திரையில் மலர்ந்த கவிதைகள்
கண்ணில் பார்வை போனபோதும்
- விவரங்கள்
- பிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்
- வெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 01 ஜூன் 2009 19:00
- எழுத்தாளர்: கவிஞர் வாலி
- படிப்புகள்: 1878
படம்: நான் கடவுள்
கண்ணில் பார்வை போனபோதும்
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கண்ணில்லாத பேரைக் கண்டால்
கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்
கனவில் கூட இன்பம்
வராமல் இந்த ஜென்மம்
ஓ தெய்வமே இது சம்மதமோ?
யார்க்கும் போலொரு அன்னை தந்தை
எனக்கும் இருந்தது உண்டு
யார்க்கும் போலொரு தேகம் தாகம்
எனக்கும் வளர்ந்தது இன்று
யார்க்கும் போலே விழிகள் இருந்தும்
உலகமோ இருளில்
ஒளியைப் போலே ஒரு துணை
வந்து சென்ற துன்பம் யார்க்கும் உண்டோ?
வீதி என்றொரு வீடும் உண்டு
எனக்கு அது சொந்தமென்று
வானம் என்றொரு கூரை உண்டு
விழிகளும் அறியாது
வேலியில்லா சோலைக்காக
வந்ததோர் காவல்
கண்கள் கொண்ட தெய்வமும்
காவலையும் கொண்டு சென்றதேனோ?
- வாலி
இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை?
- விவரங்கள்
- பிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்
- வெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 25 மே 2009 19:00
- எழுத்தாளர்: கண்ணதாசன்
- படிப்புகள்: 2938
படம் : எங்கள் தங்க ராஜா
இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்த கோலம்
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை
இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்த கோலம்
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை
ம்ம்… இருவர் என்பது இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை..
பாதி கண்ணை மூடி திறந்து பார்ப்பதில் இன்பம்
பாதி தூக்கத்தில் கூந்தலை தடவி ரசிப்பதில் இன்பம்
ஆ..ஆ..ஆ..பாதி கண்ணை மூடி திறந்து பார்ப்பதில் இன்பம்
பாதி தூக்கத்தில் கூந்தலை தடவி ரசிப்பதில் இன்பம்
பாதி பாதியாய் இருவரும் மாறி
பழகும் வித்தையே பள்ளியில் இன்பம்
காலை என்பதே துன்பம் இனிமேல்
மாலை ஒன்று தான் இன்பம்
காலை என்பதே துன்பம் இனிமேல்
மாலை ஒன்று தான் இன்பம்
…. இரவுக்கும் பகலுக்கும் …
ஆடை எதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்
அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம்
ஆ,,ஆ,,ஆடை எதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்
அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம்
காலை நேரத்தில் காயங்கள் பார்த்து
தவிப்பதென்பது கவிதையின் விளக்கம்
கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல்
காணப்போவது மஞ்சம்
ம்ம்..ம்ம்..கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல்
காணப்போவது மஞ்சம்
…. இரவுக்கும் பகலுக்கும் …
- கண்ணதாசன்
Add a commentவாரணமாயிரம் சூழ வலம் செய்து
- விவரங்கள்
- பிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்
- வெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 18 மே 2009 19:00
- எழுத்தாளர்: ஆண்டாள்
- படிப்புகள்: 3235
படம்: கேளடி கண்மணி
வாரணமாயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான்
வாரணமாயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான்
என்னெதிர் பூரண பொற்குடம்
வைத்து புறமெங்கும் தோரணம் நாட்ட
கனாக் கண்டேன்.. தோழி நான் கனாக் கண்டேன்
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்திருந்தென்னை மகட்பேசி மந்திரித்து
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்திருந்தென்னை மகட்பேசி மந்திரித்து
மந்திர கோடியுடித்தி மணமாலை….
மந்திர கோடியுடித்தி மணமாலை
அந்தரி சூட்ட கனாக்கண்டேன்…
தோழி.. நான் கனாக்கண்டேன்.
வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்
வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்
மாசிலை நாணல் கொடுத்து உட்பரிதி வைத்து
மாசிலை நாணல் கொடுத்து உடபரிதி வைத்து
காய்சின மாகளிர நன்னான் என் கைப்பற்றி
தீ வலம் செய்ய கனாக்கண்டேன்
தோழி.. நான் …கனாக்கண்டேன்
- ஆண்டாள்
Add a commentபனி விழும் மலர் வனம்
- விவரங்கள்
- பிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்
- வெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 11 மே 2009 19:00
- எழுத்தாளர்: வைரமுத்து
- படிப்புகள்: 2436
படம் : நினைவெல்லாம் நித்யா
பனி விழும் மலர் வனம்
உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர் வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் தனிமரம் ஏஹே
இனி வரும் முனிவரும்
தடுமாறும் தனிமரம்
பனி விழும் மலர் வனம்
உன் பார்வை ஒரு வரம்
சேலை மூடும் இளஞ்சோலை
மாலை சூடும் மலர் மாலை
சேலை மூடும் இளஞ்சோலை
மாலை சூடும் மலர் மாலை
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும் ஏஹே
இளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும்
கைகள் இடைதனில் நெளிகையில் இடைவெளி குறைகையில்
எரியும் விளக்குச் சிரித்துக் கண்கள் மூடும்
காமன் கோவில் சிறைவாசம்
காலை எழுந்தால் ஹஹஹ பரிகாசம்
காமன் கோவில் சிறைவாசம்
காலை எழுந்தால் பரிகாசம்
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே ஏஹே
வியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இரு விழி
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி
- வைரமுத்து
அனல் மேலே பனித்துளி
- விவரங்கள்
- பிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்
- வெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 04 மே 2009 19:00
- எழுத்தாளர்: தாமரை
- படிப்புகள்: 2746
படம்: வாரணம் ஆயிரம்
அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவை தானே இவள் இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி
எந்த காற்றின் அலாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ
எந்த தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ
ஒரு சிறு வலி இருந்ததுவே இதயத்திலே இதயத்திலே
உனதிருவிழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே
உதிரட்டுமே உடலின் திரை
அதுதான் இன் நிலாவின் கறை கறை
சந்தித்தோமே கனாக்களில் சிலமுறையா பலமுறையா
அந்திவானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா
இரு கரைகளை உடைத்திடவே பெருகிடுமா கடலலையே
இரு இரு உயிர் தத்தளிக்கையில் வழி சொல்லுமா கலங்கரையே
உயரலைகள் எனை அடிக்க
கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட
- தாமரை
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
- விவரங்கள்
- பிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்
- வெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009 19:00
- எழுத்தாளர்: பா.விஜய்
- படிப்புகள்: 2678
படம்: ஆட்டோகிராப்
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போகக் கூடாது
என்ன இந்த வாழ்கையென்றே
எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயமெல்லாம்
மாறிப்போகும் மாயங்கள்
உளி தாங்கும் கற்கள் தானே
மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஓரு கனவு கண்டால்
அதை தினமும் என்றால்
ஓரு நாளில் நிஜமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் பொர்க்களமே
வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானமளவு யோசிப்போம்
மகிழ்ச்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போலே சுவாசிப்போம்
லட்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை
உறுதியோடு போராடு
மனிதா உன் மனதை கீரி
விதை போடு மரமாகும்
அவமானம் படுதொல்ல்வி
எல்லாமே உறவாகும்
தோல்வியின்றி வரலாறா?
துக்கம் என்ன என் தோழா?
ஓரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
- பா.விஜய்
Add a comment