கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

நெஞ்சம் எனும் ஊரினிலே

படம் : ஆறு
நெஞ்சம் எனும் ஊரினிலே
நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டி கொள்ள வந்தாயே

வாழ்கை எனும் வானத்திலே
மனசு எனும் மேகத்திலே
ஆசை எனும் மழையினிலே
எனை சொட்ட சொட்ட நனைத்தாயே

நான் தனியாய் தனியாய் இருந்தனே
நீ துணையாய் துணையாய் வந்தாயே
இன்று இதமாய் இதமாய் தொலைந்தானே
காதலே…

ஹே காத்துல ஏணி வச்சு
உன் மூச்சுல இறங்கிடுவேன்
நெருப்புல வீடு கட்டி
உன் நெனப்புல வாழ்ந்திடுவேன்
பேனா எடுத்த தானா கைகள்
உன் பேரை தான் எழுதியதே
கோயில பாத்த தானா கைகள்
உனக்காகதான் கும்பிடுதே

கண்ணுல கையுரு கட்டி
உன் உருவத்த புடிச்சிக்குவேன்
மண்ணுல நான் விழுந்து
உன் நிழலையும் ஏந்திக்குவேன்
மழை வரும் போது
நீ வந்து ஒதுங்கின
கூந்தல விரிச்சு குடை புடிப்பேன்
நீ அழ வேண்டாம் இந்திய நாட்டில்
வெங்காயத்தை தடை விதிப்பேன்

- நா.முத்துகுமார்

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி