கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

திரையில் மலர்ந்த கவிதைகள்

தெய்வம் வாழ்வது எங்கே

படம் : வானம்

 

வானம்….

தெய்வம் வாழ்வது எங்கே
தெய்வம் வாழ்வது எங்கே
தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்
காதலினால் மூடிவிட்ட
கண்கள் இன்று திறக்கிறது
திறந்தவுடன் வழியுது கொஞ்சம் கண்ணீர்
நாளும் வணங்கும் தெய்வம் எங்கே
நாளும் வணங்கும் தெய்வம் எங்கே

தெய்வம் வாழ்வது எங்கே
தெய்வம் வாழ்வது எங்கே
தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்
காதலினால் மூடிவிட்ட
கண்கள் இன்று திறக்கிறது
திறந்தவுடன் வழியுது கொஞ்சம் கண்ணீர்

அடுத்தவன் கண்ணில் இன்பம்
காண்பதும் காதல் தான்
இனி இவன் நெஞ்சில் இல்லை பாரம்..ஓ ஹோ..
தனக்காக வாழ்வதா வாழ்க்கை
விழி ஈரம் மாற்று தந்த போக்கை
இவன் பாவம் கங்கையில் தீர
என்று நாளும் வணங்கும்
நம் தெய்வம் எங்கே இருக்கிரது..ஒஹ்ஹொ..
நாளும் வணங்கும் தெய்வம் எங்கே
நாளும் வணங்கும் தெய்வம் எங்கே

வானம்…

 

-நா. முத்துகுமார்

 

Add a comment

இறகைப்போலே அலைகிறேனே

படம்: நான் மகான் அல்ல


இறகைப்போலே அலைகிறேனே
உந்தன் பேச்சைக் கேட்கையிலே
குழந்தைபோலே தவழ்கிறேனே
உந்தன் பார்வை தீண்டயிலே
தொலையாமல் தொலைந்தேனே
உன் கைகள் என்னைத்தொட்டதும்
கரையாமல் கரைந்தேனே
உன் மூச்சுக்காற்றுப் பட்டதும்
அனியாயக் காதல் வந்ததே
அடங்காத ஆசைத் தந்ததே
எனக்குள்ளே ஏதோ மின்னல்
போலே தொட்டுச்சென்றதே

கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்

கூட வந்து நீ நிற்பதும்
கூடு விட்டு நான் செல்வதும்
தொடருதே தொடருதே நாடகம்
பாதி மட்டுமே சொல்வதும்
மீதி நெஞ்சிலே என்பதும்
புரியுதே புரியுதே காரணம்
நேரங்கள் தீருதே வேகங்கள் கூடுதே
பூவே ஊன் கண்ணுக்குள்ளே பூமிப்பந்து சுத்துதே
(கண்ணோரம்..)

ஹே என்னானதோ ஏதானதோ
இல்லாமல் போச்சே தூக்கம்
கண்ணே உன்னை காணாமல் நான் இல்ல
ஓஹோ ஹோ ஹோ
என் மீதிலே உன் வாசனை
எப்போதும் வீசப்பார்க்கிறேன்
அன்பே என்னை சேராமல்
வாழ்வில்லை ஓஹோ ஹோ
அன்பே உன்னை சேராமல்
வாழ்வில்லை ஓஹோ ஹோ
நீ என்னைக் காண்பதே
வானவில் போன்றதே
தூரத்தில் உன்னை கண்டால்
தூரல் நெஞ்சில் சிந்துதே

கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
- யுகபாரதி
Add a comment

உன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது

படம்: எங்கேயும் எப்போதும்

 

 

உன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது

நான் உனக்கோர் பேர் வைத்தேன் உனக்கே தெரியாது
அந்த பேரை அறியாது அட யாரும் இங்கேது
அதை ஒரு முறை சொன்னாலே தூக்கம் வராது
அட தினந்தோறும் அதை சொல்லி உன்னை கொஞ்சுவேன்
நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்

சூடான பேரும் அதுதான் சொன்னவுடன் உதடுகள் கொதிக்கும்
சூரியனை நீயும் நினைத்தால் அது இல்லையே
ஜில்லென்ற பேரும் அதுதான் கேட்டவுடன் நெஞ்சம் குளிரும்
நதியென்று நீயும் நினைத்தால் அது இல்லையே
சிலிர்க்கவைக்கும் தெய்வமில்லை
மிளரவைக்கும் மிருகமில்லை
ஒளிவட்டம் தெரிந்தாலும் அது பட்டப்பேரில்லை
என் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்லவா..

பெரிதான பேரும் அதுதான் சொல்ல சொல்ல மூச்சே வாங்கும்
எத்தனை எழுத்துக்கள் என்றால் விடையில்லையே
சிறிதான பேரும் அதுதான்
சட்டென்று முடிந்தேபோகும் எப்படி சொல்வேன் நானும்
மொழி இல்லையே
சொல்லிவிட்டால் உதடு ஒட்டும்
எழுதிவிட்டால் தேனும் சொட்டும்
அது சுத்த தமிழ் பெயர்தான்
அயல் வார்த்தை அதில் இல்லை
என் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்லவா..

உன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது
நான் உனக்கோர் பேர் வைத்தேன் உனக்கே தெரியாது
அட தினந்தோறும் அதை சொல்லி உன்னை கொஞ்சுவேன்
நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன் 

 

-நா. முத்துகுமார் 

 

Add a comment

மைனா மைனா

படம்:மைனா

மைனா மைனா
நெஞ்சுக்குள்ள வம்புப்பண்ணுற
மைனா மைனா
என்ன சொல்ல என்னக் கொல்லுற
சொல்லுபுள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காதே
நெஞ்சுமேல கைய வச்சு
கண்ணால நீ சிரிக்காதே
என்ன மறந்தே தள்ளி இருந்திடத்
துணிஞ்சது சரியா சரியா...
தன்னந்தனியே என்ன தவிப்புல
எரிஞ்சது முறையா முறையா
எனக்கேதும் புரியவே
இல்ல பதில் பேச வருவியா

மைனா மைனா... ஏலே....
ஏலே.... ஏலே.... ஏலே....

சிம்னிக்கு மண்ணெண்ணையப் போல
சித்திரைக்கி உச்சி வெய்யில் போல
நீயும் எனக்காக உயிர்
வாழ்வேன் உனக்காக
சக்கரத்தப் போல சுத்தி வரும் ஆச
கண்ணு மைய வாங்கி
தீட்டிக்கிறேன் மீச

அடியே.... நீ மணலத் திரிச்ச கயிறா
கொடியே... நீ உசுர கடைஞ்ச தயிரா
மைனா மைனா
நெஞ்சுக்குள்ள வம்புப்பண்ணுற
மைனா மைனா
என்ன சொல்ல என்னக் கொல்லுற

கட்டவண்டி செல்லும் வழி தேட
உண்டிவில்லும் ஜல்லிக்கல்ல தேட
நானும் உன்னத் தேடி
அலைஞ்சேனே மனம் வாடி
பள்ளிக்கூடம் போயும் ஏறவில்ல பாடம்
பல்லாங்குழி ஆட கூட இல்ல நீயும்
தொணையா... நீ இருந்தா ஜெயிப்பேன் ஊர
கனவா... நீ கலைஞ்சா நெனைப்பேன் தீர

மைனா நெஞ்சுக்குள்ள வம்புப்பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற
சொல்லுபுள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காதே
நெஞ்சுமேல கைய வச்சு கண்ணால நீ சிரிக்காதே
என்ன மறந்தே தள்ளி இருந்திடத் துணிஞ்சது சரியா சரியா
தன்னந்தனியே என்ன தவிப்புல எரிஞ்சதேன் முறையா முறையா
அடையாளம் தெரியவே இல்ல
புதுசா நீ பொறந்தியா

(மைனா மைனா..)
-யுகபாரதி
Add a comment

இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ

படம்: எந்திரன்

 இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ
முதல் முறை காதல் அழைக்குதோ
பூஜ்ஜியம் ஒன்றோடு
பூவாசம் இன்றோடு
மின்மீன்கள் விண்ணோடு
மின்னல்கள் கண்ணோடு
கூகுள்கள் காணாத
தேடல்கள் என்னோடு
காலங்கள் காணா காதல்
பெண் பூவே உன்னோடு
iRobo உன் காதில்ஐ லவ் யூ சொல்லட்டா
iRobo உன் காதில்ஐ லவ் யூ சொல்லட்டா
I am a super girl உன் காதல் rapper girl
I am a super girl உன் காதல் rapper girl
என்னுள்ளே எண்ணெல்லாம்
நீதானே நீதானே
உன் நீலக் கண்ணோரம்
மின்சாரம் பறிப்பேன்
என் நீலப் பல்லாலே
உன்னோடு சிரிப்பேன்
என் இஞ்சின் நெஞ்சோடு
உன் நெஞ்சை அணைப்பேன்
நீ தூங்கும் நேரத்தில்
நான் உன்னை அணைப்பேன்
என்னாளும் எப்போதும்
உன் கையில் பொம்மையாவேன்

Watch me robot shake it
I know you want to break it
தொட்டு பேசும் போதும்
ஷாக்கடிக்கக் கூடும் காதல் செய்யும் நேரம்
மோட்டார் வேகம் கூடும்
இரவில் நடுவில் பேட்டரி தான் தீரும்

மெமரியில் குமரியை
தனிச் சிறை பிடித்தேன்
Shutdownனே செய்யாமல்
இரவினில் துடித்தேன்
சென்சார் எல்லாம் தேயத்தேய
நாளும் உன்னை படித்தேன்
உன்னாலே தானே என்
விதிகளை மறந்தேன்

எச்சில் இல்லா எந்தன் முகம்
சர்ச்சை இன்றிக் கொள்வாயா
ரத்தம் இல்லாக் காதல் என்று
ஒத்திப் போகச் சொல்வாயா
உயிரியல் மொழிகளில்
எந்திரன் தானடி
உளவியல் மொழிகளில்
இந்திரன் நானடி
சாதல் இல்லா சாபம் வாங்கி
மண்மேலே வந்தேனே
தேய்மானமே இல்லா
காதல் கொண்டு வந்தேனே

ஹேய் ரோபோ மயக்காதே
you wanna come and get it boy
Oh are you just a robot toy
I don't want to break you
Even if it takes to
kind of like a break through
you don't even need a clue
you be my man's back up
I think you need a checkup
I can melt Your heart down
May be if you got one
We doing that for ages
since in time of sages

முட்டாதே ஓரம்போ
நீ என் காலைச் சுற்றும் பாம்போ
காதல் செய்யும் ரோபோ
நீ தேவையில்லை போ போ

(இரும்பிலே..)
iRobo உன் காதில்ஐ லவ் யூ சொல்லட்டா
iRobo உன் காதில்ஐ லவ் யூ சொல்லட்டா
I am a super girl உன் காதல் rapper girl
I am a super girl உன் காதல் rapper girl
- கார்க்கி
 
Add a comment

தத்தி தாவும் paper நான்

படம்:பாஸ் என்ற பாஸ்கரன்


தத்தி தாவும் paper நான்
என்னை boata போல செஞ்சாலே
கிக் ஏத்தி ஏத்திதான்
என்னை கவுத்தாலே
Inku போன பெண்ணை நான்
வந்து wine-அ ஊத்தி போனாலே
மப்பு ஏத்தி ஏத்திதான்
மெல்ல ஒடச்சாலே
என்ன பாடுறேன் என்ன பேசுறேன்
எனக்கு புரிய -வில்லை
எங்கு போகிறேன் என்ன பண்ணுறேன்
எனக்கு தெரிய -வில்லை
உன்சொந்தம் நான் என் அன்பு நீ
உன் mummy என் aunty
உன் sister-உம் என் brother-போல்
என்றுமே நாம் வாழலாம் வா வா
சட்டை பக்கெட் -இல் வைக்கிற
Cigaratte பக்கெட் -ah மாறுற
Heart-u பக்கத்தில் செல்லமா
சீண்டுற -aahhhh
Hero honda-va ஓட்டுறேன்
Hero-போலவே மத்துற
Zero பக்கத்தில் கோடுத்தான்
போடுற -aahhhh
College போயும் தேரல
Knowledge எதுவும் ஏறல
Marriage பண்ண தேவல
மானே உடனே வா
தத்தி தாவும் paper நான்
என்னை boata pola செஞ்சாலே
கிக் ஏத்தி ஏத்திதான்
என்னை கவுத்தாலே
Inku போன பெண்ணை நான்
வந்து wine-அ ஊத்தி போனாலே
மப்பு ஏத்தி ஏத்திதான்
மெல்ல ஒடச்சாலே
Town-nu bus-ula ஏறியே
Ticket வாங்கி நீ நீட்டுனா
வெது டிக்கெட் -உம் lottery ஆகுமே
England-huku ராணியா
English நீ பேசினா
ABCD-a நேசிக்க தோணுமே
Incomeing calluku காசு இல்ல
Outgoing callukum காசு இல்ல
உன் number தவிர பேசல
மானே உடனே வா
-நா. முத்துகுமார்
Add a comment

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி