வெட்டிவேரு வாசம்

View Comments
படம்: முதல் மரியாதை
வெட்டிவேரு வாசம்
வெட்டிவேரு வாசம்
வெடலப்புள்ள நேசம்
வெட்டிவேரு வாசம்
வெடலப்புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு
பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ….மானே

பச்சைக்கிளியோ தொட்டுக்கிருச்சு
இச்சைக்கிளியோ ஒத்துக்கிருச்சு
வச்ச நெருப்பு தொட்டுக்கிருச்சு
பச்ச மனசு பத்திக்கிருச்சு
கைய கட்டி நிக்கச்சொன்னா
காட்டு வெள்ளம் நிக்காது
காதல் மட்டும் கூடாதுன்னா
பூமி இங்கு சுத்தாது
சாமிகிட்ட கேளு
யாரு போட்ட கோடு
பஞ்சுக்குள்ள தீய வச்சு
பொத்தி வச்சவுக யாரு

ஒன்னக்கண்டு நான் சொக்கி நிக்கிறேன்
கண்ணுக்குள்ள நான் தண்ணி வைக்கிறேன்
சொல்லாமத்தான் தத்தளிக்கிறேன்
தாளமத்தான் தள்ளி நிக்கிறேன்
பாசம் உள்ள தர்மம் இத
பாவமின்னு சொல்லாது
குருவி கட்டும் கூட்டுக்குள்ள குண்டு வைக்கக்கூடாது
புத்தி கெட்ட தேசம் பொடி வச்சு பேசும்
சாதிமத பேதம் எல்லாம் முன்னவங்க செஞ்ச மோசம்

- வைரமுத்து