மாடியின் யன்னலினூடு விழிகள்!
இருள்கவிந்த பகலொன்றில்!
மழைத்துளிகள் இல்லை!
மழைக்கீறல்களில் மனம் விறைக்கிறது.!
எப்போதும்போல!
வானவில் காணாது மழை பெய்தபடி!
மனம் அதில் நனைந்தபோதும்!
உடல் மறுக்கும்.!
ஐரோப்பிய மழைக்குளிர்!
அப்படியொன்றும் இதமானதல்ல!
வீதிகளின் கால்வாய் துவாரங்களில்!
மழை நீர் வழிந்தோடியபடி!
நினைவுகள் மட்டும்!
உறைந்து ஓடமறுக்கும்.!
மேகக்கூட்டங்களை இருள் கவ்வும்!
மனம் நிசப்த அமைதியில்!
இது சோகமா? மகிழ்ச்சியா?!
புதிய உணர்வு கோலமிடும்!
குளிர்கவ்வி காற்றுவீசும்!
சருகுகளுக்கு செட்டைமுளைக்கும்!
முகில்கள் உரசி முழக்கமிடும்!
மின்னல் தெறிப்பில்!
முகங்கள் விழிக்கும்!
மழைத்துளிகள் பூமியை முத்தமிடும்!
ஆனந்தமழையில் சிறுவர் நனைவர்!
தாழ்வாரங்களும் பீலிகளும்!
தற்காலிக சவர்களாய்!
கூரை ஒழுகி ஏழையை நனைக்கும்!
நனைந்த விறகை அடுப்பு மறுக்கும்!
கூலி வயிறுகள் பசியில் புகையும்!
ஆலமரங்களும் அரசமரங்களும்!
அங்கங்கே குடைகளாகும்!
கால் முளைத்து குடைகள்!
சைக்கிள் ஓடும்!
சிலவேளைகளில்!
வாய்க்கால் வெள்ளத்தில்!
சைக்கிள் நிறுத்தி!
சிறுவர் கூட்டம் நீரை இறைக்கும்!
கொப்பி ஒற்றைகள் கப்பலாய் திரியும்!
பதுங்கு குழிகளை மழைநீர் நிரப்பும்!
பயத்தில் விழிகள் பிதுங்கி முழிக்கும்!
நாளைய அறுவடைக்காய்!
நம்பிக்கையோடு!
ஏரின் கூர்கள் பூமியைக் கிழிக்கும்!
ஒழுகும் குடிலில்!
ஓட்டைப் பாத்திரங்கள்!
சதுரங்கம் நடத்தும்!
உடம்புக்கொடியில்!
ஏழையின் சீலைகாயும்!
பசித்த வயிற்றோடு!
ஏழைக் குடும்பங்கள்!
ஏங்கி விழிக்கும்!
வானத்தின் வளைவில்!
வாழ்வைக் காட்டி நிற்க்கும்!
நிறங்களின் கீறல்கள்!
யன்னல்களு£டு பார்வை!
இன்னும் நீர் வழிந்தோடியபடி!
அந்த நினைவுகள் மட்டும்!
வடியாது!
என்னுள் உறைந்த படி.!
சுதா சுவிஸ்

சுதா சுவிஸ்