அம்பா மனங்கனிந்துனது கடைக்கண்டார்

View Comments
படம்: சிவகவி
அம்பா மனங்கனிந்துனது
அம்பா மனங்கனிந்துனது கடைக்கண்டார்
திருவடியிணை துணையென் - அம்பா

வெம்பவ நோயற அன்பர் தமக்கருளும்
கதம்பவனக் குயிலே சங்கரி ஜெகத் - அம்பா

பைந்தமிழ் மலர் பாமாலை சூடி உன் பாதமலர்
பணிந்து பாடவும் வேண்டும்
சிந்தையும் என் நாவும் என்னேரமும்
நின் திருப்பெயர் புகழ் மறவாமையும் வேண்டும்
பந்த உலகில் மதிமயங்கி அறுபகைவர்
வசமாய் அழியாமல் அருள் பெறவேண்டும்
இந்தவரம் தருவாய் ஜெகதீஸ்வரி - எந்தன்
அன்னையே அகிலாண்ட நாயகி என் - அம்பா

- பாபநாசம் சிவன்