கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

திரையில் மலர்ந்த கவிதைகள்

தாய் தின்ற மண்ணே

படம் : ஆயிரத்தில் ஒருவன்

தாய் தின்ற மண்ணே

தாய் தின்ற மண்ணே
இது பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்

தாய் தின்ற மண்ணே
தாய் தின்ற மண்ணே
பிள்ளையின் கதறல்
பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்
ஒரு பேரரசன் புலம்பல்

நெல்லாடிய நிலமெங்கே
சொல்லாடிய அவையெங்கே
வில்லாடிய களமெங்கே
கல்லாடிய சிலையெங்கே
தாய் தின்ற மண்ணே
தாய் தின்ற மண்ணே

கயல் விளையாடும் வயல் வெளி தேடி
காய்ந்து கழிந்தன கண்கள்
காவிரி மலரின் கடிமணம் தேடி
கருகி முடிந்தது நாசி
சிலை வடி மேவும் உளி ஒலி தேடி
திருகி விழுந்தன செவிகள்
ஊன் பொதி சோற்றின் தேன் சுவை கருதி
ஒட்டி உலர்ந்தது நாவும்

புலிக் கொடி பொறித்த சோழ மாந்தர்கள்
எலிக் கறி பொறிப்பதுவோ
காற்றை குடிக்கும் தாவரமாகி
காலம் கழிப்பதுவோ
மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை
மன்னன் ஆளுவதோ
மன்னன் ஆளுவதோ...

தாய் தின்ற மண்ணே
தாய் தின்ற மண்ணே

நொறுங்கும் உடல்கள்
பிதுங்கும் உயிர்கள்
அழுகும் நாடு
அழுகின்ற அரசன்
பழம் தின்னும் கிளியோ பிணம் தின்னும் கழுகோ
தூதோ முன் வினை தீதோ
களங்களும் அதிர களிறுகள் பிளிற
சோழம் அழைத்து போவாயோ
தங்கமே என்னை தாய் மண்ணில் சேர்த்தால்
புரவிகள் போலே புரண்டிருப்போம்
ஆயிரம் ஆண்டுகள் சேர்ந்த கண்ணீரை
அருவிகள் போலே அழுதிருப்போம்
அதுவரை அதுவரை...

தமிழர் காணும் துயரம் கண்டு
தலையை சுற்றும் கோளே.. அழாதே
என்றோ ஒரு நாள் விடியும் என்றே
இரவை சுமக்கும் நாளே.. அழாதே
நூற்றாண்டுகளின் துருவை தாங்கி
உறையில் தூங்கும் வாளே.. அழாதே
எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ
என்னோடழும் யாழே.. அழாதே

நெல்லாடிய நிலமெங்கே
சொல்லாடிய அவையெங்கே
வில்லாடிய களமெங்கே
கல்லாடிய சிலையெங்கே
தாய் தின்ற மண்ணே
இது பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்

- வைரமுத்து
Add a comment

அம்பா மனங்கனிந்துனது கடைக்கண்டார்

படம்: சிவகவி
அம்பா மனங்கனிந்துனது
அம்பா மனங்கனிந்துனது கடைக்கண்டார்
திருவடியிணை துணையென் - அம்பா

வெம்பவ நோயற அன்பர் தமக்கருளும்
கதம்பவனக் குயிலே சங்கரி ஜெகத் - அம்பா

பைந்தமிழ் மலர் பாமாலை சூடி உன் பாதமலர்
பணிந்து பாடவும் வேண்டும்
சிந்தையும் என் நாவும் என்னேரமும்
நின் திருப்பெயர் புகழ் மறவாமையும் வேண்டும்
பந்த உலகில் மதிமயங்கி அறுபகைவர்
வசமாய் அழியாமல் அருள் பெறவேண்டும்
இந்தவரம் தருவாய் ஜெகதீஸ்வரி - எந்தன்
அன்னையே அகிலாண்ட நாயகி என் - அம்பா

- பாபநாசம் சிவன்
Add a comment

கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு

படம் : காக்கி சட்டை
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
கன்னங்கள் புது ரோசாப்பூ
உன் கண்கள் இரு ஊதாப்பூ
இது பூவில் பூத்த பூவையே

அந்தப்புறம் எந்தப்புறமோ விழி மையிட்டு
அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு
அந்தப்புறம் எந்தப்புறமோ விழி மையிட்டு
அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு
ஆயிரம் பொன் பூக்கும் எந்தன் தேகம் எங்குமே
லல லல லலலா
அங்குலம் விடாமல் இன்ப கங்கை பொங்குமே
லல லல லலலா
தோளிலும் என் மார்பிலும்
கொஞ்சிடும் என் அஞ்சுகம் நான் நீ ஏது ஓய் ஓய்

உன்னைக் கொடு என்னைத் தருவேன்
ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ்
சொல்லித் தருவேன் விழி மூடாமல்
உன்னைக் கொடு என்னைத் தருவேன்
ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ்
சொல்லித் தருவேன் விழி மூடாமல்
கண்களால் என் தேகம் எங்கும் காயம் செய்கிறாய்
லல லல லலலா
கைகளால் என் பாதம் நீவி ஆறச் செய்கிறாய்
லல லல லலலா
வாழ்கவும் இவ்வையகம் யாவுமே
என் கையகம் நீதான் தந்தாய்.... ஓ.. ஓ...

- வைரமுத்து
Add a comment

ஆயிரம் மலர்களே மலருங்கள்

படம் : நிறம் மாறாத பூக்கள்
ஆயிரம் மலர்களே மலருங்கள்

ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல் தேவன் காவியம்
நீங்களோ நாங்களோ நெருங்கி
வந்து சொல்லுங்கள்...
சொல்லுங்கள்...

வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்
வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்
மனதில் உள்ள கவிதை கோடு மாறுமோ
ராகங்கள் நூறு பாவங்கள் நூறு
என் பாட்டும் உன் பாட்டும் பொன் அல்லவோ

கோடையில் மழைவரும் வசந்த காலம் மாறலாம்
எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ
காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்
நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ

பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே
மாலையின் மீது ரதி உலாவும் நேரமே
சாயாத குன்றும் காணாத நெஞ்சும்
தாலாட்டு பாடாமல் தாயாகுமோ

- கவியரசர் கண்ணதாசன்
Add a comment

மாலை நேரம் மழை தூறும் காலம்

படம் : ஆயிரத்தில் ஒருவன்
மாலை நேரம் மழை தூறும் காலம்
மாலை நேரம்
மழை தூறும் காலம்
என் ஜன்னல் ஓரம்
நிற்கிறேன்

நீயும் நானும்
ஒரு போர்வைக்குள்ளே
சிறு மேகம் போலே
மிதக்கிறேன்

ஓடும் காலங்கள்
உடன் ஓடும் நினைவுகள்
வழி மாறும் பயணங்கள்
தொடர்கிறதே

இது தான் வாழ்கையா
ஒரு துணை தான் தேவையா
மனம் ஏனோ என்னையே
கேட்கிறதே

ஓஹோ காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது
அன்பே...

இது சோகம் அனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம்
அன்பே...
இதம் தருமே...

உன் கரம் கோர்கையில்
நினைவு ஓராயிரம்
பின் இரு கரம் பிரிகையில்
நினைவு நூறாயிரம்.

காதலில் விழுந்த இதயம்
மீட்கமுடியதது.
கனவில் தொலைந்த நிஜங்கள்
மீண்டும் கிடைக்காதது.

ஒரு காலையில் நீ இல்லை
தேடவும் மனம் வரவில்லை
பிரிந்ததும் புரிந்தது
நான் என்ன இழந்தேன் என.

ஒருமுறை வாசலில்
நீயாய் வந்தால் என்ன
நான் கேட்கவே துடித்திடும்
வார்த்தை சொன்னால் என்ன.

இரு மனம் சேர்கையில் பிழைகள்
பொருத்து கொண்டால் என்ன
இரு திசை பறவைகள் இணைந்து
விண்ணில் சென்றால் என்ன.

என் தேடல்கள் நீ இல்லை!
உன் கனவுகள் நான் இல்லை!
இரு விழி பார்வையில்
நாம் உருகி நின்றால் என்ன?

- செல்வ‌ராக‌வ‌ன்
Add a comment

வெண்மதி வெண்மதியே நில்லு

படம் : மின்னலே
வெண்மதி வெண்மதியே நில்லு
வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானத்துக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம்..
உன்னை இன்றோடு நான் மறப்பேனே
நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில்
பூத்த காதல் மேலும் மேலும்
துன்பம் துன்பம் வேண்டாம்..

ஐன்னலின் வழி வந்து விழுந்தது
மின்னலின் ஒளி அதில் தெரிந்தது
அழகு தேவதை அதிசய முகமே
தீப்பொறி என் இரு விழிகளும்
தீக்குச்சி என என்னை உரசிட
கோடிப் பூக்களாய் மலர்ந்தது மனமே
அவள் அழகைப் பாட ஒரு மொழி இல்லையே
அளந்து பார்க்க பல விழி இல்லையே
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே

ஐஞ்சு நாள் வரை அவள்
பொழிந்தது ஆசையின் மழை
அதில் நலைந்தது நூறு
ஜென்மங்கள் நினைவினில் இருக்கும்
அது போல் எந்த நாள் வரும்
உயிர் உருகிய அந்த நாள் சுகம்
அதை நினைக்கையில்
ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்
ஒரு நிமிசம் கூட என்னை பிரியவில்லை
விபரம் ஏதும் அவள் அறிய வில்லை
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே..

உன்னை இன்றோடு நான் மறப்பேனே
நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில்
பூத்த காதல் மேலும் மேலும்
துன்பம் துன்பம் வேண்டாம்..

- கவிஞர் வாலி
Add a comment

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி