வலி உணர்தல் - கலாவண்ணன்

Photo by Jr Korpa on Unsplash

பிரிவு வலியில் தவித்தல் !
பற்றி !
நீ என்ன அறிந்திருக்கிறாய்? !
புலரும் பொழுதில் !
ஒரு மல்லிகையின் வாசம் !
சுமந்து வரும் !
இளந்தென்றலையும் !
விழுங்கமுடியாதபடி !
தொண்டையில் சிக்கும் !
விரகதாபம் பற்றி !
உனக்கு என்ன தெரியும்? !
நீ அவ்வப்போது !
சிந்திச் சென்ற !
புன்னகைப் பூக்களின் !
நிறங்களுடனும் வாசனைகளுடனும் !
எப்படித்தான் !
நான் காலவெளி கடத்துவது? !
கடற்கரையோர மணற் பரப்பில் !
அந்திப் பொழுதொன்றில் !
பிணைக்கப்பட்டிருந்த !
நம்கைகளை !
மேலும் இறுக்கியபடி !
உன் உதட்டோரம் நீ பரப்பிய !
சென்நிறப் பூக்களில் !
ஆயிரம் வண்டுகளாய் மூழ்கிய !
என் விழிச்சிறகுகளை !
நான் எங்குலர்த்துவது? !
அந்தப் பொழுதில் !
நீ விட்டுச் சென்ற நினைவுகளின் சிதறல்களை !
ஒவ்வொன்றாய் சேகரித்து !
எப்படி நான் அசைபோடுவது? !
உன் விழிகள் பேசிய !
சத்தமற்ற ஒலிக்குவிப்புக்களால் !
உருவாக்கப்பட்ட !
உருவமற்ற கவிதைகளை !
எப்படி நான் வாசிப்புக்குள்ளாக்கலாம்? !
உன் உதடுபேசாத மொழிகளுக்கு !
கற்பனையில் உருக்கொடுத்து !
பல வண்ணங்கள் தடவி !
வானவெளியில் பறக்கவிட்டுள்ளேன் !
என் பற்றிய !
அந்த நாள் ஞாபகங்களில் ஒன்றெனும் !
எப்போதாவது உனக்கு நினைவில் வந்தால் !
சற்றே தலைநிமிர்த்திப்பார் !
மறைதலுக்கும் ஒளிர்தலுக்குமிடையே !
என்னைப்போலவே !
அலமந்து கொண்டிருக்கும் வானவில். !
-கலாவண்ணன்
கலாவண்ணன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.