தாமிரபரணி ஆற்றில்!
குளித்து எழும்போதெல்லாம்!
என் மீது!
யாரோ!
தங்க முலாம் பூசிவிட்டது!
போன்ற ஒரு பிரமை.!
அந்த சிந்து பூந்துரையில்!
எதிர்க்கரையில்!
படித்துறையை பார்க்கும்போது!
அங்கெ புதுமைப்பித்தன்!
வேப்பங்குச்சியில்!
பல் துலக்கிக்கொண்டிருப்பதாய்!
ஒரு பிம்பம்!
நிழலாடுவது உண்டு.!
அந்த கயிற்றரவு!
என் காலைச்சுற்றிக்கொண்டது!
தண்ணீர்ப்பாம்பை போல்.!
உயிர்க்கயிறு !
உடல்திரித்தது தான்.!
உள்ளே உள்ளம் மட்டும் !
எதையும் தொடாமல் !
எப்படி திரிந்தது?.!
அதனுள் உடைந்த !
கண்ணாடி வளயல்துண்டுகள்!
கலைடோஸ்கோப்பாய்!
வண்ணாத்திப்பூச்சிகளை பறக்கவைத்தன.!
ஏதோ ஒரு தெரு முனையில்!
ஏதோ ஒரு முகத்தைப் பார்த்தது!
மல்லிகைப் பூ போல்!
மணம் கசிந்து கொண்டிருக்கிறது.!
அது எந்த முகம்?!
துணிக்கடை வாசலில்!
விளம்பரத்துக்காக!
ஒரு முகத்தை !
கண்ணின்றி மூக்கின்றி வாயின்றி!
மொழுக்கென்றுவைத்திருப்பார்களே!
அந்த மூளிமுகமா?!
கயிற்றுப்பாம்புகள்!
கனவுகள் தோறும் கொத்திப்பிடுங்கின.!
மரணபயத்தின் இனிமையான!
மறுபக்கம்!
காதல் சிதையில் எரிந்துகொண்டே!
இனிப்பை தீயின் பிம்பம் ஆக்குகிறது.!
வயதுகள் நீண்டு நீண்டு !
ஒரு கயிறாகி இறுக்கும்போதும் !
அது கயிறா பாம்பா இல்லை !
அவள் நினைவின் மின்னல் கொடியா?எனக்குள் பிம்பங்கள்!
உதடு பிதுக்கிக்கொண்டன.!
புதுமைப்பித்தன் அந்த ஆற்றங்கரையில் பனங்குட்டியின் ஓலை சலசலப்புகளில் கேலியாக சிரிக்கிறார்.!
கயிறு..பாம்பு எது ஆத்மா!
என்ற கபிலமுனிவனின்!
சாங்கியதத்துவம் காதலுக்குள் எப்படி குடை சாய்ந்தது?!
வேதங்களின் அப்பென்டிக்ஸ் !
எனும் குடல் வால் உபநிஷத்துகள் ப்ரச்னோபநிஷத்தில்!
இந்த பிரபஞ்சமே !
ஒரு ப்ரக்ஞை என்கிறது.!
பிறக்க நினைத்த ப்ரக்ஞை பிறக்கிறது.!
இறப்பின் சந்திப்பில் !
இன்னொரு பிறப்பின் ப்ரக்ஞை!
கடைசிச் சொட்டு செல்லில் டி.என்.ஏ,ஆர்.என்.ஏ க்களின் !
பிம்ப பிஞ்சுகளின் பிரளயம் ஆகின.!
முறுகிய !
இத்தீ வாசனையில்...!
இன்னும் அவள் முறுவல்கள்.!
பிம்பங்கள் !
பிசைந்து கொண்டேயிருக்கின்றன.!
இன்னும் இன்னும் !
பிறப்புகளாய் இறப்புகளாய்.!
சிந்துபூந்துறையில்!
அந்த தாமிரபரணி ஆறு!
புதுமைப்பித்தனின்...ஓர்!
பளிங்கு பிம்பம்,!
!
-அமானுஷ்யபுத்ரன்

அமானுஷ்ய புத்ரன்