அலுவலக கோப்புகளுக்குள் !
புதைந்திருந்த வேளை...!
யாரோ,சொல்லத் தெரிய வந்தது !
வெளியே நல்ல மழையாம்....!
கோப்புகளை மூடி வைத்து !
காகிதத்தை விரிக்கையில்!
கொட்டியது !
நினைவு மழை ...!
சாளரக் கம்பியில் கைவைத்து பருகியதும்...!
முழங்கால் நீரில் முழ்கி நீச்சல் பயின்றதும்...!
மின்னல் புகைப்படங்களும்... !
பொருள் விளங்காத !
அர்ஜுனா அலறல்களும்....!
!
காகித கப்பல் மூழ்கியதால் வந்த !
வெட்கங்களும் ,!
வேடிக்கை அவமானங்களும்.... !
எதிர் வீடு நண்பனின் !
கப்பல் மூழ்கியதால் !
ஏற்பட்ட களிப்பும்,!
செய்த கிண்டல்களும்..... !
அம்மாவின் !
சேலை துவட்டல்களும் !
செல்லத் திட்டுக்களும் !
பருவ வயது மழையில் ஆடிய!
மட்டைப்பந்தாட்டமும்.... !
நண்பனோடு நனைந்தே !
கடந்த சாலைகளும்...!
எதிர்ப்படும் கடைகளில் பருகும் !
எண்ணிலடங்கா தேநீர்களும்...!
வேளை கிடைத்து !
வெளியூர் வந்த வேளைகளில் !
பெய்த மழையின்!
ஏகாந்த நனைதல்களும் !
கரைத்து விட்ட கண்ணீர்களும்...!
இவ்வாறாக !
இணைந்து இருந்தவர்கள் !
இயந்திர வாழ்க்கைச் சக்கரத்தில் !
மிதி பட்டுப் போனதால்-எங்களை !
இன்று !
யார் யாரோ !
அறிமுகம் செய்கிறார்கள்
எம்.கோபி