கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

கனாக் கண்டேனடி - தோழி

படம் : பார்த்திபன் கனவு

பார்த்திபன் கனவு

கனாக்  கண்டேனடி -  தோழி
கனாக் கண்டேனடி
உன்
விழி முதல் மொழி வரை
முழுவதும் கவிதைகள்
அகமெது புறமெது
புரிந்தது போலே
...
உன்
முடி முதல் அடி வரை
முழுவதும் இனிமைகள்
சுவையெது சுகமெது
அறிந்தது போலே


எதையோ என் வாய்
சொல்லத் தொடங்க
அதையே உன் வாய்
சொல்லி அடங்க
உதடுகள் நான்கும்
ஒட்டிக்கொள்ள நான் கண்டேன்
...
நிலம் போல் உன் மனம் விரிந்து கிடக்க
நிழல் போல் என் மனம் சரிந்து படுக்க
இதயம் இரண்டும்
கட்டிக் கொள்ள  நான் கண்டேன்
...
ஒரு கண்ணில் அமுதம் கண்டேன்
மறு கண்ணில் அமிலம் கண்டேன்
...
எங்கெங்கோ  தேடித் தேடி
உன்னில் என்னை
நான் கண்டேன்


இடை மேல் என் விரல்
கவிதைத் கிறுக்க
படை போல் உன் விரல்
பதறித் தடுக்க
...
கூச்சம் என்னை
நெட்டித் தள்ள நான் கண்டேன்
...
கொடியினில் காய்கிற
சுடிதார் எடுத்து
மடிக்கிற சாக்கில்
வாசனை பிடித்து
...
மூச்சில் உன்னைச்
சொட்டச் சொட்ட நான் கண்டேன்
...
நிறமில்லா உலகம் கண்டேன்
நிறமெல்லாம் உன்னில் கண்டேன்
...
எங்கெங்கோ தேடித் தேடி
என்னில் உன்னை
நான் கண்டேன்

- யுகபாரதி

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி