கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

திரையில் மலர்ந்த கவிதைகள்

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது

படம்: கர்ணன்

கர்ணன்
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா... கர்ணா
வருவதை எதிகொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா... கர்ணா
வருவதை எதிகொள்ளடா

தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்ப்பழி ஏற்றாயடா
நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடா
மன்னவர் பணியேற்கும்
கண்ணனும் பணி செய்த
உன்னடி பணிவேனடா -கர்ணா
மன்னித்து அருள்வாயடா

செஞ்சோற்று கடன் தீர்த்த
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா - கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
வஞ்சகன் கண்ணனடா

- கண்ணதாசன்
Add a comment

கண்மனியே காதல் என்பது கற்பனையோ

படம் :ஆறிலிருந்து அறுபதுவரை

 

Rajini80s   

கண்மனியே காதல் என்பது கற்பனையோ...
காவியமோ, கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்ச்சினில்...
பொங்குதம்மா,பல்சுவையும் சொல்லுதம்மா,
லாலாலாலா...லாலாலா...லாலாலால...

மேளம் முழங்கிட தோரணம் ஆடிட,
காலமும் வந்ததம்மா...நேரமும் வந்ததம்மா...
பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில்,
பாடிடும் எண்ணங்களே...
இந்த பாவையின் உள்ளத்திலே...
பூவிதழ் தேன் குலுங்க,
சிந்தும் புன்னகை நான் மயங்க...
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்
சாய்ந்திருப்பேன்...வாழ்ந்திருப்பேன்

பாலும் கசந்தது பஞ்ச்சனை நொந்தது
காரணம் நீ அறிவாய்...தேவையை நான் அறிவேன்...
நாளொரு வேகமும் மோகமும் தாபமும், வாலிபம் தந்த சுகம்...
இளம் வயதினில் வந்த சுகம்
தோள்களில் நீ அணைக்க வண்ணத் தாமரை நான் சிரிக்க
ஆயிரம் காலமும் நான் உந்தன்
மார்பினில் தோரணமாய் ஆடிடுவேன்
- பஞ்சு அருணாசலம்
Add a comment

என்னமோ ஏதோ..

படம்: கோ
என்னமோ ஏதோ..
என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்..
வண்ணம் பிறழுது நினைவில்..
கண்கள் இருளுது நனவில்!!

என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்..
வெட்டி எறிந்திடும் நொடியில்..
மொட்டு அவிழுது கொடியில்!!

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை!!

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை!!

என்னமோ ஏதோ மின்னி மறையுது விழியில்..
அண்டி அகலுது வழியில்..
சிந்திச் சிதறுது விழியில்!!

என்னமோ ஏதோ சிக்கித் தவிக்குது மனதில் ..
றெக்கை விரிக்குது கனவில்..
விட்டுப் பறக்குது தொலைவில்!!

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை!!

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை!!

நீயும் நானும் யந்திரமா?
யாரோ செய்யும் மந்திரமா?
பூவே..

முத்தமிட்ட மூச்சுக் காற்று பட்டு பட்டு கெட்டுப் போனேன்..
பக்கம் வந்து நிற்கும் போது திட்டமிட்டு எட்டிப் போனேன்..

நெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்..
அழைக்காதே பெண்ணே எந்தன் அச்சங்கள் அச்சாகும்..
சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்!

ஏதோ .. எண்ணம் திரளுது கனவில்..
வண்ணம் பிறழுது நினைவில்..
கண்கள் இருளுது நனவில்!!

என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்..
வெட்டி எறிந்திடும் நொடியில்..
மொட்டு அவிழுது கொடியில்!!

நீயும் நானும் யந்திரமா?
யாரோ செய்யும் மந்திரமா?
பூவே..

Lets Go. Wow.. Wow..
எங்களின் தமிழச்சி
என்னமோ ஏதோ you're lookin so fine,
மறக்க முடியலையே என் மனமின்று ..
உன் மனசோ lovely இப்படியே இப்ப,
உன்னருகில் நான் வந்து சேரவா என்று..

Lady lookin like a cindrella cindrella..
Naughty looku விட்ட தென்றலா?
Lady lookin like a cindrella cindrella..
என்னை வட்டமிடும் வெண்ணிலா..

Lady lookin like a cindrella cindrella..
Naughty looku விட்ட தென்றலா?
Lady lookin like a cindrella cindrella..
என்னை வட்டமிடும் வெண்ணிலா..

சுத்தி சுத்தி உன்னைத் தேடி..
விழிகள் அலையும் அவசரம் ஏனோ?
சத்த சத்த நெரிசலில் உன் சொல்..
செவிகள் அறியும் அதிசயம் ஏனோ?

கனாக்கானத் தானே பெண்ணே கண்கொண்டு வந்தேனோ?
வினாக்கான விடையும் காணக் கண்ணீரும் கொண்டேனோ?
நிழலைத் திருடும் மழலை நானோ?

ஏதோ .. எண்ணம் திரளுது கனவில்..
வண்ணம் பிறழுது நினைவில்..
கண்கள் இருளுது நனவில்!!

ஓஹோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்..
வெட்டி எறிந்திடும் நொடியில்..
மொட்டு அவிழுது கொடியில்!!

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை!!
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை!!

- மதன் கார்கி
Add a comment

மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட

படம் : மெட்டி

மெட்டி ஒலி
மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட
மேனி ஒரு பூவாக, மெல்லிசையின் பாவாக
கோதை மலர் பூம்பாதம் வாவென்றதே


ஓ....
வாழ்நாளெல்லாம் உன்னோடு தான் வாழ்ந்தாலே போதும்
வாழ்வென்பதின் பாவங்களை நாம் காண வேண்டும்
நாளும் பல நன்மை காணும் எழில் பெண்மை
பூவை வைத்த பூவாசம் போதை கொண்ட உன் நேசம்
தென்றல் சுகம் தான் வீசும் தேடாமல் தேடாதோ


ஏ...
பெண் முல்லையே என் கண்மணி ஊர்கோல நேரம்
உன் காலடி படும்போதிலே பூந்தென்றல் பாடும்
பார்வை பட்ட காயம் பாவை தொட்டு காயும்
எண்ணம் தந்த முன்னோட்டம் என்று அந்த வெள்ளோட்டம்
கண்ட பின்பு கொண்டாட்டம் கண்டாடும் என் நெஞ்சம்

- கங்கை அமரன்
Add a comment

பூக்கள் பூக்கும் தருணம்

படம்: மதராசபட்டினம்
பூக்கள் பூக்கும் தருணம்
பூக்கள் பூக்கும் தருணம்
ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே
புலரும் காலை பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
நேற்றுவரை நேரம் போகவில்லையே
உனது அருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ
இரவும் விடிய வில்லையே
அது விடிந்தால் பகலும் முடியவில்லையே
பூந்தளிரே
வார்த்தை தேவையில்லை
வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழி பேசுமே
நேற்று தேவை இல்லை
நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே
வேரின்றி விதியின்றி
விண் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம்
பூப்பூக்குதே
வாள் இன்றி போர் இன்றி
வலிக்கின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள்
எனை வெல்லுதே
இதயம் முழுதும் இருக்கும்
இந்த தயக்கம் எங்கு கொண்டு நிருத்தும்
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்
பூந்தளிரே..
ohho where would I be
without this joy inside of me
it makes me want to come alive
it makes me want to fly
into the sky...
ohho where would I be
if I didn't have you next to me
ohho where would I be
ohho where...
ohho where...
எந்த மேகம் இது எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈரமழை தூவுதே
என்ன உறவு இது எதுவும் புரியவில்லை
என்ற போதும் இது நீளுதே
யார் என்று அறியாமல் பேர் கூட தெரியாமல்
இவனோடு ஒரு சொந்தம் உருவானதே
ஏன் என்று கேட்காமல் தடுத்தாளும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே
பாதை முடிந்த பிறகும் இந்த உலகில்
பயணம் முடிவதில்லையே
காற்றில் பறந்தே
பறவை மறைந்த பிறகும்
இலை தொடங்கும்
நடனம் முடிவதில்லையே
இது எதுவோ
- நா.முத்துக்குமார்
Add a comment

வெண்ணிலவே வெண்ணிலவே

படம் : மின்சாரக் கனவு
வெண்ணிலவே வெண்ணிலவே
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைனத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைனத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை

இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்

இது இருளலல்ல அது ஒளியல்ல இது ரெண்டோடும் சேராத பொன்னேரம்
தலை சாயாதே விழி மூடாதே சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்
பெண்ணே...பெண்ணே...
பூலோகம் எல்லாமே தூங்கிப்போன பின்னே
புல்லோடு பூமீது ஓசை கேட்கும் பெண்ணே
நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம் பாலூட்ட நிலவுண்டு

எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு
இதை எண்ணி எண்ணி இயற்கையே வியக்கிறேன்
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
பெண்ணே...பெண்ணே
பூங்காற்று அறியாமல் பூவைத் திறக்க வேண்டும்
பூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்
அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு

- வைரமுத்து
Add a comment

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி