தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நாளும் நாம்

ராமலக்ஷ்மி
நான் நாங்கள் தன்மையாம்!
நீ நீங்கள் முன்னிலையாம்!
அப்போ ‘நாம்’ என்னப்பா?!
தன்மை பன்மை வந்த பதிலில்!
திருப்தியற்ற குழந்தையின்!
தீராத குழப்பம் போலவே!
சுயநல விசையில் சுழலும் பூமியெங்கும்!
சுற்றியலைந்து!
தன்னைத் தானே தேடிக் கொண்டே!
இருக்கிறது நாளும்!
‘நாம்’.!

ஆய பயன்.. ஒரு அதிசயம்.. வாசிப்பு

என். விநாயக முருகன்
01.!
ஆய பயன்!
----------!
வாழைமரத்தின் பயன் பற்றிய!
கட்டுரையொன்றை!
எழுதி வரச்சொன்னேன்!
ஆறாம் வகுப்பு சிறுவனிடம்.!
அவன் ஏதோ தப்பாக!
புரிந்துக்கொண்டு!
மாமரம் பற்றி!
எழுதி எடுத்து வந்தான்.!
திட்ட மனமில்லாமல்!
மாம்பழமொன்றை பறித்து தின்று!
மதிப்பெண் போட்டேன்.!
!
02.!
ஒரு அதிசயம்!
-------------!
சற்றுமுன்பு!
கேட்ட கேள்வியொன்றுக்கு!
இம்மாம் பெருசு பூமியென்று!
இரண்டு பிஞ்சு கைகளையும்!
விரித்து பதில் சொன்னவள்!
சென்றபிறகு!
இம்மாம் பெருசு என்று!
நானும் கைகளை விரித்தேன்!
நான்கு அடி கூடுதலாக!
பூமி விரிந்து சுற்றியது.!
!
03.!
வாசிப்பு!
-------!
புதுப்புத்தகங்களை!
வாங்கியவுடனேயே!
வாசனைப் பிடித்து!
எல்லா பக்கங்களின்!
எழுத்துக்களையும்!
எப்படியோ!
உறிஞ்சி விடுகிறார்கள்.!
குழந்தைகள் படிக்கவில்லையென!
குறைச்சொல்ல!
இனி என்ன இருக்கிறது?

பெண்ணே

எதிக்கா
தயவுசெய்து என்னை துளியும் வதைக்காதே !
உன் கோபதாபங்களை எல்லாம் !
என் மீது கொட்டித்தீர்க்காதே !
என்னால் எதையுமே தாங்கமுடியாது !
தாங்கும் வலிமையும் இல்லை !
ஆணுக்குரிய குணங்கள் யாவும் !
என்னிடம் நிறையவே இருக்கின்றன - ஆனாலும் !
ஏனோ உனைக் கண்டதும் !
இவை யாவும் செத்துப்போய் விடுகின்றன !
உன் முன்னால்... மௌனம் !
அது மட்டுந்தான் என்னுடன் துணையாக !
மரத்துப்போன உணர்வுகள் எல்லாம் !
மீட்கப்படுவதுபோல் ஒரு உணர்ச்சி - இருந்தும் !
நான் ஒரு காட்டாற் றுக்கு நிகரடி... ஆனால் !
நீ யார்? !
அந்த நிலவுக்குப் பிறந்தவளா ? இல்லையேல் !
ஏன் என்னை ஒவ்வொரு இரவும் !
உன் கரங்களால் தீண்டித் !
தொந்தரவு செய்கிறாய் ?

பரிணாம வளர்ச்சியின்.. வெட்டுக்கிளி

ப.தியாகு
பரிணாம வளர்ச்சியின் ஒரு சுற்று.. வெட்டுக்கிளி!
01.!
பரிணாம வளர்ச்சியின் ஒரு சுற்று!
---------------------------------------!
நிறைவாய்!
நீளமானதொரு வாலை!
இணைப்பதோடு முற்றுப்பெறுகிறது!
பலூன்காரன் போர்வையிலிருந்த!
மனிதன்!
குரங்கை சிருஷ்டித்தல்!
அவன் வரைக்கும்!
ஒரு சுற்று கண்டிருந்தது!
யுகங்கள் பலவாய்!
வளர்ந்து கொண்டே வந்திருந்த!
பரிணாமம்.!
!
02.!
வெட்டுக்கிளி!
----------------!
உந்தி எழுகையில்!
துகள்கள் அலைய!
கிளறப்படும் கொஞ்சம் மண்.!
உருவாகுமவ்விடம்!
கடை விரல் நுனியளவில்!
சிறு பள்ளம்!
கண் சிமிட்டும் நேரம்!
காணாமல் போகும்!
வெட்டுக்கிளி!
பள்ளத்தில் தேங்குமென்!
மனம்

ரயிலின் நீளம்

ரமேஷ் வைத்யா
கம்பார்ட்மென்ட் தேடுபவனுக்கு!
நெடுகக் கிடக்கும் !
அதே ரயில் !
பாட்டில் பொறுக்குபவனுக்குக்!
குட்டையாகத் தெரிகிறது!
-ரமேஷ் வைத்யா

மனிதர்கள்

நாவிஷ் செந்தில்குமார்
கால்சட்டைப்பையில்!
கற்களை நிரப்பிக்கொண்டு!
காலையிலிருந்து அலைகிறான்!
சிறுவன் ஒருவன்!
குருவியைத்தேடி...!
அவனது இலக்கு!
பச்சோந்தியாக இருந்திருந்தால்!
ஊரில் இழவுகள்!
பல விழுந்திருக்கும்!!
வாழ்க்கைக் குறிப்பு!!
மின்சாரம் இல்லாத இரவில்!
முழுதும் எரிந்து தீர்ந்த!
மெழுகுவர்த்தியொன்று!
தனது கரிய புகையால்!
சுவரில் எழுதி மறைந்தது!
'இன்றைய இரவு!
என்னால் ஒளியூட்டப்பட்டது'!
என்ற சிறு குறிப்பை...!
நாய்கள் மொழி!!
பசியென்று!
சோறுகேட்டு வந்தவனிடம்!
எதுவும் இல்லையென்று மட்டுமே!
சொல்ல முடிந்தது!
மனிதர்களால்...!
வீதி நாய்கள் தான்!
குரைத்துச் சொல்லின!
'உன் அழுக்குச் சட்டை!
கிழிந்திருக்கிறது' என!
முதிர்க்கன்னி!!
கருவேலங்காட்டில்!
விறகு வெட்டும்போது!
வித்தியாசமாய் உணர்ந்தேன்!
விவரமாய்க் கேட்ட!
வள்ளி காதில் சொன்னாள்...!
அதுவரை தெரியாது!
வயதுக்கு வருவது பற்றி...!
இன்றுவரை தெரியாது!
வருவதன் பயன் பற்றி

காலம்

காருண்யன்
காருண்யன் - !
என் கொள்ளுத்தாத்தா !
கொள்ளுப்பாட்டிக்கு விளாசிய சவுக்கை !
என் பாட்டி கண்டிருந்தாள் !
தாத்தாவும் சிறு களியையோ !
தன் இடுப்பு பெல்ட்டையோ !
பாவித்திருக்கக்கூடும்! !
அப்பா பாவம்...............வெகு அப்பாவி !
ஆதிக்கம் அடக்குமுறைகள் அறியாது !
அமைதியாய் வாழ்ந்தவள் அம்மா !
என் மனைவி விவாதிக்கத்தெரிந்தவள் !
அவள் தர்க்க நியாயப்பொறிகளிலே !
என் கசடுகள் தாமே பொசுங்கும் !
என்மகள் நாளை என் செய்வாள் !
என்றெல்லாம் அனுமானிக்க முடியாது !
ஆனால் யார் கண்டது? !
அவள் என் பெயர்த்தி !
சொடுக்கும் சவுக்கைக் காணநேரலாம்

மனிதம் தின்ற.. சிறை.. மனிதம் தின்ற

இராமசாமி ரமேஷ்
மனிதம் தின்ற மானிடப் பேய்களுக்காய்...சிறை பிடிக்கப்பட்ட கனவுகள்... ஊமையான என் உயிர் வலிகள்!
!
01.!
மனிதம் தின்ற மானிடப் பேய்களுக்காய்....!
-----------------------------------------------------------!
தொகை தொகையாக!
வதை செய்யப்பட்ட எமதான!
வாழ்தலின் இருப்புக்கள்!
எச்சங்களைத் தாங்கிய !
யதார்த்தத்தின் மிச்சங்களாய்!
இழப்புக்களின் புதைவிலிருந்து மீள்வதற்க்காய்!
மீட்பரை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றன...!
சாவுகள் எம்மவர்க்கு!
சாதாரணமாகி உறவாடிய போதும்....!
ஊமைகளாய் மௌனம் கௌவியிருந்த!
உலகத்தின் வாய்கள்!
இன்று உதவிக்கரம் நீட்டுகின்றனவாம்!
உரிமையோடு....!
மனிதாபிமானத்தை!
அன்று மண்ணுக்குள் புதைத்ததை மறந்து!!!
முகங்கள் அறுக்கப்பட்டு!
முகவரிகள் அழிக்கப்பட்டு!
நம்மவர்கள் முண்டங்களாக மாண்டுபோன!
முள்ளிவாய்க்கால் மண்ணில்!
விடிவை எதிர்பார்த்து!
எம்மினம் தவம்கிடந்தபோது!
மனிதம் பேசும் எந்த மாமனிதரும்!
உயிர்குடித்த பேய்களிடம் போய்!
எமக்காக மன்றாடவில்லையே....!!!
அரக்க குலத்தில் ஜனனித்த!
மிருகங்களின் தசைப்பசிக்கு!
எங்களின் இரத்த உறவுகளின்!
உடல்களையல்லவா!
உண்ணக்கொடுத்தவர்களாகிவிட்டோம்......!
ஆணிவேர்களை!
பிடுங்கப் பார்த்தவர்களால்!
சில பக்கவேர்களை மாத்திரம்தான்!
பதம்பார்க்க முடிந்திருக்கிறது...!
எமக்கான தேசத்தில்!
எமதான இருப்புக்கள் உறுதியாகும்வரை!
பல விருட்சங்களின் விழுதுகள்!
வீழ்ந்துகொண்டேயிருக்கும்!
வீறுகொண்டு மீண்டும் எழுவதர்க்காய்....!!!!
02.!
சிறை பிடிக்கப்பட்ட கனவுகள்....!
-----------------------------------------!
கனவுகள் திருடப்பட்டு!
காலத்தின் கரங்களில்!
கட்டாயப்படுத்தப்பட்டு!
கைதியாக்கப்பட்டுப் போனேன்....!
ஆற்றுவதற்கும் தேற்றுவதற்கும்!
யாருமேயின்றி அனாதையாக நகர்கிறது!
எனது பொழுதுகள்.....!
சுகங்கள்!
யாருடையதோ சுரண்டலில்!
அபகரிக்கப்பட்டதும்!
நிஜங்கள் கானல்களாகி!
எனக்காக எதுவுமேயின்றி!
காணாமல் போயின!
உரிமைகள் எனைவிட்டு வெகுதூரமாய்....!
விரக்தியின் விளிம்பில்!
விழித்துக் கொள்கிறேன்!
தூங்குகின்ற பொழுதுகளில்கூட......!!!
வண்ண வண்ணமாய் !
என் தேசத்தில் வருமென!
நான் எதிர்பார்த்த தருணங்கள்!
சுடுகாட்டில் கருக்கப்பட்ட!
பூச்சரமாய்!
இருட்டடிப்புச் செய்யப்பட்டு!
இரும்புக் கரங்களுக்குள்!
இறுக்கப்படுகின்றன...........!
வயது வந்துவிட்டதால்!
வாலிபமே என் வாழ்க்கைக்கு!
வலியாகிப் போனது.....!
தங்கக் கூண்டில்!
தடுமாறும் பறவையாக!
வசதிகள் கொட்டிக் கிடந்தும்!
வெளி வாழ்க்கைக்கு!
வழி பார்க்கின்ற!
என் விழிகளின் கனவுகளை!
யார்தான் புரிந்துகொள்வார்களோ....??!
03.!
ஊமையான என் உயிர் வலிகள்!
....................................................................................!
உன் ஒற்றைவரி வார்த்தைக்காய்!
என் மனம்!
மௌனவிரதமிருப்பதை அறிவாயோ?!
உன் நேசமான பார்வைக்காய்!
என்விழிகள்!
பாசத்தோடு பார்த்திருப்பது புரிகிறதா?!
உன் உறவுக்காய்!
என் உள்ளமும் உயிரும்!
பூத்திருப்பதை உணர்கிறாயோ?!
என் மௌனமான தவிப்புக்கள்!
உன் மனதுக்கு புரியாது தான்...!!!
பேசும் காதலே தோற்றுப் போகையில்!
ஊமையான என் உயிர் வலிகள்!
உனக்கு புரிவது சந்தேகம் தான்

தீர்மானம்

தீபம் கோபி , சிங்கப்பூர்
பருவ வயதில் !
பற்றவைத்த நெருப்பு !
தினம் புகைத்து.. !
புகைந்து.. புறையோடி.. !
புற்றுநோய் குமுன்பே.., !
மகிழ்ச்சி, துயரமென !
ஏதேதோ காரணம் சொல்லி !
திகட்டாமல் அருந்திய !
ஆல்கஹால் கரைசலில் !
குடலரித்து வெந்து -வெறுங் !
கூடாய் போகுமுன்பே..., !
நானெடுத்த !
புத்தாண்டு தீர்மானம்! !
நீண்டநாள் நண்பனை !
நேற்று கண்ட பூரிப்பில், !
வெண்புகையில் வீழ்ந்து.. !
மதுவுக்குள் மூழ்கியது ! -அந்த !
நிலையில்லா தீர்மானம்! !
!
- தீபம் கோபி, சிங்கப்பூர்

ஆர்பரிக்கும் அமுதூற்று

இரா.சதீஷ்மோகன்
பிறப்பிடம் அறியா அதிசயமே!
உனது வீழ்ச்சி உலக உயிர்களின் உயிர்ச்சி!
தாழ்வு நோக்கிய உனது பயனம்!
உழவர்களையும் உயர்த்தும் நோக்கோ!
உனது சேவை உலக உயிர்களுக்குத் தேவை!
நீ செல்லுமிடமெல்லாம் சிறப்பு!
உன் வாடை சென்றயிடமெல்லாம் சிலிர்ப்பு!
உன் பார்வை பட்டயிடமெல்லாம் பசப்பு!
புனிதமாய் பிறந்த போதும் பாய்ந்தோடும் வழியில்!
மனிதர்களால் மாசுபட்ட போதும் கலங்காது!
உன் புனித்தை மீண்டும் பெற!
கடலில் சென்று நீராடுகின்றயோ!
!
-இரா.சதீஷ்மோகன் !
தமிழ்த்துறை முனைவர்!
பட்ட ஆய்வாளர்தமிழ்த்துறை!
பாரதியார் பல்கலைக்கழம்!
கோயம்புத்தூர்-46