வரலாற்று வாசிப்புகள் - இளம்பூரணன் .அர

Photo by FLY:D on Unsplash

பள்ளிக்கூடத்தில்!
சிந்து சமவெளி நாகரீகத்தையும் !
ஹரப்பா, மொஹஞ்சதாரோக்களையும்!
வலுவிழந்த உடலோடும்!
வளம் குன்றாத வசீகர குரலோடும்!
வரலாற்றாசிரியர்கள்!
புரிந்துணர்த்திய போது புரியவேயில்லை!
வரலாற்றின் பழம்பெருமைகள்!!
!
மாடுகளோடு மாடாகி!
ஓடிக்கிடக்க வழிகோலிய!
பனைமரங்களடர்ந்த!
முட்கள்மிக்க ஓடையும்....!
!
உயிர் குடிக்கும் உச்சிக் கதிரவனின் உக்கிரத்தில் !
என்!
நா வறண்டிருப்பதை பொருட்படுத்தாமல் !
ஆவினங்களை அழைத்துச் சென்று!
அதன் தாகம் தீர்த்திட எத்தனிக்கையில்!
ஓரமாய் நீர் தேக்கி!
ஈரப் பார்வையுடன் தான் உயிர்த்திருப்பதை!
அறிவித்த குளமும்....!
!
'ம்மா ' என்ற ஒற்றைச் சொல் பாடலின்!
ராக சங்கமத்தில்!
இசையின் மூலத்தை கற்ப்பித்து!
தன் தேவை உணர்த்திய ஆவினங்களின்!
ஆதிக்க பூமியாகிய!
பச்சையாடை கட்டிய புற்சமவெளியும்... !
!
இன்று!
காணாமல் போய்!
நினைவுகளின் ஒவ்வொரு!
நியூரான்களையும்!
செரிக்க செரிக்க!
அரித்துக் கொண்டிருக்கும்!
என்!
இறந்தகால இன்பங்களின்!
நிகழ்கால நிஜங்களை காணும்வரை!!
!
-இளம்பூரணன் .அர!
31/10/2007
இளம்பூரணன் .அர

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.