வள்ளுவனின் எழுத்தாணி..பணிதல் - கொ.மா.கோ.இளங்கோ

Photo by Jan Huber on Unsplash

01.!
வள்ளுவனின் எழுத்தாணி !
------------------------------------ !
உள்ளங்கை வருத்தி !
உருவானது !
வள்ளுவர் சிலை !
மயில், கணபதி, நந்தி, துர்க்கை !
முடித்த கைக்கு பரிசு !
இப்பணி !
உளியும் சுத்தியலும் !
ஓயாது உழைத்திருக்கும் !
திருப்தியில் பாறாங்கல் !
சிறந்த மொழியாக்கம் !
வெயிலின் உக்கிரம் ஓங்க !
சில வேளை !
வியர்வை உறிஞ்சிய சிலை !
முடிவுக்குவரும் மொழியாக்கம் !
பொருட்பவின் வள்ளுவன் தயார் !
எழுத்தாணியின்றி !
வெடித்தது யோசனை !
உளிஎடுத்த சபதி !
சிலையின் உள்ளங்கை திணித்தார் !
வீதி நடுவே மேடை நின்று !
ஈரடி செய்யுள் எழுதும் !
இனி இச்சிலை !
சுத்தியலின் இயற்பால் தொடங்கி. !
02.!
பணிதல் !
-------------- !
அகல் விளக்கின் !
சுடர் மொட்டுகள் !
கசிந்த வெப்பத்தில் !
காற்று வெளியின் !
கன்னம் !
சூடேறி போகிறது. !
கோபத்தில் வளி !
தீபத்தை !
அணைக்க முயல்கையில் !
உள்ளங்கை கூப்பி !
மன்னிப்பு கேட்டு !
தாழ்பணியும் !
இளஞ் சுடர் !
பணிதலின் வியாக்ஞானம் !
பளிச்சென !
சொல்லி போகிறது
கொ.மா.கோ.இளங்கோ

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.