கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

தாவணி போட்ட தீபாவளி

படம் : சண்டைக்கோழி

தாவணி போட்ட தீபாவளி
தாவணி போட்ட தீபாவளி
வந்தது என் வீட்டுக்கு
கை மொளைச்சி கால் மொளைச்சி
ஆடுது என் பாட்டுக்கு

கன்னா கன்னா மூச்சு
என் கன்னா பின்னா பேச்சு
பட்டாம் பட்டாம் பூச்சி
என் பக்கம் வந்து போச்சு

இரவும் வருது
பகலும் வருது
எனக்கு தெரியல
இந்த அழகு சரிய
மனசு எரிய
கணக்கு புரியல

முட்டுது முட்டுது மூச்சு முட்டுது
அவளைக் கண்டாளே
கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது
அருகில் நின்னாலே
விட்டுடூ விட்டுடூ ஆள விட்டுடூ
பொழச்சு போறான் ஆம்பள

ரெண்டு விழி ரெண்டு விழி சண்டையிடும் கோழியா
பத்து விரல் பத்து விரல் பஞ்சு மெத்த கோழியா
பம்பரத்த போல நானும் மாடுறேனே மார்க்கமா
பச்ச தண்ணீர் நீர் கொடுக்க ஆகி போகும் தீர்த்தமா
மகா மக குளமே! என் மனசுக்கேத்த முகமே
நவா பழ நிறமே! என்ன நறுக்கி போட்ட நகமே
இதுக்கு மேல இதுக்கு மேல, எனக்கு ஏதும் தோணல...
இதுக்கு மேல விளக்கும் பொது இடிக்க வந்தாலே
என்ன அடுக்கு பான முறுக்கு போல உடைச்சு தின்னாலே...

கட்டழகு கட்டழகு கண்ணு படக் கூடுமே
எட்டியிரு எட்டியிரு இன்னும் வெகு தூரமே
பாவாடை கட்டி நிற்கும் பாவலரு பாட்டு நீ
பாதாதி கேசம் வர பாசத்தோட காட்டு நீ
தெக்கு மர ஜன்னல் நீ தேவ லோக மின்னல்
இச்சமர தொட்டில் நீ எலந்த பழ கட்டில்
அறுந்த வாலு குறும்பு தெழு
ஆனாலும் நீன் ஏஞ்சலு
ஈரக்கொல .. குலுங்க குலுங்க சிரிச்சு நின்னாலே
இவ ஒர விழி நடுங்க நடுங்க நெருப்பு வச்சானே

- யுகபாரதி

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி