கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

திரையில் மலர்ந்த கவிதைகள்

விளையாடு மங்காத்தா


படம்:மங்காத்தா

 

Mangatha

 

ஆடவா அரங்கேற்றி பாட வா
அடியார்கள் கூட வா
விடைபோட்டு தேட வா
பூமியில் புதிதான தோழனே
புகழ் கூறும் சீடனே
நீ வா வா தீரனே...

 

விளையாடு மங்காத்தா...விட மாட்டா எங்காத்தா
வெளிவேசம் போடாட்டா இந்த வெற்றி கிட்ட வராதா?
விளையாடு மங்காத்தா...விட மாட்டா எங்காத்தா
வெளிவேசம் போடாட்டா இந்த வெற்றி கிட்ட வராதா?

 

மனதினை மாற்றடா ஒகே
மகிழ்ச்சியை ஏற்றடா ஒகே
குறைகளை நீக்கடா ஹேஹே
தடைகளை தூக்கிப்போட்டு போடா
உடலுக்குள் நெருப்படா ஹொஹொ
உணர்வுகள் கொதிப்படா ஹஹ
புதுவிதி எழுதடா ஹேஹே
புரட்சியை செய்து காட்ட வா டா...

 

ஆடவா அரங்கேற்றி பாட வா
அடியார்கள் கூட வா
விடைபோட்டு தேட வா
பூமியில் புதிதான தோழனே
புகழ் கூறும் சீடனே
நீ வா வா தீரனே...


Drinking too much owww...smoking too much weee
I got ma head twisted round allover me !!
Drinking too much owww...smoking too much weee
I got ma head twisted round allover me !!


தீண்டவா எனைத்தொட்டு தூண்ட வா
உயிர் தன்னை தாண்டவா ...துணையானாய் ஆண்டவா
மோதவா முழு மோக தூதுவா
முகஞ்சோதி அல்லவா..மொழியின்றி சொல்லவா

 

புத்தி என்பது சக்தி என்பதை
கற்றுக்கொள்ள்டா என் நண்பா
பக்தி என்பதை தொழிலில் வைத்துவா
நித்தம் வெற்றிதான் என் நண்பா
இது புதுகுரல் திருக்குறள் தானே
இதை புரிந்தபின் கறையேற்றும் முன்னே
நீ பொறுப்பினை ஏற்று ,புதுப்பணி ஆற்று
போக வேண்டும் மேலே முன்னேறு


Nachle udthi padang be
kudh be pe thu tond ley
ye hath uda ley
soch ley kya majbooriyan
sunneri dasthaa katlo dusthakiyaan
mankatha daaa

 

விளையாடு மங்காத்தா...விட மாட்டா எங்காத்தா
வெளிவேசம் போடாட்டா இந்த வெற்றி கிட்ட வராதா?
விளையாடு மங்காத்தா...விட மாட்டா எங்காத்தா
வெளிவேசம் போடாட்டா இந்த வெற்றி கிட்ட வராதா?
மனிதனை விழிக்க வை ஒகே
நினைவினை துவைத்து வை ஒகே
கனவினை ஜெயிக்க வை ஓகே
கவனத்தை தொழிலில் வைத்து வா டா...

 

உறவினை பெருக்கிவை ஓகே
உயர்வினை பணிந்து வை ஓகே
உண்மையை நிலைக்க வை ஓகே
உலகத்தை திரும்பி பார்க்க வை டா

 

விளையாடு மங்காத்தா...விட மாட்டா எங்காத்தா
வெளிவேசம் போடாட்டா இந்த வெற்றி கிட்ட வராதா?
விளையாடு மங்காத்தா...விட மாட்டா எங்காத்தா
வெளிவேசம் போடாட்டா இந்த வெற்றி கிட்ட வராதா?

 

Mankatha Daa
Haha yeah

 

-கங்கை அமரன்,யுவன் சங்கர் ராஜா,சுசரிதா

Add a comment

கொடியிலே மல்லிகப்பூ

படம்: கடலோரக் கவிதைகள்

கடலோரக் கவிதைகள்
கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா தவிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்

மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்
நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்
பொத்தி வெச்சா அன்பு இல்லே சொல்லிப்புட்டா வம்பு இல்லே
சொல்லத்தானே தெம்பு இல்லே இன்ப துன்பம் யாரால்

பறக்கும் திசையேது இந்தப் பறவ அறியாது
உறவும் தெரியாது உலகம் புரியாது
பாறையிலே பூவளர்ந்து பார்த்தவங்க யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு
காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே
தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கன்னா

- வைரமுத்து
Add a comment

நான் சொன்னதும் மழை வந்திச்சா

நான் சொன்னதும் மழை வந்திச்சா

நான் சொன்னதும் மழை வந்திச்சா
நான் சொல்லல வெயில் வந்திச்சா
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா
முத்து முத்து பேச்சி

என் கண்ணில பொய் இருக்கா
உன் கண்ணோட மை கிறுக்கா
அடி கள்ளியே அறிவிருக்கா
என் மூச்சு நின்னு போச்சு

காத்தோடு காத்தாக உள்ள வந்தியா
காட்டோட காடாக கட்டிப் போட்டியா
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது
என் பேச்செல்லாம் நின்னுபோய் மூளை சுத்துது

கருவாட்டு கொழம்பா...நீயும் ருசி ஏத்துற..
ஒரு வாட்டி தின்னு பாக்க உசுப்பேத்துற..
அடி போடி போடி போடி பொட்ட மயிலே
ஓலை ஏதும் வந்திச்சா
உன்னை தூக்கி போகதான் வருவேனின்னு
கிளி வந்து பதில் சொல்லிச்சா
கரு நாக்கு கார புள்ள
கரு பட்டி நிறத்து முல்ல
எடுபட்ட நினைப்பு தொல்ல
நீ...களவாணி..
ஓ..கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற....
ஒரு வாட்டி தின்னு பாக்க உசுப்பேத்துற..

ஆடு...ஆடு...

ஆத்தாடி.. ஆடு மேய்க்க ராசா வந்தாரா
எங்க ஆடு தின்ன எச்சி புல்ல மேய வந்தாரா

அடி போடி போடி போடி முட்ட கண்ணி
கட்டம் கட்டி பாஞ்சேன்
அட கண்ண மூடி கொஞ்சம் சாஞ்சா போதும்
கனவில தீ மிதிச்சேன்
கண்ணாடி வளையல் தாறேன்
காதுக்கு ஜிமிக்கி தாறேன்
கழுத்துக்கு தாலி தாறேன்
நீ....வரியாடி...

கருவாட்டு கொழம்பா.... நீயும்.......ருசி ஏத்துற....

- செல்வராகவன்
Add a comment

பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்

படம்: எங்கேயும் காதல்
எங்கேயும் காதல்
லோலிதா! லோலிதா..!
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே

பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய்
நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே

லோலிதா ஹா லோலிதா
உன் கரை இல்லாத கண்கள் வெட்டி தள்ளுதே
உண்மையை சொல்லட்டா
உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே

கொட்டும் போதே மழை கொட்டாவிட்டால் பிழை

வாய்சே வானம் மாற்றி பார்க்கிறாய்

பெண்கள் எல்லாம் செடி பற்றிக்கொள்ளும் கொடி

என்றே தப்பு தப்பாய் சொல்கிறாய்

நான் நாற்பக்கம் நீர் சூழ்ந்த தீவல்லவா
யார் வந்தாலும் சாய்கின்ற தேர் அல்லவா
நான் அலை தூர அடை காக்கும் கடல் அல்லவா
என் ஆகாய மதில்கூட பல வென்னிலா

மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
மின்னஞ்சல் போலே வந்துசென்று கொல்கிறாய்
நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே
உன் தூரம் கூட பக்கம்மாக மாறுதே

தானாய் வந்தால் ருசி தள்ளி சென்றால் ரசி
என்னும் வாழ்க்கை இன்பம் அல்லவா
முத்தம் என்றால் சிரி கட்டி கொண்டால் வெறி
கண்ணை மூடி கொண்டு கிள்ளவா
நீ சொல்லும் பல நூறில் நானில்லையே
உன் அழகான பல பூவில் தேன் இல்லையே
உன் வெள்ளத்தில் நான் ஒன்றும் புறம்பில்லையே
நீ ருசி பார்க்க தலை தாய்த்தும் வரம்பில்லையே!

- தாமரை
Add a comment

மாமரத்து பூவெடுத்து

படம் : ஊமை விழிகள்

மாமரத்து பூவெடுத்து
மாமரத்துப்பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழலெடுத்து போர்வையாக்கி மூடவா
கண்ணே புதுநாடகம் விரைவில் அரங்கேறணும்

கூந்தலில் பூ சூடினேன்
கூடலையே நாடினேன்
கூடிவிடமனசுத்துடிக்குது ஓஒ ஒ
கூடவந்த நாணம் தடுக்குது
கடலோடு பிறந்தாலும் இந்த அலைகள் ஏங்குது
உடலோடு பிறந்தாலும் இந்த மனமும் ஏங்குது

சித்திரைப்பூவிழிப் பாரம்மா
சிற்றிடை மெலிந்ததேனம்மா
பத்துவிரல் அணைக்கத்தானம்மா
முத்துரதம் எனக்குத்தானம்மா
உனக்காக உயிர்வாழ இந்த பிறவிஎடுத்தது
உயிரோட உயிரான இந்த உறவு நிலைத்தது

- ஆபாவாணன்
Add a comment

ராசாத்தி என் உசிரு என்னதில்ல

படம்: திருடா திருடா

ராசாத்தி என் உசிரு என்னதில்ல

ராசாத்தி என் உசிரு என்னதில்ல
பூச்சூடி வாழ்க்கப்பட்டு போனபுள்ள
நீ போனா என்னுசுரு மண்ணுக்குள்ள
ராவோடு சேதிவரும் வாடிபுள்ள

காரவீட்டுத் திண்ணையில கறிக்கு மஞ்சள் அரைக்கயில
மஞ்சள அரைக்குமுன்ன மனச அரச்சவளே..
கரிசக்காட்டு ஒடையில கண்டாங்கி தொவைக்கயில
துணிய நனையவிட்டு மனச புழிஞ்சவளே..

நெல்லுக் களத்துமேட்டுல இழுத்து முடிஞ்சிகிட்டு
போனவ போனவதான் - புதுக் கல்யாணச் சேலையில
கண்ணீரத் தொடச்சிகிட்டுப் போனவ போனவதான்
நாந்தந்த மல்லிகைய நட்டாத்தில் போட்டுவிட்டு
அரளிப்பூச்சூடி அழுதபடி போறவளே

கடலக்காட்டுக்குள்ள கையடிச்சி சொன்னபுள்ள
காத்துல எழுதணும் பொம்பளங்க சொன்னசொல்ல..

தொட்டுதொட்டு பொட்டுவெச்ச சுட்டுவெரல் காயலையே
மரிக்கொழுந்து வெச்சகையில் வாசமின்னும் போகலையே..
மருதையில வாங்கித்தந்த வளவி ஒடையலையே
மல்லுவேட்டி மத்தியில மஞ்சக்கர மாறலையே

அந்தக்கழுத்துத் தேமலையும் காதோர மச்சத்தையும்
பார்ப்பதெப்போ - அந்தக் கொலுசு மணிச்சிரிப்பும்
கொமரி இளஞ்சிரிப்பும் கேட்பதெப்போ
கருவேலங்காட்டுக்குள்ள கரிச்சான்குருவி ஒண்ணு
சுதிமாறிக் கத்துதம்மா தொணயத்தான் காணோமின்னு

கடலக்காட்டுக்குள்ள கையடிச்சி சொன்னபுள்ள
காத்துல எழுதணும் பொம்பளைங்க சொன்னசொல்ல..

- வைரமுத்து
Add a comment

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி