கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

தாழம்பூவே வாசம் வீசு

படம் : கைகொடுக்கும் கை
தாழம்பூவே
தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு
வீடேதும் இல்ல வாசலும் இல்ல
அன்புக்கு பஞ்சமில்லே
தாலேலோ தாலேலோ

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு

நடந்தால் காஞ்ச நிலம் செழிக்கும்
சிரிச்சா கோயில் மணி அடிக்கும்
கண்ட கண்ணு படும்

பேசும் போது தாயைப் பார்த்தேன்
தோளில் தூங்கும் பிள்ளை ஆனேன்

நெஞ்சத்திலே ஏஏ..ஏஏ..ஏஏ

நெஞ்சத்திலே ஊஞ்சல் கட்டி
ஆராரிரோ பாடவோ

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு
வீடேதும் இல்ல வாசலும் இல்ல
அன்புக்கு பஞ்சமில்லே
தாலேலோ தாலேலோ

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு

இனி நான் கோடி முறை பிறப்பேன்
உன்னை நான் பார்க்க விழி திறப்பேன்
இது சத்தியமே

நீரும் போனால் மேகம் ஏது
நீயும் போனால் நானும் ஏது

என்னுயிரே ஏஏஏஏ..

என்னுயிரே நீ இருக்க
உண்மை இது போதுமா

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு

வீடேதும் இல்ல வாசலும் இல்ல
அன்புக்கு பஞ்சமில்லே
தாலேலோ தாலேலோ

- புலமைபித்தன்

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி