ஒரு தலை ஆண் காதலில் பழகிய சமுதாயம் !
பெண் காதல் காவியம் படைக்கும் அதிசயம் கண்டால் என்ன?!
இரவுக்காக வாழ்ந்துவிட்டு இறந்து போகும்!
விட்டில் பூச்சியின் ஆயுள் போதும் எனக்கு !
உன் உறவுக்காக வாழ்ந்துவிட்டு இறந்து போக.!
இதுவரை தோற்றதில்லை யாரிடமும்!
உன் கடைவிழிப்பார்வையில் தோற்றுப்போவேன்!
என்று கனாவும் கூட கண்டதில்லை.!
'உனக்காகவே வாழ்கிறேன்' என்று நீ கூறிய போதும் !
பொருந்தாக் காதல் என்று கூறி பொய்யாய் தேற்றிக் கொண்டு !
திரையிட்டுக் கொண்டேன் இதயத்திற்கு.!
இன்று நீ விலகி நிற்க, தடைகளை தாண்டி !
தேடி வருகிறேன் உன் இதயவாசல் நோக்கி.!
இதயவலி என்பது உடல் சார்ந்த வலி என்றே நினைத்திருந்தேன்;!
இதயவலி என்பது நேசித்தவரை இழப்பதால் !
உண்டாகும் உயிர்வலி என்று அனுபவத்தால் !
உணர்ந்து கொண்டேன். !
உன்னைக் கடந்து போகையில் களவு போகிறேன் நான்.!
என் பேர் சொல்லி அழைக்கையில் உன் அடிமை ஆகிறேன் நான்.!
'இது உனக்கு' என்று தரும் போது மகுடம் அணிகிறேன் நான்.!
உன் பார்வை கிடைப்பதால் புதிதாய் பிறக்கிறேன் நான். !
ஒருமுறை பார்ப்பதுபோல்; மறுமுறை ஏற்கமாட்டாயா !!
உன் முன்னே!
எதையோ கேட்பது போல் நின்று ஒரு நொடியேனும் !
உன் விழித்திரைகளில் என்னைக் கண்டுபிடித்துக் கொள்வதில் !
கொள்ளை மகிழ்வு எனக்கு. !
நாம் இருவரும் இவ்வுலகை வலம் வர வேண்டும் !
தனிமையில் - நாம் மட்டுமே நம்மோடு;!
சொர்க்கம் கொண்டு வரும் உன் உறவோடு !
விளையாடித் திளைத்திருக்க வேண்டும். !
காதல் கொடியது என்று கொடி பிடித்து!
இன்று உன்னைப் பிடிக்க !
கை நழுவியது என் கொள்கை.!
யாரை நீ விரும்பினாலும் - நம்புவேன்!
நான் உன் தனித்துவம் என்று!!
உலகம் சுற்ற ஆசையில்லை!
காசு பணம் தேவையில்லை !
சொகுசு வாழ்க்கை பிடிக்கவில்லை !
மா, பலா இனிக்கவில்லை !
என்னை சிறைப்பிடித்து உன் !
இதயக் கூட்டினில் அடைத்துக் கொள்ளேன் !
வாழ்ந்துவிட்டு போகிறேன் இந்த ஒரு ஜென்மமேனும்.!
'ஸ்ரீராமஜெயம்' எழுத மாங்கல்யம் கிட்டும் என்றார்கள் !
உன் நாமமே ஜெயம் என்று சுவாசித்துக் கொண்டிருப்பதை !
எப்படி சொல்வேன் இந்த உலகிற்கு.!
மண ஆசை இல்லை - பிற ஆண்கள் !
பிடிக்கவில்லை.!
மன ஆசை உண்டு - அதில்!
உனக்கு மட்டுமே இடம் உண்டு. !
உன் மாற்றத்தால் வருந்தி வாடும் !
என் மனதின் நோயால் !
உடலில் பசலை படர்ந்திருப்பதை !
உணராமலா இருக்கிறாய்?!
ஒரே ஒரு முறை காதல் கண் கொண்டு பார்க்கமாட்டாயா !
ஏழு ஜென்மங்கள் வாழ்ந்து காட்டுவேன் உனக்காக.!
விண்ணில் பறந்தாலும் !
மண்ணில் புதைந்தாலும் !
என் ஜீவன் உன்னை மட்டுமே தேடும். !
என்னவனின் கூர்மை விழிகளே !
என் காதலை அவன் இதயத்திடம் சொன்னால் என்ன? !
சிந்தைகளை களவாடிய என் !
ஜீவனே, தேற்றுவாயா என்னை உன் காதல் மருத்துவத்தால்
அணு