மழை பெய்த நாளில்
தவளையின் இரைச்சல், இசை ஆன நொடி
சர்பம் சகலம் மறந்து நின்ற நொடி..
எந்நொடியோ!!
அந்நொடி உன்னில் நான் தொலைந்த நொடி!!
அந்நொடி ஆதி முதல் தொடரா? இல்லை
நொடி மட்டும் முடிவா?
காதலோ,காமமோ, நட்போ
உணர்ச்சிக்கு அடையாளம் தேவையில்லை...
என் கண்களுக்கு நீ அழகாக தெரியும் வரை..
மீண்டும் மழை பெய்ய
பாடும் தவளை போல..
உனை பார்த்திருப்பேன்