கல்லாகிப் போன கவிஞன் - அல் அமீனுல் தஸ்னீன்

Photo by Jan Huber on Unsplash

உயிருள்ள அரூபம் !
நீண்ட எதிர்பார்ப்பின் தாகத்தை !
உணர்வெங்கும் மழையாக்கி!
இரவுகளில் குடை பிடிக்க!
கண்களை நோக்க சக்தியற்ற மனதிடம் !
யுத்தமின்றி சரணடைகையில் !
தேம்பியழுகிறது அனாதையாய் !
ஒற்றை முத்தம்.!
குற்றுக்கோலமெங்கும் பதிலற்ற ம் இட்டு !
கைசேதப்பட்டவனிடம் ஏந்தப்படுகிறது!
கைவேண்டி ஓர் வரம்.!
அழுகையை அரவணைக்க !
அன்பை மொழியாக்க !
கல்லாகிப் போன கவிஞனை !
மீண்டும் செதுக்குகையில்!
கவனம் !
உளிகளிலொட்டும் மென்னீரம்!
யார் மீதும் தெறிக்கப் படாதிருக்கட்டும்.!
அல் அமீனுல் தஸ்னீன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.