கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

திரையில் மலர்ந்த கவிதைகள்

காலங்காத்தால மறஞ்சிருக்கும் வெண்ணிலா போல

படம்: வேங்கை

காலங்காத்தால மறஞ்சிருக்கும் வெண்ணிலா போல
காலங்காத்தால மறஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னப் பாத்தாலே ஒளிஞ்சுக்குறியே பெண்ணே
பொழுது சாஞ்சாலே தல குனியும் தாமரப்போல
என்னப் பாத்தாலே வெக்கப்படுறியே பெண்ணே
உன்னை நான் பார்த்தேன் நான் ரசித்தேன் நான் திண்டாடினேன்
உன்னை நான் தொடர்ந்தேன் நான் உணர்ந்தேன் நான் காதல் கொண்டேன்
என் வாழ்கையின் வாசலே நீயேதானடி ஹொ ஹோ ஹோ

உதட்டை சுழித்து சிரிக்கும்பொழுது உயிரில் வெடி வைக்கிறாய்
ஒவ்வொரு வார்த்தை முடியும்பொழுதும் எதற்கு பொடி வைக்கிறாய்
கொலு பொம்மை போல் இருக்கிறாய் நீ கொடி முல்லை போல் நடக்கிறாய்
அடிக்கடி நகம் கடிக்கிறாய் என்னை மயக்கி மாயம் செய்தாய்
நான் ராத்திரி பார்த்திடும் வானவில் நீ ஹோ ....ஓ

பழசை மறைக்க நெனைக்கும் உனக்கு நடிக்க வரவில்லையே
உருவம் மறந்து புருவம் விரிய சிறுவன் நானில்லையே
எதற்கு நீ என்னை தவிர்கிறாய் என் எதிரிலே முகம் சிவக்கிறாய்
அகமெல்லாம் பொய் பூசியே என்னை அருகில் சேர்க்க மறுத்தாய்
என் ஆவியை தாக்கிடும் தீயே நீயடி ...ஹோ...... ஓ...........


- விவேகா
Add a comment

நெஞ்சம் எனும் ஊரினிலே

படம் : ஆறு
நெஞ்சம் எனும் ஊரினிலே
நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டி கொள்ள வந்தாயே

வாழ்கை எனும் வானத்திலே
மனசு எனும் மேகத்திலே
ஆசை எனும் மழையினிலே
எனை சொட்ட சொட்ட நனைத்தாயே

நான் தனியாய் தனியாய் இருந்தனே
நீ துணையாய் துணையாய் வந்தாயே
இன்று இதமாய் இதமாய் தொலைந்தானே
காதலே…

ஹே காத்துல ஏணி வச்சு
உன் மூச்சுல இறங்கிடுவேன்
நெருப்புல வீடு கட்டி
உன் நெனப்புல வாழ்ந்திடுவேன்
பேனா எடுத்த தானா கைகள்
உன் பேரை தான் எழுதியதே
கோயில பாத்த தானா கைகள்
உனக்காகதான் கும்பிடுதே

கண்ணுல கையுரு கட்டி
உன் உருவத்த புடிச்சிக்குவேன்
மண்ணுல நான் விழுந்து
உன் நிழலையும் ஏந்திக்குவேன்
மழை வரும் போது
நீ வந்து ஒதுங்கின
கூந்தல விரிச்சு குடை புடிப்பேன்
நீ அழ வேண்டாம் இந்திய நாட்டில்
வெங்காயத்தை தடை விதிப்பேன்

- நா.முத்துகுமார்
Add a comment

நீல வானம் நீயும் நானும்

படம் : மன்மதன் அம்பு

நீல வானம் நீயும் நானும்
நீல வானம்
நீயும் நானும்
கண்களே பாசையாய்
கைகளே ஆசையாய்
வைய்யமே கோயிலாய்
வானமே வாயிலாய்
பால்வெளி பாயிலே
சாய்ந்து நாம் கூடுவோம்
இனி நீ என்று நான் என்று
இரு வேறு ஆள் இல்லையே

நீல வானம்
THE BLUE SKY
நீயும் நானும்
YOU AND I

ஏதேதோ தேசங்களை
சேர்க்கின்ற நேசம்தனை
நீ பாதி நான் பாதியாய்
கோர்க்கின்ற பாசம்தனை
காதல் என்று பேர் சூட்டியே
காலம் தந்த சொந்தம் இது
என்னை போலே பெண் குழந்தை
உன்னை போல் ஒரு ஆண் குழந்தை
நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது
இன்னொரு உயிர் தானடி


பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூராயிரம்
பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூராயிரம்
பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூராயிரம்

ஆராத காயங்களை
ஆற்றும் நம் நேசம்தனை
மாளாத சோகங்களை
மாய்த்திடும் மாயம் தனை
செய்யும் விந்தை காதலுக்கு
கை வந்ததொரு கலை தானடி
உன்னை என்னை ஒற்றி ஒற்றி
உயிர் செய்யும் மாயமும் அது தானடி
நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது
இன்னொரு உயிர் தானடி

- கமல்
Add a comment

யாரது யாரது

படம் : காவலன்

யாரது யாரது
யாரது (யாரது) யாரது (யாரது)
யாரது யாரது யார் யாரது
(யார் யாரது)

சொல்லாமல் நெஞ்சத்தை
தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை
மூடி செல்வது
யாரது யாரது
யாரது யாரது

நெருங்காமல் நெருங்கி வந்தது
விலாகாமல் விலகி நிற்பது
வினையாக கேள்வி தந்தது
தெளிவாக குழம்ப வைத்தது
யாரது யாரது
யாரது யார் யாரது

என்னில் ஒரு சடுகுடு சடுகுடு
காலையும் மாலையும் நடக்கிறதே
கண்ணில் தினம் கதகளி கதகளி
தூங்கும் போதும் தொடர்கிறதே
இரவிலும் அவள் பகலிலும் அவள்
மனதினை தொடர்வது தெரிகிறதே
கனவிலும் அவள் நினைவில் அவள்
நிழலென தொடர்வது புரிகிறதே
இருந்தாலும் இல்லா அவளை
இதயம் தேடுதே

உச்சன் தலை நடுவினில் அவளொரு
வேதாளம் போல் இறங்குகிறாள்
என் உள்ளில் அவள் இறங்கிய திமிரினில்
இம்சை ராஜ்ஜியம் தொடங்குக்றாள்
அவள் இவள் என எவள் எவள் என
மறைவினில் இடும் அவள் குழப்புகிறாள்
அவளது முகம் எவளையும் விட
அழகிலும் அழகென உணர்த்துகிறாள்
இருந்தாலும் இல்லாமல் அவள்
கலகம் செய்கிறாள்


யாரது (யாரது) யாரது (யாரது)
யாரது (யாரது) யாரது (யாரது)
யார் யாரது (யார் யாரது)
சொல்லாமல் நெஞ்சத்தை
தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை
மூடி செல்வது
யாரது யாரது யாரது யாரது
நெருங்காமல் நெருங்கி வந்தது
விலாகாமல் விலகி நிற்பது
வினையாக கேள்வி தந்தது
தெளிவாக குழம்ப வைத்தது

- யுக பாரதி
Add a comment

தில்லுபரு ஜானே தில்லு தீவானே

படம் : கலைஞன்

தில்லுபரு ஜானே தில்லு தீவானே
தில்லுபரு ஜானே தில்லு தீவானே தித்திக்கின்ற தேனே
உள்ளபடி நானே உன்னை சேர்ந்தேனே ஒட்டி இருப்பேனே
தில்லுபரு ஜானே தில்லு தீவானே தித்திக்கின்ற தேனே
உள்ளபடி நானே உன்னை சேர்ந்தேனே ஒட்டி இருப்பேனே
போதும் இனி பேச்சி அனல் வீசுது மூச்சி
ஒரு மாதிரி ஆச்சிது ஆஜா ஆஜா
ஆஜா ஆஜா அரே ராரே ஆஜா ஆஜா

மன்னன் மாளிகையில் வாழும் மஞ்சள் வெயில்
ஆடை கட்டி வந்ததென்ன மெல்ல
கண்ணன் நீ தான் என்று மீரா வந்தாள் இன்று
காதல் கதை ஜாடைகளில் சொல்ல

மாலை கண்மயங்கும் வேலை மங்கை நதி
மங்கை நதி பொங்கி வரும் கங்கை நதி
ஏதோ காமன் செய்த சூதோ அச்சம் விட
அச்சம் விட அவனொரு பானம் விட
புது லீலைகள் தான் அதில் காலை வரை தான்
அடி காதலி கண்மணி ஆஜா ஆஜா
கையணைக்க ஆஜா ஆஜா

உன்னால் தூக்கம் கெட்டு வாடும் தென்னஞ்சிட்டு
கூடு விட்டு உன்னைத் தொட்டு கொஞ்சும்
சொன்னால் போதுமடி வாம்மா நானும் ரெடி
காதல் செய்ய காத்திருக்கு நெஞ்சும்
வாங்கு தோள் இரண்டில் தாங்கி சொல்லிக்கொடு
சொல்லிக்கொடு பாடங்களை அள்ளிக்கொடு
ஏக்கம் என்னையும் தான் தாக்கும் முத்தமிட்டு
முத்தமிட்டு கற்றுக்கொள்ளு கட்டில் மெட்டு
சிறு நூலிடை தான் ஒரு இன்பக் கடை தான்
உந்தன் தேவையை வாங்கிட ஆஜா ஆஜா
என்ன வேணும் ஆஜா ஆஜா

- கவிஞர் வாலி
Add a comment

சின்ன மேகமே சின்ன மேகமே

படம் : மழை
சின்ன மேகமே சின்ன மேகமே
சின்ன மேகமே சின்ன மேகமே
சேர்த்து வச்ச காசு வீசு சின்ன மேகமே
சின்ன மேகமே சின்ன மேகமே
சேர்த்து வச்ச காச வீசு

நட்ட தோட்டம் வாடிபூச்சு
நான் குளுச்சி நாளுமாச்சு
மின்னல் குமிகொட்டி கொட்டு மேகமே


விண்ணோடு மேளச் சத்தம் என்ன?
மண்ணோடு சின்னத் தூறல் என்ன?
எங்கேதான் சென்றாயோ இப்போது வந்தாயோ
சொல்லாமல் வந்தது போல் நில்லாமல் போவாயோ
தப்பாமல் மீண்டும் சந்திப்பாயோ ...
நீ வரும் போது நான் மறைவேனா
நீ வரும் போது நான் மறைவேனா
தரிகிட தரிகிட தா

கொள்ளை மழையே கொட்டி விடுக
பிள்ளை வயதே மறுபடி வருக
நிற்க வேண்டும் சிற்பமாக
தாவணியெல்லாம் வெப்பமாக
குடைகளுக்கெல்லாம் விடுமுறை விடுக்க
குழந்தை போல என்னுடன் நனைக
கையில் மழையை ஏந்தி கொள்க
கடவுள் தூவும் விரவும் பூவாக

முத்து மழையே முத்து மழையே
மூக்கின் மேலே மூக்குத்தியாகு
வைர மழையே வைர மழையே .
காதில் வந்து தோடுகள் போடு
உச்சி விழுந்த நெற்றியில் ஆடி
நெற்றி கடந்த நீழ்வழி ஓடி
செண்பக மார்பில் சடுகுடு பாடி
அணுவணுவாகி முனு முனு செய்தாயே

- வைரமுத்து
Add a comment

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி