மாய நதி இன்று மார்பில் வழியுதே

View Comments

நெஞ்சம் எல்லாம் வண்ணம் பல வண்ணம் ஆகுதே
கண்கள் எல்லாம் இன்பம் கூடி கண்ணீர் ஆகுதே
நான் உன்னை காணும் வரையில் தாபத நிலையே
தேசங்கள் திரிந்தேன் தனியே தனியே

ஆயிரம் கோடி முறை நான் தினம் இறந்தேன்
நான் என்னை உயிர்த்தேன் பிரிவில் பிரிவில்

மாய நதி இன்று மார்பில் வழியுதே
தூய நரையிலும் காதல் மலருதே

மாய நதி இன்று மார்பில் வழியுதே
தூய நரையிலும் காதல் மலருதே

நீர் வழியே மீன்களை போல்
என் உறவை நான் இழந்தேன் 
நீ இருந்தும் நீ இருந்தும்
ஒரு துறவை நான் அடைந்தேன்
ஒளி பூக்கும் இருளே வாழ்வின் பொருளாகி
வலி தீர்க்கும் வலியாய் வாஞ்சை தரவா

மாய நதி இன்று மார்பில் வழியுதே
தூய நரையிலும் காதல் மலருதே

யானை பலம் இங்கே - சேரும் உறவிலே
போன வழியிலே வாழ்கை திரும்புதே

தேசமெல்லாம் ஆளுகின்ற ஒரு படையை நான் அடைந்தேன்
காலமெனும் வீரனிடம் என் கொடியை நான் இழந்தேன்
மணல் ஊரும் மழையாய் மடி மீது விழ வா வா
அணை மீறும் புனலாய் மார் சாய்ந்து அழ வா

மாய நதி இன்று மார்பில் வழியுதே
தூய நரையிலும் காதல் மலருதே

யானை பலம் இங்கே - சேரும் உறவிலே
போன வழியிலே வாழ்கை திரும்புதே

-உமா தேவி

Save