இதோ இன்னொன்று. !
மிக அருகில். !
மிக மிக அருகில். !
சதை கருகும் வாசம் தலையை கனக்கவைக்கிறது. !
மனதையும். !
இது நரகம். !
உண்மை. நாங்கள் குறிபார்க்கப் படவில்லை. !
விழும் குண்டுகள் எங்களுக்கானவை அல்ல. !
ஆனாலும் இது நரகம். !
நரகத்தில் மரணம் இல்லை. !
அங்கு வாழ்வும் இல்லை. !
நரகத்தில் இழப்பே மிஞ்சும். !
அல்லது இழப்பின் அச்சம். !
நாகரீகம் வளர்த்தவர்கள் நாங்கள். !
இன்று காட்டு மிராண்டிகளாய் சித்தரிக்கப்படுகிறோம். !
இருப்பவனுக்கு பதவி வேண்டும். !
வருபவனுக்கு பணம் வேண்டும். !
இடையில் உருளும் பகடைகள் நாங்கள். !
உண்மை. நாங்கள் குறிபார்க்கப் படவில்லை. !
விழும் குண்டுகள் எங்களுக்கானவை அல்ல. !
எங்கள் மேல் விழுந்தால் தான் என்ன? !
இரண்டு வரி மன்னிப்பும், !
ஒரு நிமிட மௌன அஞ்சலியும் (நேரம் இருந்தால்) !
செலுத்தினால் போகிறது. !
வாழ்க மானுடம்

சித்தார்த்