தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

கறுப்பு யூலை

த.சரீஷ்
உரிமையின் பரிசாகக் கிடைத்த!
கறுப்பு யூலை...!!
மரணங்கள் மலிந்தமண்ணில்!
உடலங்கள் எரிந்துபோக!
அவலங்கள் நிறைந்தவாழ்வாய்!
தினம்தினம்...!
தொடர்கிறது கறுப்பு யூலை!
புதைகுழி வயல்கள் நீண்டுசெல்ல...!
துயரங்கள் சுமந்துகொண்டு!
தொடரும் காயங்களுக்கு நடுவில்!
நாளைய பொழுதின்!
விடிவுக்காக ஏங்கும்!
ஒரு இனமாகத்தான் இன்றும் தமிழ்...!!
நீதி!
என்றைக்கோ செத்துப்போனது!
மனிதனேயம்!
எப்போதோ தொலைந்துபோனது!
அன்றில் இருந்து...!
நியாயத்தின் அர்த்தம்!
என்னவென்றே தெரியாத ஆட்சியில்!
இன்றுவரை...!
தொடர்கிறது கறுப்பு யூலை!
தொப்புள்கொடி உறவுகளின்!
தலைகள் அறுபட்டு!
உடல்வேறு தலைவேறாய்!
தூக்கி எறியப்படும்!
பிஞ்சுகளின் உடலங்களில்!
தோட்டாக்களால்...!
துளைகள் இடப்பட்டு!
தூக்கில் இடப்படும்!
தாய்குலத்தின்!
உயிரிலும் மேலான கற்ப்பு!
களவாடப்பட்டு உடல்மட்டும்!
வீதியில் வீசப்பட்டிருக்கும்!
மரணங்கள் மலிந்தமண்ணில்!
உடலங்கள் எரிந்துபோக!
அவலங்கள் நிறைந்தவாழ்வாய்!
தினம்தினம்...!
தொடர்கிறது கறுப்பு யூலை!
அமைதியின் பரிசாக மரணம்!
அகிம்சையின் பரிசாக மரணம்!
பொறுமையின் பரிசாக மரணம்!
உரிமையின் பரிசாக்கூட மரணம்!
தவறேதும் இல்லாத!
தண்டணைகளாக...!
மனிதப்புதைகுழிகள்!
வங்காலைத் துயரங்கள்!
அல்லைப்பிட்டி அவலங்கள்!
இன்னும் சொல்லமுடியாத சோகங்களாய்!
இன்றும் தொடர்கிறது கறுப்பு யூலை!
வாழ்க்கைபற்றி!
எதுவுமே அறியாத பிஞ்சு!
வாழவென்று...!
நேற்றுப்பிறந்து இன்று மடிந்துபோகும்!
எதிர்காலக் கனவுகளோடு!
எங்களின் நாளைய தலைவர்கள்!
இன்றைய சிறுவர்களாய்!
பலியாகிப்போவார்!
பத்தோடு பதினொன்றாய்...!!
வாழ்வதற்கு ஏங்குகின்ற!
ஒரு இனம்!
கலையும் பண்பாடும்!
மிகநீண்ட வரலாறும்!
சொந்தமாகக்கொண்ட ஓர் இனம்!
சர்வாதிகார அரசின் இரும்புக்கரங்களால்!
நசுக்கப்பட்டு...!
பூவும் பிஞ்சுகளுமாய்!
தாயும் குஞ்சுகளுமாய்!
இன்றும் தொடர்கிறது கறுப்பு யூலை!
புதைகுழி வயல்கள் நீண்டுசெல்ல...!
துயரங்கள் சுமந்துகொண்டு!
தொடரும் காயங்களுக்கு நடுவில்!
நாளைய பொழுதின்!
விடிவுக்காக ஏங்கும்!
ஒரு இனமாகத்தான்!
இன்றும் நாங்கள்...!!
இருப்பினும்...!
எவராலும் அழிக்கமுடியாத இனமாய்!
பல்லாயிரக்கணக்கில்!
வேர் ஊண்றி விழுதெறிந்து!
பாரெங்கும் பரவியிருக்கிறோம்...!!
காயம்பட்டு...!
இரத்தக்கறைபடிந்த!
எங்கள் உறவுகளின்!
கன்னத்தைத்துடைத்து அணைத்திடவே!
நாங்கள் இங்கு இருக்கிறோம்...!!
பாசங்கள் அறுபட்டு!
எங்கேயோ தொலைந்துபோன!
உறவுகள் அல்ல நாங்கள்...!!
தொலைவினில் இருந்தாலும்!
தொப்புள்கொடி அறுபடாத!
குழந்தைகளாய்த்தான் நாங்கள்!
இங்கு இருக்கிறோம்.!
அதனால்த்தான்...!
அல்லைப்பிட்டியில் அடிபட்டால்;!
ஐரோப்பாவில் வலிக்கிறது...!!!!
இந்த...!
தொப்புள்கொடி உறவு இன்னும் நீழும்!
அகலங்கள் இன்னும் விரியும்!
இன்றைய!
மரணத்தின்வாழ்வு மறையும்வரை!
நாளை...!
கறுப்பு யூலை மரணங்கள் முடியும்வரை

இதுவும் விபச்சாரமே

சித. அருணாசலம்
ஆன்மீகத்தைக் கையிலெடுத்து!
அனைவரையும் தன்பின்னால்!
அணிவகுக்கச் செய்து,!
காவி உடையின் மகத்துவத்தில்,!
களங்கமாய்க் கறை சேர்த்து!
முற்றும் துறந்த வேடத்தில்,!
எங்கே திறந்தார் !
என்று ஏளனம் பேசுமளவு!
நம்பிக்கையைத் தகர்த்த !
நயவஞ்சகம் விபச்சாரம் என்றால்,!
அந்த அந்தரங்க அசிங்கத்தை!
விலைபோட்டு இணையத்தளத்தில்!
வியாபாரம் செய்து,!
நீலப் படத்தை விடக் கேவலத்தால்,!
நிறையவே பணத்தை!
முதலில்லாமல் முழுவதும் சேர்த்து,!
மஞ்சளைப் பூசிக் கொண்டதால்,!
நெற்றிக் கண்ணைக் காட்டுகிற போதும்,!
குற்றம் குற்றமே!!
புரிந்த செயல்!
முற்றிலும் விபச்சாரமே

இல்லம்

பனசை நடராஜன், சிங்கப்பூர்
அப்பா சூரியனுக்கு !
அன்றாடம் இரவு வேலை! !
எப்போது போவாரென்று !
இரவு வரக் காத்திருந்து !
ஆகாயப் புல்வெளியில் !
அம்மா நிலாவையும் !
அழைத்து வந்து விளையாடும் !
நட்சத்திரப் பிள்ளைகள்! !
விரைந்தோடும் நிலவைச்சுற்றி !
'வெள்ளைவட்டம்' போடுவதும் !
மறைந்து கொண்டும் !
காற்றுக் கையால் !
திறந்து முகம் மூடுவதுமாய் !
கருப்புமேகப் போர்வைக்குள் !
கண்ணாமூச்சி ஆட்டம்! !
அதிகாலை வேலை முடிந்து !
அப்பா சூரியன் திரும்பி வர !
ஒளியிழந்து நிலவுத்தாய் !
ஒடுங்கி நிற்க... !
துள்ளாட்டம் போட்ட விண்மீன்கள் !
துளிர்த்த வியர்வைப் 'பனித்துளியை' !
துடைத்தெறிந்து விட்டு !
அப்பா அடிப்பாரெனத் !
தப்பியோடி மறைகிறதோ! !
!
ஏவுகணை வீச்சால் - கூரை !
இடிந்த வீட்டில் பெற்றோர் !
வருந்தியிருக்க...... !
வானை வியந்து ரசிக்கிறது... !
குழந்தை! !
- பனசை நடராஜன், சிங்கப்பூர்

வலி தந்த மணித்துளிகள்

சாமிசுரேஸ்
தொடரூந்து நிலையம்!
பெயர்ப்பலகை மாறுகிறது!
காத்திருக்கிறேன்!
கால்களின் கீழே சலசலத்தோடுகிறது நதி!
நதியின் பெருக்கைத் தின்னாமல்!
முக்கியங்களைத் தொலைத்து!
மூலைக்குள் மனிதர்கள்!
விடியலின் மரணத்துளிகளை விழுங்கிக்கொண்டிருக்கும்!
இந்த சர்ப்பங்கள்!
சில நொடிகளில் தூய்மையை இழக்கும்.!
இருத்தலில் இல்லாத பொருளை!
கனவுகளுக்குள் திணித்து!
முடமாய் அலையவிடுவதில்!
சுகம் காணும் வேலிகள் இவை.!
தேடலில்லாத உலகம்!
சுற்றளவுகளில் வலிக்கறது!
நீண்ட கணப்பொழுதுகளில்!
பார்வைகளின் முள் அதிர்வுகள்!
மௌனமாய் எரியும்!
சில மணித்துளிகளை அலையவிட்டு!
கால்களை நிலையாய்ச் சொருகி!
பூஜ்ஜியமாய் முடங்குகிறது காலம்!
இந்தப் புதிய யுகம்!
உன் இருப்புகளை விழுங்கிவிடும்!
சந்தேகமில்லை!
எதிர்கொள் மரணம் வருகிறது!
ஒவ்வொரு முகங்களிலும்!
வெவ்வேறு நிறங்களைப் பூசிக்கொண்டலைகிறது உடல்.!
காத்திருக்கிறேன்!
பெயர்ப்பலகை மாறிக்கொண்டிருக்கிறது!
எனைச் சுட்டுப்பொசுக்கியபின்!
நடுங்கியபடி அலைகிறது காற்று.!
எனக்கெதிரே!
உணர்வுகளின் வேற்றுமை வெளிப்பாடுகள்!
ஒவ்வொன்றாய் தொங்கியபடி சுற்றின.!
நான் வெட்கித் தலைகுனிகிறேன்.!
ஆற்றுப்படுகையில்லா மைதானமாய்!
அழுகித் தொலைகிறது இன்னொரு விதி.!
நேரம் மறைகிறது!
வழுக்கியோடிய அமைதியினூடே!
மறைந்துகொண்டிருக்கிறது நதி!
நெருப்புப் பூத்த மேனியனாய்!
என்னுள் இருந்த!
கடைசித்துளி சொற்களும் கரைய!
இதுவே என் இறுதிச் சொல்லாயிற்று

என் நம்பிக்கையும், உறங்கா இரவின் கனவுகளும்!

வித்யாசாகர்
ஒரு பேசிடாத இரவின்!
மௌனத்தில்!
அடங்கா உணர்வின்!
நெருப்பிற்கு மேலமர்ந்து!
எதற்கு சாட்சி சொல்லிட இந்தப் போராட்டமோ?!!!
மூடி இறுகும் கண்களின்!
இமை விலக்கி!
கடக்கும் பொழுதின் மடிப்புகளுள்!
கரையும் உயிரின் சொட்டொன்றில்!
விற்காத புத்தக அடுக்கின் பயத்தை!
மீண்டும் மீண்டும் எழுத்தாக்கி!
அதற்குள்ளேயே என்னையும் சேமிக்கிறேன்;!
பல்துலக்குகையில்!
பலர் தினமும் கேட்கும்!
செய்தியாக இல்லாவிட்டாலும்!
என்றோ -!
உறங்கச் செல்கையில் வாசித்துப் படுக்கும்!
யாரோ ஒருவரின் ஓரிரு பக்கம்தான்!
என் உறங்கா இரவுகளின்!
காரணப் புள்ளியென்று!
இந்த இரவின்!
இடை விலகா இருள் முழுதும்!
கொட்டையெழுத்தில் பதுக்கிவைக்கிறேன்;!
இருந்தும்,!
இரவிடம்!
சிபாரிசு கேட்காத மனப்போக்கில்!
காலத்திற்கான விடியலை!
தேடித்தேடி வார்த்தைகளுக்குள் சிக்கிக் கொண்ட!
அறிவாகவே -!
நிறைந்துக் கொள்கிறதுயென் முயற்சியும்!
நம்பிக்கையும்;!
தெருவின் தூசு பறக்கும்!
வண்டிப் புகையின்!
கரிந்த பெட்ரோல் வாசத்திற்கிடையே அமர்ந்து!
புத்தகம் விற்கும் ஒரு தாத்தாவின்!
அல்லது கேட்க நாதியற்ற பெண்ணின்!
வயிற்றீரம் துடைக்கும்!
இரண்டு இட்டிலிப் பொட்டலத்தின்!
விலையைக் கொடுக்க!
எத்தனை இரவினை!
தூக்கமின்றி கொல்லவும் துணிகிறது அந்த!
என் நம்பிக்கை;!
எனினும்,!
உலகம் உறங்கும்!
நிசப்த பொழுதை தகர்க்கும் கொல்லியாய்!
நகரும் பகலின் பொய்மையும் அநீதியும்!
படுக்கையில் முள்ளாய் குத்துகையில்!
மறுக்கப்படுகிறது - யென்!
கனவும் உறக்கமும் என்பதை!
என் எந்த வரிகளில் தேடினாலும் கிடைக்கும்;!
விளக்கெரிய வெளியில் வீசப்படும்!
தீக்குச்சி!
தன் எறிந்த மிச்சத்தில்!
உலக வெளிச்சத்தின்!
கனவினை சுமந்தே கிடக்கிறதென்னும்!
சாட்சியத்தின் கண்களாய் சேகரிக்கிறப் படுகிறது!
என் ஒவ்வொரு இரவும் - உன்!
ஒரேயொரு விடியலுக்காய்...!

புதுமை பெண்

சின்னு (சிவப்பிரகாசம்)
மின்னியல் ஒளி பெற்று!
பொன்வண்ணம் நாடிச் செல்லும்!
பெண்ணொன்றுகோபம் கொண்டு!
கண் வண்ணம் கரையும் மட்டும்!
கலங்கிய முகத்தை துடைத்து!
ஓங்கிய கோபம் ஆங்காரமாக!
தடுத்த தந்தையை ஒதுக்கி!
மாதவம் கொண்டு மகளைபெற்ற!
மங்கை நல்லாள் மனமும் நோக!
வேங்கை போல் வெளிச்சேன்றாள்!
பெண்ணவள் மனம் மகிழ!
பெற்றவர் செய்துவந்தார்!
கண்னவள் கருதியதெல்லாம்!
கடமையாய் செய்து வந்தார்!
வண்ண மயில் தோகை வேண்டும்!
வண்ணங்கள் கொண்ட கூந்தல்!
பெண்ணிவள் தோள்கள் புரள!
தன்கண்கள் இரண்டு கண்டு!
கயல்கள் என்று கொண்டு!
வயல் பறவை தின்று விட்டால்!!
அந்த கயல்கள் காத்து நிற்க!
கரும் கண்ணாடி அணிந்து கொள்வாள்!
கை கொண்ட விரல்கள் கொள்ள!
கலை கொண்ட மொழிகள் கற்று!
கவிதையாய் வளர்ந்து நின்றாள்!
பெண்கள் பேதை என்போர்!
பேதை போல் ஒதுங்கி நிற்பார்!
பெண்ணிவள் கண்டு விட்டாள்!
கல்வியில் குறை இல்லை!
கற்பதும் வெறுக்கவில்லை!
கல்லூரி கசக்குது என்றாள்!
பள்ளிகள் சொல்லவில்லை!
படித்தோர் அறிந்தது இல்லை!
ஆண் பெண் பேசிக்கொண்டால்!
பிழை என்று கொள்ளச் சொல்லி!
பெற்றவர் சொல்லி நின்றார்!
கண்டிப்பு தேவை என்றே!
அங்கு!
ஆடவர் தொல்லை இல்லை!
பெண்ணிடம் பேசினாலே - அவர்க்கு!
படிப்பு இல்லை!
கண்ணே நீ அங்கு படித்தால்!
எமக்கு பயமும் இல்லை!
உன் நிலை எண்ணி நாங்கள்!
யோசிக்க தேவை இல்லை!
கண்டிக்க குழந்தை அல்ல!
கண்டிப்பாய் சொல்லி விட்டாள்!
மனிதர்களை தினம் பார்த்தும்!
மனதுகளை நம்பாமல்!
பேசுவது குற்றம் என்றால்!
பெண்ணுக்கும் ஆணுக்கும்!
தனித்தனி உலகுபடைத்து!
தனித் தனியே வாழ்ந்திடலாம்!
வானை ஆராய!
பெண் செல்லும் உலகில்!
அருகு அமரும்!
மனிதனிடம் பேச!
தடை சொல்லும் கல்லூரி!
சிறை என்று சினந்தால்!
பாரதி கண்ட புதுமை பெண்

விளங்காநிலை

ஒளியவன்
தேடல்கள் சில!
தாண்டி வந்த!
இளவெயில்த் துண்டு!
புன்னகை புரிந்து!
நின்றது.!
அதன்!
எண்ணத்திலும்!
வண்ணத்திலும்!
ஈர்க்கப் பட்டவனாய்!
அதனைக் கைக்குள்!
அடைக்க முற்பட்டேன்.!
என்!
இடையறிவை!
இழிந்து கொண்டு!
அது என்!
புறங்கை மேலே!
புன்னகைத்தது மீண்டும்!
சுதந்திரமாய்

பார்வையாளன்

வேல் கண்ணன்
அரங்கம் சென்றேன்!
முதல் நபரும் முடிவான நபராகவும் நானிருந்தேன்.!
முதல் வரிசையில் நான்காவதாக அமர்ந்தேன்.!
எழுந்து!
ஏழாம் வரிசை சென்றமர்ந்தேன்.!
இருக்கை சப்தமிட்டது.!
உடன் எழுந்து!
பின்வரிசை சென்றமர்ந்தேன்.!
மேடையில்!
காட்சிகள் தோன்றி மறைந்தன.!
எனது இருக்கை தான் நிலைத்தபாடில்லை

முகப்பு.. குறிப்பு..வரைமுறை..நிழல்கள்

ப.மதியழகன்
01.!
முகப்பு!
----------!
கொஞ்சம் பொறுங்கள்!
மெல்ல முணுமுணுத்துக் கொள்ளுங்கள்!
உங்களது பிரார்த்தனையை!
வேறொருவர் கேட்டுவிடக் கூடும்!
திரும்பிப் பார்த்துக் கொண்டே!
செல்லுங்கள் உங்களை!
யாரேனும் பின்தொடரக் கூடும்!
எதையும் திருடாதீர்கள்!
உங்களிடமிருந்து அதே பொருள்!
களவாடப்படும்!
எதையும் உழைத்தே பெறுங்கள்!
வாழ்க்கை நகரும் படிக்கட்டல்ல!
அடுத்த அடியை நாம் தான்!
எடுத்து வைக்க வேண்டும்!
கூடியவரை உண்மை பேசுங்கள்!
வயதாக வயதாக!
பொய்களின் பாரத்தை!
தாங்க மாட்டீர்கள்!
உபதேசங்களை!
கண்ணை மூடிக்கொண்டு!
நம்பாதீர்கள்!
வாழ்க்கையே கடவுள்!
வாழ்ந்து பாருங்கள்.!
02.!
குறிப்பு!
------------!
அழகான மனைவி அமைந்தால்!
அவஸ்தை தான்!
அவளுடைய கைபேசியை!
சோதனை செய்யத் தோன்றும்!
தொலைக்காட்சியில்!
அவள் அஜித்தை பார்த்தால்!
சங்கடம் தோன்றும்!
இவ்வளவு அழகானவளை!
கல்லூரியில் காதலிக்காமலா!
விட்டிருப்பார்கள்!
என்று யோசிக்கத் தோன்றும்!
உங்களை டி.வி.யில்!
பார்த்திருக்கிறேனே என்று!
யாரேனும் அவளிடம் கேட்டால்!
எரிச்சல் தோன்றக் கூடும்!
பொது இடங்களுக்கு!
அவள் கூட செல்ல!
தயக்கம் தோன்றக் கூடும்!
கொடுத்து வைத்தவன் என!
அவன் காதுபடவே பேசினால்!
சொன்னவனை!
கொலை செய்யத் தோன்றும்!
பரிசுத்தமாக அவள் இருந்தாலும்!
மனம் சாக்கடையை நாடி ஓடும்.!
!
03.!
வரைமுறை!
----------------!
நீங்கள் தயங்கி நின்றால்!
உங்கள் திருவோட்டில்!
காலணா கூட விழாது!
நீங்கள் கூச்சம் கொண்டால்!
நான்கு பேருக்கு மத்தியில்!
உங்கள் தரப்பை வாதிட இயலாது!
நீஙகள் சந்தேகம் கொண்டால்!
மனைவியை சித்ரவதை செய்வது!
தீர்வாகாது!
நீங்கள் பேசாமல் நின்றால்!
உங்கள் தரப்பு வெற்றி பெறாது!
நீங்கள் வெட்கம் கொண்டால்!
அடுத்த அடி கூட எடுத்து!
வைக்க இயலாது!
நீங்கள் செல்லும் வழி!
சத்தியம் வெற்றிபெற வழிவகுக்காது!
நீங்கள் இரக்கம் கொண்டால்!
சுற்றியிருக்கும் மிருகங்களை!
வேட்டையாட இயலாது!
உங்களிடமுள்ள கருணையை!
தானமாக பெற்று!
உங்களை இறைவன் வீழ்த்தியது!
மறுபிறவியிலும் மறக்காது.!
04. !
நிழல்கள்!
-----------!
இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்,!
நாங்கள் உங்கள் அந்தரங்கத்தை!
ஆராயமாட்டோம்!
நீங்கள் எங்கள் படுக்கையறையை!
எட்டிப் பார்க்கக் கூடாது!
நாங்கள் உங்களை குறைவாக!
எடை போட மாட்டோம்!
நீங்கள் எங்கள் வாழ்க்கைப் பாதையில்!
குறுக்கிடக் கூடாது!
நாங்கள் உங்களிடம் பணத்துக்காக!
கையேந்த மாட்டோம்!
நீங்கள் எங்களை வார்த்தைகளால்!
உதாசீனப்படுத்தக் கூடாது!
நாங்கள் உங்கள் நடவடிக்கை மீது!
சந்தேகப்பட மாட்டோம்!
நீங்கள் எங்கள் பக்குவத்தை இயலாமை!
என எடுத்துக் கொள்ளக் கூடாது!
நாங்கள் உங்கள் அத்துமீறலை வேடிக்கை!
பார்க்க மாட்டோம்!
நீங்கள் அகலிகையை கெடுத்த!
இந்திரன் என்று தெரிந்தால்!
உலகம் உங்களை கழுவில்!
ஏற்றாமல் விடாது

மூன்றாவது இதயம்

நாச்சியாதீவு பர்வீன், இலங்கை
உன்னிடம் அடைக்கலமாக !
இருந்த எனது !
எனது இதயத்தை !
ஒரு அழுக்குப் பாறையில் !
கொழுவி விட்டு !
நீ ஒதுங்கிக் கொண்டாய் !
கறைபடிந்த உன் இதயத்தை !
கழுவிக் கொள்ள !
ஒரு மூன்றாவது !
இதயத்தையும் !
நீ தேடிக்கொண்டாய்..!
கால நெருக்குதலில் !
துவானமிழந்த !
மழைகளையும்.....!
ஈரலிப்பில்லா காற்றையும்..!
நீ வசமக்கினாய் !
இதயத்தின் வெற்று உருவத்தை !
சுமந்து பயணிக்கும் நீ !
உனக்குரிய குழியை நீயே!
தோண்டி அதற்குள் அமர்ந்து கொண்டாய் !
நடக்கவே முடியாத நீ !
பறக்க ஆசைப்பட்டாய்...!
உன் பறத்தல் பற்றிய !
ஆசைத்தீயில் அமிழ்ந்து !
அழுகின்றாய்..!
உனக்கு தெரியுமா..!
பொய்களும் வஞ்சனைகளும் !
என்றும் ஜெயிப்பதில்லை