கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

நூலும் இல்லை, வாலும் இல்லை, வானில் பட்டம் விடுவேனா

படம் : இரயில் பயணங்களில்

நூலும் இல்லை, வாலும் இல்லை
வசந்த ஊஞ்சலிலே...
அசைந்த பூங்கொடியே...
உதிர்ந்த மாயம் என்ன
உன் இதய சோகம் என்ன
உன் இதய சோகம் என்ன

நூலும் இல்லை, வாலும் இல்லை, வானில் பட்டம் விடுவேனா
நாதி இல்லை, பேதி இல்லை, நானும் வாழ்வை ரசித்தேனா
நானும் வாழ்வை ரசித்தேனா
நூலும் இல்லை, வாலும் இல்லை, வானில் பட்டம் விடுவேனா
நாதி இல்லை, பேதி இல்லை, நானும் வாழ்வை ரசித்தேனா
நானும் வாழ்வை ரசித்தேனா

நினைவு வெள்ளம் பெருகிவர, நெருப்பெனவே சுடுகிறது
படுக்கை விரித்துப் போட்டேன், அதில் முள்ளாய் அவளின் நினைவு
பாழும் உலகை வெறுத்தேன், அதில் ஏனோ இன்னும் உயிரு
படுக்கை விரித்துப் போட்டேன், அதில் முள்ளாய் அவளின் நினைவு
பாழும் உலகை வெறுத்தேன், அதில் ஏனோ இன்னும் உயிரு
மண்ணுலகில் ஜென்மமென என்னை ஏனோ இன்றுவரை விட்டு வைத்தாள்
கண்ணிரண்டில் திராட்சைக்கொடி எண்ணம் வைத்து கண்ணீரைப் பிழிந்தெடுத்தாள்
இறைவா
கண்ணீரைப் பிழிந்தெடுத்தாள்

நிழல் உருவில் இணைந்திருக்க, நிஜம் வடிவில் பிரிந்திருக்க
பூத்தால் மலரும் உதிரும், நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை
நிலவும் தேய்ந்து வளரும், அவள் நினைவோ தேய்வதில்லை
பூத்தால் மலரும் உதிரும், நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை
நிலவும் தேய்ந்து வளரும், அவள் நினைவோ தேய்வதில்லை
காடுதன்னில் பாவி உயிர் வேகும்வரை பாவை உன்னை நினைத்திடுவேன்
பாடையிலே போகையிலும் தேவி உன்னைத் தேடி உயிர் பறந்திடுமே
உறவை
தேடி உயிர் பறந்திடுமே

- டி. ராஜேந்தர்

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி