கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட

படம் : மெட்டி

மெட்டி ஒலி
மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட
மேனி ஒரு பூவாக, மெல்லிசையின் பாவாக
கோதை மலர் பூம்பாதம் வாவென்றதே


ஓ....
வாழ்நாளெல்லாம் உன்னோடு தான் வாழ்ந்தாலே போதும்
வாழ்வென்பதின் பாவங்களை நாம் காண வேண்டும்
நாளும் பல நன்மை காணும் எழில் பெண்மை
பூவை வைத்த பூவாசம் போதை கொண்ட உன் நேசம்
தென்றல் சுகம் தான் வீசும் தேடாமல் தேடாதோ


ஏ...
பெண் முல்லையே என் கண்மணி ஊர்கோல நேரம்
உன் காலடி படும்போதிலே பூந்தென்றல் பாடும்
பார்வை பட்ட காயம் பாவை தொட்டு காயும்
எண்ணம் தந்த முன்னோட்டம் என்று அந்த வெள்ளோட்டம்
கண்ட பின்பு கொண்டாட்டம் கண்டாடும் என் நெஞ்சம்

- கங்கை அமரன்

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி