமான!
அவ்விடத்திலமர்ந்து வயிற்றைத் தடவிக் கொண்டிருப்பாள்!
இன்னும் சிறு குழந்தைகள் இருக்கக் கூடும்!
!
இறுதி நாளில்!
நான் விசாரித்தேன்!
உணவக முகாமையாளரிடமிருந்து!
சில தகவல்கள் கிடைத்தன!
'ஆம். அவள் கருவை அழித்துக் கொண்டாள்!
இப் பக்கத்து ஆட்களல்ல.'!
!
கவலையோடு சேர்த்து கோபமும் எழுந்ததன்!
காரணம் எனக்குத் தெரியும்!
என்னால் அப் பெண்ணின் உள்ளத்தை!
புரிந்துகொள்ள இயலாது!
வயிறு நிறையச் சாப்பிட்டு!
செய்வதறியாது!
எழுந்து நடந்தேன்
குமாரி பெர்னாந்து

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.