கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

திரையில் மலர்ந்த கவிதைகள்

பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்

படம் : வருஷம் 16
பழமுதிர்ச் சோலை
பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
நான் தான் ஒரு ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்

தூரத்தில் போகின்ற மேகங்களே
தூரல்கள் போடுங்கள் பூமியிலே
வேர்கொண்ட பூஞ்சோலை நீர்கொண்டு ஆட
ஏரியில் மீன்கொத்தும் நாரைகளே
இறகுகள் எனக்கில்லை தாருங்களே
ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட
பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும்
பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும்
ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே

பந்தங்கள் யாவும் தொடர்கதைபோல்
நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்
நூலிழை போல் இங்கு நெய்கின்ற இதயங்கள்
பாலுடன் நெய்யெனக் கலந்திடும் நாள்
தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உறவுகல் மேவி
பிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே
மண்ணில் இதைவிட சொர்க்கமெங்கே
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க
இடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திளைத்திட
- கவிஞர் வாலி
Add a comment

எழுது எழுது என் அன்பே

படம் : காதல் கடிதம்

எழுது எழுது என் அன்பே-ஒரு
கடிதம் எழுது என் அன்பே
உன்னை நான் நேசிக்கிறேன்
அதனால் தானே சுவாசிக்கிறேன்
பனியில் உறையும் என் விழிகள்-ஒரு
நொடியில் உருகிடும் உனைப்பார்த்து
பாசம் நேசம் தருவாயே-என்பாதை
எங்கும் வருவாயே பார்த்த விழி பூத்திருந்தேன்-என்
பார்வை நீயேன் வரவில்லை ?
அலையாக நீ வந்து அணைப்பாயா-அந்தி
மழையாக என்னை வந்து நனைப்பாயா?

மனசில் பூக்கும் என் பூக்கள்- உன்
மாலை ஆகும் வேளை வரும்
பூவின் வாசம் தருவாயே - என்
மேனி எங்கும் சிலிர்ப்பாயே - இங்கு
எனக்காக நீ வந்து கவிபாடு- அங்கு
இருளோடு உனக்கென்ன விளையாட்டு-என்
உயிரோடும் உடலோடும் நீதானே- உன்
உறவாலே எனை வந்த தாலாட்டு

காதல் வாழ்க காதல் வாழ்க
பூமி சுற்றும்வரை காற்று உள்ளவரை
காதல் வாழ்க காதல் வாழ்க
- வசீகரன்
Add a comment

ஒருவன் ஒருவன் முதலாளி

படம் : முத்து
ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி - அதை
வென்று முடிப்பவன் அறிவாளி

பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு
பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

மண்ணின் மீது மனிதனுக்காசை
மனிதன் மீது மண்ணுக்காசை
மண்ணின் மீது மனிதனுக்காசை
மனிதன் மீது மண்ணுக்காசை
மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது
இதை மனம்தான் உணர மறுக்கிறது
கையில் கொஞ்சம் காசு இருதால்
நீதான் அதற்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால்
அதுதான் உனக்கு எஜமானன்
வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு
வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு


வானம் உனக்கு பூமியும் உனக்கு
வரப்புகளோடு சண்டைகள் எதற்கு
வானம் உனக்கு பூமியும் உனக்கு
வரப்புகளோடு சண்டைகள் எதற்கு
வாழச் சொல்வது இயற்கையடா
வாழ்வில் துன்பம் செயற்கையடா
பறவைகள் என்னைப் பார்க்கும்போது
நலமா நலமா என்கிறதே
மொட்டுக்கள் மெல்லத் திறக்கும்போது
முத்து முத்து என்கிறதே
இனிமை இனிமேல் போகாது - அட
முதுமை எனக்கு வாராது
- வைரமுத்து
Add a comment

ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளிப் பெண்மேலே

படம்: ஆதவன்


ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளிப் பெண்மேலே
தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளேப் போனாய் நீ போனாய்
என் நெஞ்சம் என்ன மெத்தைதானா
கூறாய் நீ கூறாய் உனை பூட்டிக் கொண்டாயே
வாராய் நீ வாராய் இனி என்னைவிட்டு எங்கும் செல்ல மாட்டாய்
மாட்டாய் மாட்டாயே

மௌனம் என்னும் சட்டை வீசி என்னைக் கீராதே
மாலைத்தென்றல் பட்டால் கூட காயம் ஆறாதே
அக்கம் பக்கம் யாரும் இல்லை வா என் பக்கம்
தேடல் கொஞ்சம் கூடல் கொஞ்சம் நீ யார் பக்கம்
ஏதோ ஒன்று என்னைத் தள்ள
நதிகளின் ஓரம் நாணல் போலே சாய்ந்தேன்
உன்னை மட்டும் எண்ணி எண்ணி
நிலவைப்போலே நீ இல்லாமல் தேய்ந்தேன் ஓ..

நானும் நீயும் பேசும்போது தென்றல் வந்ததே
பேசிப்போட்ட வார்த்தையெல்லாம் அள்ளிச்சென்றதே
சேலை ஒன்றும் மாலை ஒன்றும் வாங்கி வந்தாயா
சேதி நல்ல சேதி சொன்னால் வேண்டாம் என்பாயா
திரும்பிய பக்கம் எல்லாம் நீதான் நின்றாய்
காற்றைப்போலே தொட்டு தொட்டு
தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே சென்றாய்
ஹோ ஹோ

- தாமரை
Add a comment

விழியில் விழுந்து இதயம் நுழைந்து

பாடல்: அலைகள் ஓய்வதில்லை
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும்
அந்திப் பொழுதினில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன்
உயிரைத் திருப்பித் தந்து விடு

உன் வெள்ளிக் கொலுசொலியை
வீதியில் கேட்டால்
அத்தனை ஜன்னலும் திறக்கும்
நீ சிரிக்கும்போது பௌளர்ணமி நிலவு
அத்தனை திசையும் உதிக்கும்
நீ மல்லிகைப் பூவை சூடிக்  கொண்டால்
ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்
நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டால்
பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்


கல்வி கற்க காலை செல்ல
அண்ணன் ஆணையிட்டான்
காதல் மீன்கள் இரண்டில் ஒன்றைத்
தரையில் தூக்கிப் போட்டான்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும்
அந்திப் பொழுதின் போது
அலையின் கரையில் காத்திருப்பேன்
அழுத விழிகளோடு
எனக்கு மட்டும் சொந்தம்
உனது இதழ் கொடுக்கும் முத்தம்
எனக்கு மட்டும் கேட்கும்
எனது உயிர் கொதிக்கும் சத்தம்

- வைரமுத்து
Add a comment

நீல வான ஓடையில்

படம் : வாழ்வே மாயம்
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள்
நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா

காளிதாசன் பாடினான் மேகதூதமே
தேவிதாசன் பாடுவான் காதல் கீதமே
இதழ்களில் தேன்துளி
ஏந்திடும் பைங்கிளி
இதழ்களில் தேன்துளி
ஏந்திடும் பைங்கிளி
நீயில்லையேல் நானில்லையே
ஊடல் ஏன் கூடும் நேரம்

நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள்
நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி

நானும் நீயும் நாளைதான் மாலை சூடலாம்
வானம் பூமி யாவுமே வாழ்த்துப் பாடலாம்
விழியில் ஏன் கோபமோ
விரகமோ தாபமோ
விழியில் ஏன் கோபமோ
விரகமோ தாபமோ
ஸ்ரீதேவியே என் ஆவியே
எங்கே நீ அங்கே நான்தான்

நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள்
நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
- கவிஞர் வாலி
Add a comment

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி