கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

திரையில் மலர்ந்த கவிதைகள்

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ

படம் : உலகம் சுற்றும் வாலிபன்  
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம்மாறி நீந்துகின்ற குழலோ

மாதுளையின் பூப்போலே மலருகின்ற இதழோ
மாதுளையின் பூப்போலே மலருகின்ற இதழோ
மானினமும் மீனினமும் மயங்குகின்ற விழியோ
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ
நீந்துகின்ற குழலோ

புருவமொரு வில்லாக பார்வையொருக் கணையாக
புருவமொரு வில்லாக பார்வையொருக் கணையாக
பருவமொரு களமாகப் போர் தொடுக்கப் பிறந்தவளோ
குறு நகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில்
குறு நகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில்
தேன் சுவையைத் தான் குழைத்து
கொடுப்பதெல்லாம் இவள் தானோ

பவழமென விரல் நகமும் பசுந்தளிர் போல் வளை கரமும்
தேன் கனிகள் இருபுறமும் தாங்கி வரும் பூங்கொடியோ
ஆழ்கடலின் சங்காக நீள் கழுத்து அமைந்தவளோ
ஆழ்கடலின் சங்காக நீள் கழுத்து அமைந்தவளோ
யாழிசையின் ஒலியாக வாய்மொழி தான் மலர்ந்தவளோ

செந்தழலின் ஒளி எடுத்து சந்தனத்தின் குளிர் கொடுத்து
பொன் தகட்டில் வார்த்து வைத்த
பெண்ணுடலை என்னவென்பேன்
மடல் வாழைத் துடையிருக்க மச்சம் ஒன்று அதிலிருக்க
மடல் வாழைத் துடையிருக்க மச்சம் ஒன்று அதிலிருக்க
படைத்தவனின் திறமை எல்லாம்
முழுமை பெற்ற அழகியென்பேன்

- கவிஞர் வாலி
Add a comment

வெட்டிவேரு வாசம்

படம்: முதல் மரியாதை
வெட்டிவேரு வாசம்
வெட்டிவேரு வாசம்
வெடலப்புள்ள நேசம்
வெட்டிவேரு வாசம்
வெடலப்புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு
பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ….மானே

பச்சைக்கிளியோ தொட்டுக்கிருச்சு
இச்சைக்கிளியோ ஒத்துக்கிருச்சு
வச்ச நெருப்பு தொட்டுக்கிருச்சு
பச்ச மனசு பத்திக்கிருச்சு
கைய கட்டி நிக்கச்சொன்னா
காட்டு வெள்ளம் நிக்காது
காதல் மட்டும் கூடாதுன்னா
பூமி இங்கு சுத்தாது
சாமிகிட்ட கேளு
யாரு போட்ட கோடு
பஞ்சுக்குள்ள தீய வச்சு
பொத்தி வச்சவுக யாரு

ஒன்னக்கண்டு நான் சொக்கி நிக்கிறேன்
கண்ணுக்குள்ள நான் தண்ணி வைக்கிறேன்
சொல்லாமத்தான் தத்தளிக்கிறேன்
தாளமத்தான் தள்ளி நிக்கிறேன்
பாசம் உள்ள தர்மம் இத
பாவமின்னு சொல்லாது
குருவி கட்டும் கூட்டுக்குள்ள குண்டு வைக்கக்கூடாது
புத்தி கெட்ட தேசம் பொடி வச்சு பேசும்
சாதிமத பேதம் எல்லாம் முன்னவங்க செஞ்ச மோசம்

- வைரமுத்து
Add a comment

தூது செல்வதாரடி

படம்: சிங்கார வேலன்
தூது செல்வதாரடி
தூது செல்வதாரடி
உருகிடும்போது செய்வதென்னடி
ஒஹ் வான் மதி மதி மதி மதி
அவர் என் பதி பதி
என் தேன் மதி மதி மதி
கேள் என் சகி சகி சகி
உடன் வர
தூது செல்வதாரடி
உருகிடும்போது செய்வதென்னடி

பெண்ணழகு பூச்சூடி பொட்டு வைத்து
மன்னவனின் சீர் பாடி மெட்டு போடுது
சென்ற சில நாளாக நெஞ்சம் மாருதேன்
செல்வன் அவன் தோள் சேர கண்கள் தேடுதே
நிலை பாரடி கண்ணமா பதில் கூறடி பொன்னமா
என் காதல் வேலன் உடன் வர

- பொன்னடியன்
Add a comment

கண்ணாலே காதல் கவிதை

படம்: ஆத்மா
கண்ணாலே காதல் கவிதை
கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதைத் தந்தாளே அதற்காக
கல்லூரி வந்து போகும் வானவில் நீதான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே

கடற்கரைதனில் நீயும் நானும் உலவும்பொழுது
பறவையைப் போல் கானம் பாடி பறக்கும் மனது
இங்கு பாய்வது புதுவெள்ளமே
இணை சேர்ந்தது இரு உள்ளமே
குளிர்வாடை தான் செந்தளிரிலே
இந்த வாலிபம் தன் துணையிலே
இளம்மேனி உன் வசமோ

உனக்கென மணிவாசல் போலே மனதைத் திறந்தேன்
மனதிற்குள் ஒரு ஊஞ்சல் ஆடி உலகை மறந்தேன்
வளையோசைகள் உன் வரவைக் கண்டு
இசை கூட்டிடும் என் தலைவன் என்று
நெடுங்காலங்கள் நம் உறவைக் கண்டு
நமை வாழ்த்திட நல் இதயம் உண்டு
இன்ப ஊர்வலம் இதுவோ

- கவிஞர் வாலி
Add a comment

எங்கேயும் காதல்

படம்: எங்கேயும் காதல்
எங்கேயும் காதல்

எங்கேயும் காதல்...
விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச...
விண்காலை சாரல்...
முகத்தினில் வந்து சட்டென்று மோத...
கொள்ளாத பாடல்...
பரவசம் தந்து பாதத்தில் ஓட...
முதல்வரும் காதல்...
மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும்...
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே!
வானே வண்ண மீனே!
மழை வெயில் என நான்கு காலம் நீயே!

கடற்கரையில் அதன் மணல் வெளியில்
அக்காற்றோடு காற்றாக
பலகுரல்கள் பல பல விரல்கள்
தமை பதிவு செய்திருக்கும்
விடியலிலும் நடு இரவினிலும்
இது ஓயாதே ஓயாதே
சிரிப்பினிலும் பல சினுங்களிலும்
மிக கலந்து காத்திருக்கும் ..
ஒ பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும்
உள்ளம் தாங்காது தாங்காதே
கண்கள்தான் பின்பு தூங்காதே

அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும்
யார் சொன்னாலும் கேட்காதே ..
தர மறுக்கும் பின் தலைகொடுக்கும்
இது புரண்டு தீர்திடுமே ..
முகங்களையோ உடல் நிரங்கலையோ
இது பார்க்காதே .. பார்க்காதே ..
இரு உடலில் ஓர் உயிர் இருக்க
அது முயன்று பார்த்திடுமே ..
யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்
அங்கே பூந்தோட்டம் முண்டாகும்
பூசென்றாய் பூமி திண்டாடும் ..

- தாமரை
Add a comment

தீ இல்லை புகை இல்லை

படம்: எங்கேயும் காதல்
தீ இல்லை புகை இல்லை
தீ இல்லை புகை இல்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே
பூ இல்லை மடல் இல்லை
புது தேனை பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்ன சின்னதாய்

ஓ ஓ ... விலையாய் தந்தேனே என்னை
ஓ ஓ ... வாங்கிக் கொண்டேனே உன்னை
ஓ ஓ ... ஆடை கொண்டதோ தென்னை

வெகு நாளாய் கேட்டேன் , விழி தூறல் போட்டாய்
உயிர் பயிர் பிழைத்தது உன்னாலே
விலகாத கையை தொட்டு விழியோர மையை தொட்டு
உயிர் ஒன்று எழுதிடு உதட்டாலே
விலக்கிய கனியை விழுங்கியது விழுங்கிய நெஞ்சம் புழுங்கியது
இது ஒரு சாட்சி போதாதா கண்கள் மோதாதா காதல் ஒதாதா  

ஓ புனல் மேலே வீற்று பனி வாடை காற்று  
புனைந்தது நமக்கொரு புது பாட்டு
கடற்கரை நாரை கூட்டம் கரைந்திங்கு ஊரை கூட்டும்
இருவரும் நகர்வலம் வரும் பார்த்து
சிலு சிலு வென்று குளிர் அடிக்க,
தொடு தொடு என்று தளிர் துடிக்க
எனக்கொரு பார்வை நீதானே  
என்னை எடுப்பாயா உன்னில் ஒளிப்பாயா

- கவிஞர் வாலி
Add a comment

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி