முகவரி - அகில்

Photo by Tengyart on Unsplash

மனிதா !
நீ வாழும் போது உனகென்றொரு !
முகவரி தேடிக்கொள் !
வாழ்ந்தோம் மடிந்தோம் என்று !
இல்லாமல் !
மனிதா !
நீ வாழும்போதே உனக்கென்று ஒரு !
முகவரி தேடிக்கொள் !
நீ வாழும் காலம் மட்டுமல்ல !
இனிவரும் காலமும் !
உனது பெயர் !
உச்சரிக்கப்பட வேண்டும் என்றால் !
உனக்கென்று ஒரு !
முகவரி தேடிக்கொள் !
முகவரியில்லாத மனிதன் - நல்ல !
அவயங்கள் இருந்தும் ஊனமானவனே! !
கம்பனுக்கு இராமாயணம் !
கவிபாரதிக்கு குயில் பாட்டு !
வள்ளுவனுக்கு திருக்குறள் !
இளங்கோவுக்கு சிலப்பதிகாரம் !
இரவிவர்மனுக்கு ஒவியம் !
சேக்ஸ்பியருக்கு நாடகங்கள் !
சாண்டில்யனுக்கு நாவல்கள் !
மனிதா !
நீ வாழும் போது உனக்கென்று ஒரு !
முகவரி தேடிக்கொள் !
மானிடப் பிறவி நீ - இந்த !
மண்ணுலகிற்கு என்ன செய்தாய் !
உனக்கு ஒரு முகவரி தேடு !
உன் வாழ்விற்கு அர்த்தம் கொடு !
பட்டை தீட்டினால் மட்டுமே - கல் !
பளபளக்கும் இரத்தினமாகும். !
உலக அனுபவம் கொண்டு !
உன்னை நீயே புடம்போடு !
புது உலகம் சமை !
மண்ணை விட்டு நீ மறைந்தாலும் !
மனங்களில் அழியா இடம் பெற !
உனக்கென்று ஒரு !
முகவரி தேடிக்கொள் !
மனிதா !
நீ வாழும் போதே உனகென்று ஒரு !
முகவரி தேடிக்கொள்
அகில்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.