01.!
தெப்பக்குளத்தில்!
கிரிக்கெட் மேச்!
பல் இல்லா வாய்க்குழிபோல்!
ஊர் நடுவே தெப்பக்குளம்!
ஊருக்கே அடையாளம் ஆச்சு!
தெப்பக்குள பஸ் நிறுத்தம்!
அரசியல் பொதுக் கூட்டம் -!
தெப்பக்குள சந்திப்பில்!
தாத்தா காலத்தில்!
தண்ணீர் ததும்பும்!
குளிக்கவும் குடிநீருக்கும்!
பொதுமக்கள் நாடுமிடம்!
விழாக்காலம் தெப்பம் விட்டு!
ஊரார் மகிழ்வர்!
நடுவில் ஒரு மண்டபம்!
கோபுரத் தொப்பி!
கோபுரத்து பொம்மைகள்!
ஓகோவென அழகு!
குபுக்கென குதிப்பதற்காய்!
கோபுரத்தில் ஏறினவோ!
தாத்தா காலம் ஆச்சு!
தெப்பக்குளம் இப்போது!
குப்பை கூளம் என்றாச்சு!
தெப்பக்குளம் தாத்தாவின்!
வாய்போல ஆச்சு!
சாமியேறும் கொலுமண்டபம்!
சோம்பேறி ஆண்டிமடம்!
மீசைவெச்ச தொந்திக்கார!
அசுர வம்ச பொம்மை!
இறக்கிவிட ஆள்தேடி!
பதறியழும் கதறித்தொழும்!
பள்ளிக்கூடம் லீவு விட்டால்!
பட்டாடைச் சிறுமியாட்டம்!
படபடத்த கும்மாளம்!
வாலிபத்தின் ஜாலிபால்!
படியிறக்கம், காலரி!
பார்வையாளர், 'பிஸ்லெரி'!
கட்சிகட்டி கிரிக்கெட் மேட்ச்!
கைதட்டல் ஆர்ப்பரிப்பு!
மட்டையடி மொட்டை பாபு!
து¡க்கி விட்டான் சிக்ஸர்!
கிட்டவில்லை சக்ஸஸ்!
கோபுரத்து பொம்மை!
கேட்ச் பிடித்து பாபு அவ்ட்!
எட்டாம் மாடி city பாபு!
எட்டிப் பார்த்து பந்து கண்டான்!
பந்து அல்ல!
தூங்கும் பந்துகள்!
மழைநாள் வந்தால்!
மீண்டும் விமோசனம்!
பந்துகள் உருளும்!
புரளும் தரைக்கு வரும்!
சிறியவர் பெரியவர் காத்திருந்தார்கள்!
விளையாடலாம், தெப்பமும் விடலாம்!
யாவர்க்கும் எக்காலத்தும்!
வேண்டும் வேண்டும் மழை!
!
02.!
கவிதை இரண்டு!
பின்னிரவு கதவு தட்டி!
சடசடக்கும் மழை!
து£க்கம் கெடும்!
வாசலில் நிற்கும்!
வாகனம் நனையும்!
இடி!
பல்கடிப்பு!
மிருகஉருமல்!
வான ஓநாய்!
ஒளிமுள்!
குழந்தைகள் அழுவர் நடுங்கி!
சிறு மழை வியாதி கொணரும்!
மின்சாரம் நின்று போம்!
சாத்திய வீடு சாத்தான் கூடு!
படையெடுக்கும் கொசுக்கூட்டணி!
தொப்பி து¡க்கி வணங்கும் சாக்கடை!
நாற்றம்!
கால்வைக்கக் கூசும் நடை!
சுவர் ஈரம் மின்சாரம் கசியலாம்!
வீதி வயர் அறுந்து ஊசலாடலாம், உ யி ர்!!
ஒண்ட இடம் தேடி ஓடிவந்த காகம்!
மல்லாந்து வீழ்ந்து பட!
சுற்றமும் நட்பும் சிறகடித்த ஒப்பாரி!
நகர எல்லை தாண்டி!
பொழிகவே வானம்!
ந க ரி ல்!
வேண்டாம் வேண்டாம் எந்நாளும்!
!
-எஸ். ஷங்கரநாராயணன்!
--------------------------------------------!
எஹ். ஷங்கரநாராயணனின் கவிதைத் தொகுதி!
ஊர்வலத்தில் கடைசி மனிதன் (கவிதாஸ்திரம்)
எஸ். ஷங்கரநாராயணன்