அக்கரைச் சீமை அழகினிலே

View Comments
படம் : பிரியா

சிங்கப்பூர்
அக்கரைச் சீமை அழகினிலே
மனம் ஆடக்கண்டேனே
புதுமையிலே மயங்குகிறேன்

பார்க்கப் பார்க்க ஆனந்தம்
பறவை போல உல்லாசம்
வேலை இன்றி யாருமில்லை
எங்கும் சந்தோஷம்
வெறும்பேச்சு வெட்டிக்கூட்டம்
ஏதுமில்லை இந்த ஊரில்
கள்ளம் கபடம் இன்றி
கண்ணியமாக ஒற்றுமை உணர்வுடன்
வாழும் சிங்கப்பூர்

சிட்டுப்போல பிள்ளைகள்
தேனில் ஆடும் முல்லைகள்
துள்ளித் துள்ளி மான்கள் போல
ஆடும் உற்சாகம்
தினம் தோறும் திருநாளே
சுகம் கோடி மனம் போலே
சீனர் தமிழர் மலேய மக்கள் உறவினர் போல
அன்புடன் நட்புடன் வாழும் சிங்கப்பூர்

மஞ்சள் மேனிப்பாவைகள்
தங்கம் மின்னும் அங்கங்கள்
காவியத்தில் வார்த்தை இல்லை
உன்னைப் பாராட்ட
நடைபார்த்து மயிலாடும்
மொழிகேட்டு கிளி பேசும்

கண்ணில் தவழும் புன்னகை கண்டேன்

சொர்க்கம்போல இன்பமும் பெருமையும்
வாழும் சிங்கப்பூர்

- பஞ்சு அருணாச்சலம்