ஒரு!
நிறமற்ற பெரும் மழை பெய்து முடித்திருந்தது!
நான் முழுவதுமாக நனைந்திருந்தேன்!
ஒரு சொட்டு ஈரமும் காயவில்லை...!
நிலவில் முகம் பார்க்க அழைத்தேன்!
ஈரம் சொட்டும் உடைகளை கழற்றச் சொன்னாய்!
உடைமாற்றம் நிகழும் போதெல்லாம்!
நிறமற்ற மழை பெய்கிறது.......!
தொப்பலாய் நனைந்த தேகத்துடன்!
உனை அணைக்க வரும் போதெல்லாம்!
பட்டாம்பூச்சி சகிதம் பறந்து போகிறாய்......!
மழை பிடிக்கும் என்றல்லவா நினைத்தேன்...!
ஏன் பறந்தாய்....?!
உன் பதில் காற்றில் உறைத்தது!
‘வியர்வை நாற்றம்’!
பெய்ததெல்லாம் நிறமற்ற மழை தான்...!
வியர்வை எந்த நிறம்!
பச்சையாகவோ!
மஞ்சளாகவோ!
வேறு எந்த நிறமாகவோ இருக்குமோ!
என்று நினைக்கிறேன்...!
உன் தப்பித்தல்வழி சிறந்தது...!
எந்த நிறத்திலும் வியர்வை என்னிடமில்லை...!
பெய்ததெல்லாம் நிறமற்ற மழைதான்...!
இது போலத்தான்!
என் மரணம் நிகழ்கிறது...!
நாள் கடந்தால்!
‘பிண நாற்றம்’ என்பாய்...!
அதுவரை நான் அடக்கம் செய்துவிடப்பட மாட்டேனா...!
வர்ணஜால சூரியனின் ரதத்தில் காய்வேன்!
தொப்பலில்லாமல் வருவேன்!
உன்னிடமல்ல!
என்னைத்தேடி என்னிடமே
கேயெல்.நப்லா (நப்லி)