கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம்

படம் : கண்ணுக்குள் நிலவு

ரோஜா பூந்தோட்டம்,
காதல் வாசம், காதல் வாசம்,
பூவின் இதழ் எல்லாம்,
மௌன ராகம், மௌன ராகம்,

 

ஒவ்வொரு இலையிலும்,
தேன்துளி ஆடுதே,
பூவெல்லாம் பூவெல்லாம்,
பனி மழை தேடுதே,
நம் காதல் கதை கொஞ்சம்,
சொல் சொல் சொல் என்றதே

 

விழியசைவில்,
உன் இதழ் அசைவில்,
இதயத்திலே இன்று,
ஒரு இசை தட்டு சுழலுதடி,

 

ஓ..ஓ..

 

புதிய இசை,
ஒரு புதிய திசை,
புது இதயம் என்று,
உன் காதலில் கிடைத்ததடி,

 

ஓ..ஓ…
காதலை நான் தந்தேன்,
வெட்கதை நீ தந்தாய்,
காதலை நான் தந்தேன்,
வெட்கதை நீ தந்தாய்,
நீ நெருங்கினால், நெருங்கினால்,
என் இளமை சுடுகிறதே,

உன்னை நினைத்து நான் விழிந்திருந்தேன்,

இரவுகளில் தினம்,
வண்ண நிலவுக்கு துணையிருந்தேன்,

 

ஓ..ஓ..

 

நிலவடிக்கும், கொஞ்சம் வெயில் அடிக்கும்,
பருவ நிலை,
அதில் என் மனதுடன் சிலிர்திருந்தேன்,
ஓ..ஓ…

 

சுரியன் ஒரு கண்ணில்,
வென்னிலா மறு கண்ணில்,
சுரியன் ஒரு கண்ணில்,
வென்னிலா மறு கண்ணில்,
என் இரவையும் பகலையும்,
உனது விழியில் கண்டேன்

- பழனி பாரதி

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி