கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

உசிரே போகுது உசிரே போகுது

படம்: ராவணன்
உசிரே போகுது உசிரே போகுது
இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்தே
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ விதச்ச
அடி தேக்கு மரக்காடு பெரிசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான்
ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி
கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி
உசிரே போகுது உசிரே போகுது
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில

மாமன் தவிக்கிறேன் மடிப்பிச்சை கேட்க்கிறேன்
மனச தாடி என் மணிக்குயிலே
அக்கரை சீமையில நீ இருந்தும்
அய்விரல் தீண்டிட நினைக்குதடி

அக்கினி பழம் என்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

உடம்பும் மனசும் தூரம் தூரம்
ஒட்ட நினைக்க ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய உடம்பு கேக்கல

தவியா தவிச்சு உசிர் தடங்கெட்டு திரியுதடி
தைலாங் குருவி என்ன
தள்ளி நின்னு சிரிக்குதடி

இந்த மம்முத கிருக்கு தீருமா
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா
எம் மயக்கத்த தீத்து வச்சு மன்னிச்சிருமா

சந்திரரும் சூரியரும் சுத்தி
ஒரு கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும் இப்ப
தல சுத்தி கிடக்குதே

இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசில்ல
ஒன்னு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்தில
விதி சொல்லி பழி போட்ட மனசுக்குள்ள
விதி விலக்கில்லாத விதியுமில்ல

எட்ட இருக்கும் சூரியன் பார்த்து
மொட்டு விரிக்குது தாமரை
தொட்டு விடாத தூரம் இருந்தும்
சொந்தம் பந்தமோ போகல

பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலையே
பாம்பா இருந்தும் நெஞ்சு
பயப்பட நினைக்கலையே

என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்
என் கண்ணுல உன் முகம் போகுமா
நான் ஒன்னுக்குள்
ஒன்னெடுத்து மனசுக்குள்ளே

- வைரமுத்து

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி