நீயே..!!
அதிசயமாய்!
அழகிய ஓவியமாய்!
நகர்ந்து கொண்டே இருக்கும் நதியாய்!
தழுவுகின்ற காற்றலையாய்.....!
எத்தனை பேருக்கு வசந்தமானாயோ..?!
உன்னை எண்ணி...!!
பூக்களின் நறுமணங்களை!
எத்தனை பேர் நுகர்ந்தார்களோ..!!
உனது விழிமொழிதலால்!
எத்தனை விழி வாசல்கள் பூச்சொரிந்தனவோ..!!
உனது குடிபுகுதலினால்!
எத்தனை மனமுகடுகளில்!
இனிய கானங்கள் ஒலித்தனவோ..?!
இன்று உன் பிரிதலினால்!
எத்தனை மனங்கள் ஏக்கப் புள்ளிகளுடன்!
காதல் கோலங்களுக்காய் காத்திருக்கின்றனவோ..?!
புரியாமல் புலம்பாதே.!!
நீயே ஒரு அழகிய கவிதைதானே.!!
பிறகேன் தேடுகிறாய் கவி - தை யை..?
சந்திரவதனா