நெஞ்சுக்குள்ளே உம்ம முடிஞ்சிருக்கேன்
- விவரங்கள்
- பிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்
- வெளியிடப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014 09:10
- எழுத்தாளர்: வைரமுத்து
- படிப்புகள்: 2959
படம்: கடல்
நெஞ்சுக்குள்ளே உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில் என் பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெள்ள பார்வை வீசிவிட்டீர் முன்னாடி
இந்த தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம், வலதுகை கெடியாரம்
ஆனை புலியெல்லாம் அடக்கும் அதிகாரம்
நீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலையே போகலையே
நெஞ்சுக்குழியில் நிழல் வந்து சேர்ந்து நின்னுடுச்சே
அப்ப நிமிந்தவதான் அப்புறமா குனியலையே குனியலையே
கொடகம்பி போல மனம் குத்தி நிக்குதே
நெஞ்சுக்குள்ளே...
பச்சி ஓரங்கிடிச்சு பால் தயிரா தூங்கிருச்சு
இச்சி மரத்துமேல இல கூட தூங்கிருச்சு
காசநோய் காரிகளும் கண்ணொறங்கும் வேளையிலே
ஆச நோய் வந்த மக அரை நிமிஷம் தூங்கலையே
நெஞ்சுக்குள்ளே...
ஓ...ஒரு வாய் இறங்கலையே உள்நாக்கு நனையலையே
ஏழெட்டு நாளா எச்சில் முழுங்கலையே
ஏழை இளஞ்சிருக்கி ஏதும் சொல்ல முடியலையே
ரப்பர் வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே
நெஞ்சுக்குள்ளே...
வெள்ள பார்வை வீசிவிட்டீர் முன்னாடி...
நெஞ்சுக்குள்ளே...
- வைரமுத்து