கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

திரையில் மலர்ந்த கவிதைகள்

ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே

படம் : நண்பன்
ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே
அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ - ஐ
அஸ்த் அஸ்த் லைபே
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே - லவ்
இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே

அத்தனை மொழியிலும்
வார்த்தை ஒவ்வொன்று கொய்தேன்
மொத்தமாய் கோர்த்துதான்
காதல் செண்டொன்று செய்தேன்.

உன்னிடம் நீட்டினேன்
காதலை காட்டினேன்..
ஏனோ தன்னாலே உன் மேலே
காதல் கொண்டேனே!
ஏதோ உன்னாலே என் வாழ்வில்
அர்த்தம் கண்டேனே!

ப்ளுட்டோவில் உனை நான் கூடேற்றுவேன்
விண்மீன்கள் பொறுக்கி சூடேற்றுவேன்
முக்கோணங்கள் படிப்பேன்
உன் மூக்கின் மேலே
விட்டம் மட்டம் படிப்பேன்
உன் நெஞ்சின் மேலே
மெல்லிடையோடு வளைகோடு நான் ஆய்கிறேன்.

ப்ளாட்டோவின் மகனாய் உன் வேடமா?
ஆராய்ச்சி நடத்த நான் கூடமா?
பாழும் நோயில் விழுந்தாய்
உன் கண்ணில் கண்டேன்
நாளும் உண்ணும் மருந்தாய்
என் முத்தம் தந்தேன்
உன் நெஞ்சில் நாடிமானி வைக்க
காதல் காதல் என்றே கேட்க


தே ஜா வூ கனவில் தீ மூட்டினாய்
ராஜா என் மனதை ஏன் வாட்டினாய்
கப்பம் கேட்டு மிரட்டி - நீ
வெப்பம் கொண்டாய்
ரத்தம் மொத்தம் கொதிக்க என்
பக்கம் வந்தாய்
வெண்ணிலவாக இதமாக குளிரூட்டவா?

கண்ணாடி நிலவாய் கண் கூசினாய்
வெண்வண்ண நிழலை மண் வீசினாய்
புல்லில் பூத்த பனி நீ -
ஒரு கள்ளம் இல்லை
வைரஸ் இல்லா கணிணி - உன்
உள்ளம் வெள்ளை
நீ கொல்லை மல்லி முல்லை போலே
பிள்ளை மெல்லும் சொல்லைப் போலே

- மதன் கார்க்கி
Add a comment

அம்மா என்றழைக்காத உயிரில்லையே

படம்: மன்னன்

 


பாடல்: அம்மா என்றழைக்காத உயிரில்லையே
குரல்: கே ஜே ஏசுதாஸ்
வரிகள்: வாலி

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது

(அம்மா)

அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நாந்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே

(அம்மா)

பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
இவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே

 

-கவிஞர் வாலி

Add a comment

கம்பன் ஏமாந்தான்

படம் : நிழல் நிஜமாகிறது

 

 

கம்பன் ஏமாந்தான்
இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்

அம்பு விழி என்று ஏன் சொன்னான்
அது பாய்வதினால் தானோ
அம்பு விழி என்று ஏன் சொன்னான்
அது பாய்வதினால் தானோ - அவள்
அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான்
அது கொதிப்பதனால் தானோ

தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்
தீபத்தின் பெருமையன்றோ
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்
தீபமும் பாவமன்றோ

வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு
வரிசையை நான் கண்டேன் - அந்த
வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட
நானும் ஏமந்தேன்

ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்
அடுப்படி வரைதானே - ஒரு
ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்
அடங்குதல் முறைதானே

கம்பன் ஏமாந்தான்

 

-கண்ணதாசன்

Add a comment

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

படம் : சிம்லா ஸ்பெஷல்

 

http://www.shotpix.com/images/75378667222379150562.jpg

 

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம்
நடிகரென மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம்

ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
ஆடாத மே.......டை இல்லை போடாத வேஷம் இல்லை

சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை
கால் கொண்டு ஆ...டும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
கால் கொண்...டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
உன் கையில் அந்த நூலா (ஹ) நீ சொல்லு நந்தலாலா

யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு

பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று
பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று

பால் போ..லக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நானென்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா

 

-வாலி

Add a comment

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே

படம்: வைதேகி காத்திருந்தாள்

 

 

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமாவ்..
கண் திறந்தாள் சுகம் வருமோ..

 

பூங்குயில் சொன்னது காதலின் மந்திரம் பூமகள் காதினிலே
பூவினை தூவிய பாயினில் பெண் மனம் பூத்திடும் வேளையிலே
நாயகன் கைதொடவும் வந்த நாணத்தை பெண் விடவும்
நாயகன் கைதொடவும் வந்த நாணத்தை பெண் விடவும்..
மஞ்சத்திலே கொஞ்ச கொஞ்ச.. மங்கை உடல் கெஞ்ச கெஞ்ச..
சுகங்கள் சுவைக்கும் இரண்டு விழிகளில்..

 

மாவிலைத் தோரணம் ஆடிய காரணம் தேவியின் திருமணமோ..
ஆலிலையோ தொட ஆளில்லையோ அதில் ஆடிடும் என் மனமோ..
காதலின் பல்லவியோ.. அதில் நான் அனுபல்லவியோ..
காதலின் பல்லவியோ.. அதில் நான் அனுபல்லவியோ..
அங்கத்திலே ஏழு ஸ்வரம் இன்பத்திலே நூறு வரம்
மிதந்து மறந்து மகிழ்ந்தா நெஞ்சத்தில்

 

-வாலி

Add a comment

ஒன்னுக்கொன்னு துணையிருக்கும்

படம்: நந்தலாலா

 

http://1.bp.blogspot.com/_Eeg1ZgkkAXA/TPEnvtrZotI/AAAAAAAAAXw/HD3rz5eB0Rs/s1600/nandalala.jpg

 

ஒன்னுக்கொன்னு துணையிருக்கும் உலகத்திலே
அன்பு ஒன்னுதான் அனாதையா

யாரு இதை கண்டுகொள்வார்?
கைகளிலே ஏந்திக்கொள்வார்?
சொந்தம் சொல்ல யார் வருவார்?
அன்புக்கு யார் அன்பு செய்வார்?

உன்னைப் போல என்னை எண்ணினால்
நெஞ்சில் கங்கை ஆறு ஓடுமே
துன்பம் தீர்க்க நீளும் கைகளில்
சொர்க்கம் வந்து கை கோர்க்குமே
கோவில் குளம் யாவும் இங்கே
அன்பின் அடையாளம் அல்லவா
ஏழைக்கென்று தந்ததெல்லாம்
ஈசன் கையில் சேருமல்லவா
கண்களில்லா மனிதருக்கு
கால்களென நாம் நடந்தால்
நம் பூமியில் அனாதை யார்? அனாதை யார்?

மண்ணில் தானே எல்லைக்கோடுகள்
மனதில் கோடு யார் போட்டது?
பெற்றால்தானா பிள்ளை பூமியில்
எல்லாம் எல்லாம் நம் பார்வையில்
நாதியற்ற பூவும் இல்லை
நட்டு வைத்ததால் வந்தது
நாதியற்றா நாம் பிறந்தோம்?
அன்னை இன்றி யார் வந்தது?
எங்கிருந்தோ இங்கு வந்தோம்
வந்ததெல்லாம் சொந்தங்களே
நம் பூமியில் அனாதை யார்? அனாதை யார்?

 

-மு.மேத்தா

 

Add a comment

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி