கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...

அடியே கொல்லுதே
ஆண்: அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...
உலகம் சுருங்குதே... இருவரில் அடங்குதே...
உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்ந்திடுதே...
என் காலை நேரம் என் மாலை வானம்
நீயின்றி காய்ந்திடுதே... (அடியே கொல்லுதே...)

(இசை...)

ஆண்: இரவும் பகலும் உன்முகம்
இரையைப் போலே துரத்துவதும் ஏனோ
முதலும் முடிவும் நீயென
தெரிந்த பின்பு தயங்குவதும் ஏனோ

பெண்: வாடைக் காற்றினில் ஒரு நாள்
ஒரு வாசம் வந்ததே
உன் நேசம் என்றதே
உந்தன் கண்களில் ஏதோ
மின்சாரம் உள்ளதே
என் மீது பாய்ந்ததே
மழைக்காலத்தில் சரியும்
மண் சரிவைப் போலவே மனமும்
உனைக் கண்டதும் சரியக் கண்டேனே... (அடியே கொல்லுதே...)

(இசை...)

ஆண்: அழகின் சிகரம் நீயடி
கொஞ்சம் அதை நான் தள்ளி நடப்பேனே
ஒரு சொல் ஒரு சொல் சொல்லடி
இந்தக் கணமே உன்னை மணப்பேனே

பெண்: சொன்னால் வார்த்தை என் சுகமே
மயில் தோகை போலவே என் மீது ஊருதே
எல்லா பாதமும் மீண்டும் சில நேரம் மாத்திரம்
செந்தூரம் ஆகுதே
எனக்காகவே வந்தாய்
என் நிழல் போலவே நின்றாய்
உனைத் தோற்று நீ என்னை வென்றாயே...

ஆண்: அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...
உலகம் சுருங்குதே... இருவரில் அடங்குதே...

பெண்: உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்ந்திடுதே...
என் காலை நேரம் என் மாலை வானம்
நீயின்றி காய்ந்திடுதே...

- தாமரை

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி