விடலைப் பருவத்தின் !
ஆரம்ப படிகள்!
வித விதமாய் !
விரிகின்ற கனவுகள்....!
விழிகளைப் பார்த்தால் !
புரிந்திடும் நொடியில்....!
கால்களுக்கு ஓய்வில்லை!
ஓட்டமும் துள்ளலும்....!
நடையென்பதே இல்லை....!
நொடிக்கொரு தரம் !
மின்னலாய் மறையும்!
சின்னஞ் சிறுவனின் குணம்...!
பேச்சுகளும் வசவுகளும்!
இதனால்...!
சிறுக சிறுக!
சேமித்த சேமிப்பை!
அள்ளி எடுத்து!
சைக்கிள் வாங்கினான்!
சிறுவன்... ஒருநாள்....!
இரண்டாம் தாரமாய்!
வாழ்க்கைப்படும் !
உலகில்...!
இரண்டாம் தரமாய்!
நண்பனானது !
பழைய சைக்கிள்....!
முகமெங்கும் !
சந்தோஷத்தின் !
பிரதிபலிப்பு...!
ஓட்டமும் குறைந்தது...!
துள்ளலும் அடங்கியது...!
பறத்தல் ஆரம்பமானது...!
நாள்தோரும் !
சைக்கிளோடு உறவு...!
அன்போடு தடவுதல்...!
தினம் தினம்!
அலங்காரம்...!
பழையதை அழகூட்ட!
பல விதங்களில் முயற்சி...!
வளைசல்களை நேராக்கி!
நொடிசல்களை சீராக்கி!
சைக்கிளுக்கு!
ஒரு பூட்டு....!
கைக்காசை சேமித்து!
சைக்கிளுக்கு அலங்காரம்!
கடைகளுக்கு செல்ல!
அலாதி பிரியம்....!
சைக்கிளில் பறக்க!
வாய்ப்புகள் அதிகம்...!
வேலைகள் சுறு சுறுப்பாய் !
நடக்க...!
துடுக்குத்தனமும்!
பொல்லா குணமும்!
படிப் படியாய்!
குறைகிறது...!
சைக்கிளின் மேல்!
சிறுவனுக்கு உள்ள !
காதலினால்
ஆஷிகா கொழும்பு