தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

இருக்கட்டும்.. எழுது உன்

செல்வராஜ் ஜெகதீசன் - அபுதாபி
கவிதையை.!
01.!
இருக்கட்டும் எதற்கும்...!!
----------------------------------!
பத்தாண்டுகளுக்கு முன்!
நான் அனுப்பிய!
கடிதமொன்றை!
பத்திரமாய்!
வைத்திருந்து!
பிரதியொன்றை!
எனக்கின்று!
அனுப்பித்தந்த!
நண்பனின்!
அன்பைப்போல!
இருக்கட்டும் எதற்கும்!
என்று!
இதுபோல் இன்னும்!
எத்தனையோ!
நம்!
எல்லோரிடமும்.!
!
02.!
எழுது உன் கவிதையை...!!
---------------------------------!
வேறு எதற்காக!
இல்லையென்றாலும்!
இடம் மாறி!
இடம் மாறி!
இப்போது!
நீ இருக்கும்!
இடத்தை!
யாவருக்கும்!
அறிவிக்கவாவது!
ஏதாவதொரு!
இணைய தளத்தில்!
எழுதேன் உன் கவிதையை!
புனைப்பெயர் எதுவுமின்றி.!
புலம் பெயர்ந்த உன் வாழ்வுபற்றி.!
!
-செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

புரட்டியபோது

லலிதாசுந்தர்
இளவயது அரட்டை!
வண்ணத்துபூச்சிகளாய் மாணவிகளின்!
கேட்வாக்!
விடுமுறையில்கூட வகுப்புகளுக்காக!
ஏங்கிய மனம்!
மருந்தாய் கசந்த அறிவுரை!
கல்லூரி கேண்டின்களில் அரங்கேறிய!
பாக்கெட்மனி!
கவலையை மறக்கடித்த நண்பர்கள்!
சிறகில்லாமல் உலகைச்சுற்றிய!
சந்தோஷம்..................!
நனைந்தன பக்கங்கள்!
கண்களில் கண்ணீர்!
நெஞ்சை கிழித்துச்சென்றது!
நினைவுகள்!
என் ட்டோகிராப் புத்தகத்தை!
புரட்டியபோது.......!
- லலிதாசுந்தர்

இடரும் தருணங்கள்

அவதானி கஜன்
by :- அவதானி கஜன் !
!
விட்டு விட்டு வெளித்தெரியும் வேண்டாத முகம் !
விளைவிற்கான காரண நிகழ்வுகளால் !
சுயத்தைக் கொல்லும் நினைவுகள் !
அன்பாய் தெரிந்தவனும் மனதில் தள்ளி நிற்க !
உள்ள அலைச்சலில் சவமாகி !
தொல்லியின் உறைவிடமாய் !
இடரும் தருணங்கள்

மின்னலாய் ஒரு

நிர்வாணி
அவள் விழிகளோடு என் விழிகள் கலந்து!
வார்த்தைகளோடு வார்த்தைகள் கலந்து!
இன்னும் இன்னும் நெருங்கி!
எனக்குள் அவளையும்!
அவளுக்குள் என்னையும்!
தேட முற்பட்டு!
இருவருமே தோல்வியைத் தழுவி!
விவாகரத்துக்காய் காத்திருக்கிறோம்!
இடையில்!
ஏதோ மின்னலாய் ஒரு வாழ்க்கை!
ஊரறிய மேள தாளம்!
வீடு வீடாய் போசனம்!
புதுத்தம்பதியை அயல் பார்த்து!
மெலிதான புன்னகை சிந்தி!
சுமைகளே இல்லாமல் வாழ்க்கையை!
வாழ்ந்து பார்த்தோம்!
எல்லாம் மறந்து போகட்டும்!
மீண்டும் அவளைக் காதலிக்கவேண்டும்!
“கல்யாணம்“ என்ற வார்த்தையையும்!
சடங்கையும் மறந்துகொண்டு

இனப்படுகொலை எதிர்ப்பு

இரா.சதீஷ்மோகன்
ஒட்டு மொத்தத் தமிழர்களின்!
வேண்டுகோள்!
போர் நிறுத்தம்.!
போர் நிறுத்தம்.!
ஈழத்தமிழர்களுக்கெதிரான போரை நிறுத்த!
தமிழகமே உச்சகட்டத்தை!
எட்டிக்கொன்டிருக்கும்போது!
திருமங்கல இடைத் தேர்தல்!
அறிவிப்பு அரசியல் கச்சிகளின் தொடர்போராட்டமும்!
நின்று போயிவிட்டது.!
தேர்தல் முடியட்டும்!
பொங்கள் போகட்டும் என்ற!
அடுக்கடுக்கான ஒத்திவைபுக்கும்!
சிங்கல இராணுவம் ஒவ்வொரு நகரையும்!
தமிழர்கள் வாழும் பகுதிகளை சல்லடையாக!
குண்டு மழையால் துளைத்தன!
பொறுமையாக இருங்கள் என்ற அரசியல் தலைவர்களின்!
அறிவிப்பு ஈழத்தமிழர்களுக்கு என்ன தலை வலியா?!
பொறுத்துக்கொள்ள குண்டு மழையல்லவா பொழிகிறது!
ஈழத்தமிழர்களின்!
இனப்படு கொலைக்கு எதிர்ப்பு!
தெரிவிக்கும் முகமாக!
தமிழர்களின் பல்வேறு துறையினர்களின்!
தொடர்போராட்டமும்!
தமிழக பள்ளி கல்லூரி!
பல்கலைக்கழக மாணவர்களின்!
தொடர் போராட்டமும் வலுக்கிறது!
முத்துக்குமார் தீக்குளித்து உயிர் நீத்து!
தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியும்!
மாநில மத்திய அரசின் மெத்தனத்தன்மை!
செவிடன் காதுகளில் சங்கூதியது போலாகிவிட்டது!
இனியாரிடம் சென்று முறையிட?!
!
-இரா.சதீஷ்மோகன்!
மணியம்பட்டி!
சிவகாசி(தாலுகா) விருதுநகர்!
மாவட்டம் தமிழ் நாடு

கலை.. ( வங்காள கவிதை)

அசோக் தீப்
சிற்பி வரவால்!
சிதைந்தது கல் !!
சுருண்டு விழுந்த இரவின் ஆழத்தில் !
உளியின் சப்தம் !
சுத்தியலின் முணுமுணுப்பு!
திணறும் சுவாசம் ததும்பிய இரவின் !
விடியல் முதல் வெளிச்சத்தில்!
அறையிலிருந்து !
இரண்டு சிலைகள்! !

வங்காள மூலம்: அசோக் தீப்!
ஆங்கில மூலம்: சுபாசிஸ் தலபாத்ரா!
தமிழில்: எல் பி. சாமி

மீள்பிரசவம்

துரை. மணிகண்டன்
கண்ணில் கண்ட காட்சி!
கடைக்கோடி மக்களையும்!
புரட்டிப்போட்டது கவலையுடன்!
இயற்கை ஆதி ரேகையை இழந்துவிட்டுத் தவித்தது!
குழந்தையைக் காணாத தாய்போல!
விஞ்ஞான விபரீத விபத்தில்!
தற்கோலை செய்துகோண்டது மண்!
தன்னை மறந்த நிலையில்!
மக்கள் கூட்டம் கழுவேறியது!
மனிதனைச் சலவை செய்ய!
இறைவன் கீழே வந்தான்!
அறிவு ரத்தத்தைப் பாய்ச்சி!
அகிலத்தை மீள்பிரசவம் செய்ய.......!
!
-துரை. மணிகண்டன்

வண்ணத்துப்பூச்சிகளை

எம்.ரிஷான் ஷெரீப்
வண்ணத்துப்பூச்சிகளைச் சூடிக்கொண்டவள் !
---------------------------------------------------!
அவன் தன்!
வேட்டைப்பற்களை மறைக்க!
தேவதூதனையொத்தவொரு!
அழகிய முகமூடியைத் தன்!
அரக்க முகத்தில் மாட்டிக்கொண்ட!
பின்னரான பொழுதொன்றில்தான்!
அவள் அவனைப் பார்த்தாளெனினும்!
ஒரு செங்கழுகின் சூட்சுமத் தேடலையும்!
அவனது விஷப்பார்வையை அறிந்திட்டாளில்லை !
அக்கழுகு!
அழகிய பெண்களின் மாமிசப்பட்சி!
அவர்தம் வாழ்வினைக் கொழுவி!
உயிர் எஞ்சத் துண்டுகளாய்!
வெட்டியெடுத்துச் சப்பிச் சிரிக்கும்!
கோரங்களைக் கொண்டவை அதனது நாட்கள் !
அவள்!
செந்தாமரை மலரொத்தவொரு!
தேவதைக்குப் பிறந்தவள்!
ஏழ்மையெனும் சேற்றுக்குள்!
வனப்பு நிறைக்க மலர்ந்தவள்!
அன்பைத்தவிர்த்து ஏதொன்றும் அறியா!
அப்பாவிப்பெண்ணக் கழுகின்!
கூர்விழிகளுக்குள் விழுந்தவள் !
சுவனக் கன்னியையொத்த!
தூய்மையைக் கொண்டவளின்!
கவனம் பிசகிய கணமொன்றிலவன்!
கவரும் இரையுடனெறிந்த காதல் தூண்டிலின் முள்!
மென்தொண்டையில் இலகுவாக இறங்கிற்று!
என்றுமே உணர்ந்திராதவொரு!
விபரீதக் குருதிச்சுவையை நா உணர்ந்திற்று !
நேசத்தினைச் சொல்லிச் சொல்லி!
அவளது சதைகளை அவ்விஷப்பட்சி!
தின்றரித்து முடிந்தவேளையில்!
வாழ்வில் காணாவொரு துயரத்தை!
அவள் கண்கள் விடாதுசொரிந்திட!
எந்நாள்பொழுதும் தீராப்பசியோடவன்!
வேறொரு அழகியை ஈர்க்கச் சென்றான்!
இயல்பை மறந்த நாட்கள் தொடர்ந்து வர!
அவளது தேவதைப்பாடல்கள் சோரலாயின !
ஆழி நடுவிலொரு ஒற்றைப்படகிலமர்ந்து!
சூழ்ந்த தனிமைக்கும் துயருக்கும்!
மீளப்பெறமுடியா இழப்புக்குமாக!
வசந்தகாலத்து வனங்களின்!
வண்ணத்துப்பூச்சிகளைத் தன்!
அரணாக அவள் சூடிக் கொண்டாள்!
இன்று!
மீட்டமுடியாக் காலத்தின் வினைகளைத்!
தம் இச்சையால் உணர்ந்த பல திமிங்கிலங்கள்!
இடையறாது படகை!
வட்டமிட்டுக் கொண்டேயிருக்கின்றன

ஏவலர்கள்.. அடிமை நாச்சியார்

வி. பிச்சுமணி
ஏவலர்கள் எஜமானர்களாய்.. அடிமை நாச்சியார்!
01.!
ஏவலர்கள் எஜமானர்களாய்!
---------------------------------------------------!
நாம் வடிதத கடவுள் சிலைதான்!
இருந்தபோதிலும்!
எட்டி நின்றுதான் தொழ வேண்டியுள்ளது!
நாம் விதைத்து அறுத்த நெல்தான்!
இருந்தபோதிலும்!
நமது பிள்ளைகளின் பசியை போக்குவதில்லை!
நமது வரிபணத்தில் வாழும் அலுவலர்கள்!
இருந்த போதிலும் !
பணிந்து முன் நிற்க வேண்டியுள்ளது.!
நாம் வாக்களித்து வாகைசூடிய தலைவர்கள்!
இருந்தபோதிலும்!
நெருங்க முடியாத தூரத்தில் இருக்கிறார்கள்!
நாம் இயற்கையில் மனிதாக பிறந்துவிட்டோம்!
இருந்த போதிலும்!
நமக்கு முதுகெலும்பு இருப்பதை மறந்துவிட்டோம்!
02.!
அடிமை நாச்சியார்!
-------------------------------!
அம்மாவோடு மாமாவின் கிராமத்திற்கு!
செல்லும் போது எல்லாம் உடனே!
எதிர்வீட்டு நண்பனை தேடி ஓடுவேன்!
வீட்டு முடுக்கில் முன்னங்கால்கள்!
கட்டப்பட்ட கழுதைகளை!
தாண்டி செல்ல தயங்கும் போது!
அய்யம்மாவின் குரல்!
வாங்க நாய்னா நாச்சியார் வந்திருக்காங்களா எனும்!
அம்மா வந்திருக்கா என பதில் அளிக்கும் என் குரல்!
வேலு கழுதையை பொதியுடன் ஆற்றுக்கு பத்தி செல்ல!
அவனுடனும் கால்கட்டு எடுத்து கழுதையுடனும்!
நடந்து செல்கையில் வழியில் உள்ள வயலில்!
சோளகதிர் உடைத்து கஞ்சிக்கு அவன் கொண்டு வந்த!
உப்பை போட்டு சோளம் அவித்து!
சாப்பிட்ட காலம் நெஞ்சில்!
இப்பொழுது செல்லும் போது வேலு இல்லை!
அய்யம்மா நய்னா எப்பவந்தீங்க என தளர்நத குரலில் கேட்க!
நய்னா நாச்சியார் அர்த்தம் புரிந்து தெளிந்து!
அடிமைப்படுத்தும் அந்த வார்த்தைகளை!
நான் முழுங்கி நாளாகிவிட்டதால்!
நீங்க நல்லாயிருக்கீங்களா!
வேலு என்ன செய்கிறார் என கேட்க!
வித்தியாசம் ஏதும் தெரியாது காட்டாது!
நய்னாவுக்கு எத்தனை பிள்ளைங்க!
என குசலம் விசாரித்தார் அந்த அம்மா

நான் செத்து நான்

முஷாரப் முதுநபீன்
தனிமையின் தவாளிப்புகளுள்!
என் உணர்வுகள் ஒதுங்கிக் கொண்ட போது........!
நெல் மணிகள் !
எனைத்தூக்கி சொருகிக் கொள்கின்றன..!
எந்திர வலிமை !
என் வலிகளுக்கு வெளிச்சமாய்....!
அசதியாய்...!
மிக மிக அசதியாய் இருக்கிறது...!
அம்புகள் ஓரணியில் நின்று !
புள்ளியை பொத்தலாக்கிய!
நோவின் அந்தத்தில் கூட!
சகிப்புத்தனமை தீபமாய் ஒளிர்கிறது.!
இருந்காலும் குறி தவறிய!
அம்புகள் சில!
என் குரல்வளையை !
குத்தி காயப்படுத்துகிறது...!
ஓ..வென்று அழத்தோணுகிறது.!
அழுகிறேன்..விழுகிறேன்...!
விழுந்து விழுந்து அழுகிறேன்...!
ஒரு கண்ணீர்த்துளியின்!
மரணத்திற்கும் இன்னொரு!
கண்ணீர்த்துளியின்!
ஜனனத்திற்கும் இடையில்!
உயிர் சிக்கித் தவிக்கிறது...!
பெற்றோலுக்குள்ளும் !
குப்பி விளக்கினுள்ளும் மாறி மாறி!
உட்கார்ந்து விடுகிறேன்!
கையில் தீக்குச்சியோடு..!
ஏனோ தெரியாது!
யாரும் தீப்பெட்டி தருவதாயில்லை.!
இரண்டாம் முறையாய்!
தாயின் கருப்பைக்குள்!
தங்கி விடுகிறேன்!
இல்லை இல்லை..!
தொங்கி விடுகிறேன்.!
மீண்டும் பிறக்கிறேன்.!
மழழையாக அல்ல..!
இப்பிறவியில் எனக்கு!
உங்கள் நெருப்பெட்டி தேவையில்லை..!
இப்பிறவியில் நான்!
பெற்றோலுக்குள்ளோ..!
குப்பி விளக்கினுள்ளோ அல்லாமல்!
சூரியனில் உட்கார்ந்துள்ளேன்