திரையில் மலர்ந்த கவிதைகள்
கள்வரே கள்வரே
- விவரங்கள்
- பிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்
- வெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 23 ஜனவரி 2012 18:00
- எழுத்தாளர்: வைரமுத்து
- படிப்புகள்: 1800




கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே
கை கொண்டு பாரீரோ
கண் கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ
உம்மை எண்ணி உம்மை எண்ணி
ஊமைக் கண்கள் தூங்காது
தலைவா என் தலைவா
அகமறிவீரோ அருள் புரிவீரோ
வாரந்தோறும் அழகின் பாரம்
கூடும் கூடும் குறையாது
உறவே என் உறவே
உடை களைவீரோ
உடல் அணிவீரோ
என் ஆசை என் ஆசை
நானா சொல்வேன்
என் ஆசை நானா சொல்வேன்
என் ஆசை நீயே சொன்னாய்
கண்ணாலே ஆமாம் என்பேனே
எங்கெங்கே உதடும் போகும்
அங்கெங்கே உயிரும் போகும்
அன்பாளா ஆளச் சொன்னேனே
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்
தமிழுக்குத் தெரிகின்றதே
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்
தங்களுக்குத் தெரிகின்றதா?
-வைரமுத்து
Add a comment
அம்மா உன் பிள்ளை நான்
- விவரங்கள்
- பிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்
- வெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 16 ஜனவரி 2012 18:00
- எழுத்தாளர்: வாலி
- படிப்புகள்: 2749
படம்: நான் கடவுள்
அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ
உன் பாடல் ஒன்றுதான் என் சொந்தம் என்பதோ
எனை என்றும் காக்கவே எனை என்றும் காக்கவே
இது ஒன்று போதுமா அம்மா
அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ
காட்டோரம் ஓடும் நீரே நதியானதே
காட்டோரம் ஓடும் நீரே நதியானதே
ரோட்டோர வாழ்வு என்றே விதியானதே
விதியெனும் எழுத்தெல்லாம்
விழிநீரில் அழியும் ஓர் நேரம்
அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ
காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே
காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே
கரை கண்டிடாத ஓடம் தண்ணீரிலே
தரையிலா துயருக்கோர் கரைபோட்டுக் காட்டவா நீயே
அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ
ஜென்மங்களில் பாவம் பெண் ஜென்மமே
ஜென்மங்களில் பாவம் பெண் ஜென்மமே
பந்தங்கள் என்று சொன்னால் துன்பங்களே
பெண்களை சிலையிலே தொழுகின்ற உலகமே ஏன் சொல்
- வாலி
Add a commentகனாக் காணும் கண்கள் மெல்ல
- விவரங்கள்
- பிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்
- வெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 09 ஜனவரி 2012 18:00
- எழுத்தாளர்: வாலி
- படிப்புகள்: 1935

உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக் கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே!
குமரி உருவம் குழந்தை உள்ளம்
ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
தலைவன் மடியில் மகளின் வடிவில்
தூங்கும் சேயோ!
நொடியில் நாள் தோறும் நிறம் மாறும் தேவி
விடைதான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி!
விளக்கு ஏற்றி வைத்தால் கூட,
நிழல் போலத் தோன்றும் நிஜமே!
நிழல் போலத் தோன்றும் நிஜமே!
“நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன்
உன் நிழலையோ பூஜிக்கிறேன்
அதனால்தான்,
உன் நிழல் விழுந்த நிலத்தின் மண்ணைக்கூட
என் நெற்றியில் நீறு போல்,
திருநீறு போல் இட்டுக்கொள்கிறேன்”
புதிய கவிதை புனையும் குயிலே
நெஞ்சில் உண்டான காயம் என்ன?
நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும்
பாவம் என்ன
கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்
விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும்
வருங்காலம் இன்பம் என்று,
நிகழ்காலம் கூறும் கண்ணே!
நிகழ்காலம் கூறும் கண்ணே!
- வாலி
வெண்பனியே முன்பனியே
- விவரங்கள்
- பிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்
- வெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 02 ஜனவரி 2012 18:00
- எழுத்தாளர்: பா.விஜய்
- படிப்புகள்: 1793

வெண்பனியே முன்பனியே
என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா
உன் இருள் நேரங்கள்
உன் விழி ஈரங்கள்
தன்னாலே தேய்கிறதே
என் பனி காலங்கள்
பொன் வெய்யில் சாரல்கள்
உன்னால் உறைகிறதே
வெண்பனியே முன்பனியே
என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா
என் இருள் நேரங்கள்
என் விழி ஈரங்கள்
உன்னாலே தேய்கிறதே
என் பனி காலங்கள்
பொன் வெய்யில் சாரல்கள்
உன்னால் உறைகிறதே
ஒரு இமை குளிர
ஒரு இமை வெளிர
உனக்குள்ளே உறங்கினேன்
ஒரு இதழ் மலர
மறு இதழ் உலர
உனை அதில் உணர்கிறேன்
ஆதலால் அகம் மலர்ந்தது காதலால்
காய்ததால் இதழ் நனைந்தது தோய்தலால்
இணையின் இனம்
வெண்பனியே
ஹ்ம்ம்ஹ்ம்ம்
முன்பனியே
ஹ்ம்ம்ஹ்ம்ம்
என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே
ஹ்ம்ம்ஹ்ம்ம்
நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா
everything is chill now
all is gonna be alright
oh I will be there
I will be there for you
everything is chill now
frozen in love
lets warm and coze around now
இமைகளில் நனைந்து
இரு விழி நுழைந்து
இறங்கினாய் மனதுள்ளே
முதல் நொடி மரணம்
மறு நொடி ஜனனம்
எனக்குள்ளே எனக்குள்ளே
எவ்வனம் அதில் இவளோரு செவ்வனம்
சோவிதம் அதில் அலைந்திட வா நிதம்
கணம் கணமே
வெண்பனியே முன்பனியே
என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா
உன் இருள் நேரங்கள்
உன் விழி ஈரங்கள்
தன்னாலே தேய்கிறதே
என் பனி காலங்கள்
பொன் வெய்யில் சாரல்கள்
உன்னால் உறைகிறதே
பா.விஜய்
Add a commentயாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
- விவரங்கள்
- பிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்
- வெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011 18:00
- எழுத்தாளர்: சினேகன்
- படிப்புகள்: 2095

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
மீன்கொத்திய போல
நீ கொத்துர ஆள
அடி வெள்ளாவி வெச்சுத்தான்
வெளுத்தாங்களா உன்ன
வெய்யிலுக்கு காட்டாம
வளத்தாங்களா
நா தல காலு புரியாம
தர மேல நிக்காம
தடுமாறி போனேனே
நானே நானே
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
அடி வெள்ளாவி வெச்சுத்தான்
வெளுத்தாங்களா உன்ன
வெய்யிலுக்கு காட்டாம
வளத்தாங்களா
நா தல காலு புரியாம
தர மேல நிக்காம
தடுமாறி போனேனே
நானே நானே
===
புயல் தொட்ட மரமாகவே
தலை சுத்தி போகிறேன்
நீர் அற்ற நிலமாகவே
தாகத்தில் காய்கிறேன்
உனை தேடியே
மனம் சுத்துதே
ரா கோழியாய்
தினம் கத்துதே
உயிர் நாடியில்
பயிர் செய்கிறாய்
சிறு பார்வையில்
எனை நெய்கிறாய்
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
அடி சதிகாரி என்னடி செஞ்ச என்ன
நா சருகாகி போனேனே பாத்த பின்ன
நா தல காலு புரியாமா
தர மேல நிக்காமா
தடுமாறி போனேனே
நானே நானே
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
அடி நெஞ்சு அனல் ஆகவே
தீ அள்ளி ஊத்துர
நூல் ஏதும் இல்லாமலே
உசுர ஏன் கோக்குர
எனை ஏனடி
வதம் செய்கிறாய்
இமை நாளிலும்
உலை வைக்கிறாய்
கட வாயிலே
எனை நெய்கிறாய்
கண் ஜாடையில்
எனை கொல்கிறாய்
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
மீன்கொத்திய போல
நீ கொத்துர ஆள
அடி வெள்ளாவி வெச்சுத்தான்
வெளுத்தாங்களா உன்ன
வெய்யிலுக்கு காட்டாம
வளத்தாங்களா
நா தல காலு புரியாம
தர மேல நிக்காம
தடுமாறி போனேனே
நானே நானே
எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது
- விவரங்கள்
- பிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்
- வெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 19 டிசம்பர் 2011 18:00
- எழுத்தாளர்: பா. விஜய்
- படிப்புகள்: 1940
