பழந்தமிழ் கவிதைகள்
விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2011 19:00
- எழுத்தாளர்: பரூஉ மோவாய்ப் பதுமனார்
- படிப்புகள்: 1683
குறுந்தொகை: குறிஞ்சி - தலைவன் கூற்று

விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்
அரிதுபெறு சிறப்பிற் புத்தேள் நாடும்
இரண்டும் தூக்கிற் சீர்சா லாவே
பூப்போல் உண்கண் பொன்போல் மேனி
மாண்வரி அல்குற் குறுமகள்
தோள்மாறு படூஉம் வைகலோ டெமக்கே.
அரிதுபெறு சிறப்பிற் புத்தேள் நாடும்
இரண்டும் தூக்கிற் சீர்சா லாவே
பூப்போல் உண்கண் பொன்போல் மேனி
மாண்வரி அல்குற் குறுமகள்
தோள்மாறு படூஉம் வைகலோ டெமக்கே.
- பரூஉ மோவாய்ப் பதுமனார்
Add a comment
அருவி வேங்கைப் பெருமலை நாடற்கு
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 23 ஜூலை 2011 19:00
- எழுத்தாளர்: அள்ளூர் நன்முல்லையார்
- படிப்புகள்: 1615
குறுந்தொகை: குறிஞ்சி - தலைவி கூற்று

அருவி வேங்கைப் பெருமலை நாடற்கு
யானெவன் செய்கோ என்றி யானது
நகையென உணரேன் ஆயின்
என்னா குவைகொல் நன்னுதல் நீயே.
- அள்ளூர் நன்முல்லையார்
Add a comment
யானெவன் செய்கோ என்றி யானது
நகையென உணரேன் ஆயின்
என்னா குவைகொல் நன்னுதல் நீயே.
- அள்ளூர் நன்முல்லையார்
அருவிப் பரப்பின் ஐவனம்
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2011 19:00
- எழுத்தாளர்: கபிலர்
- படிப்புகள்: 1645
குறுந்தொகை: குறிஞ்சி - தலைவன் கூற்று

அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
பருவிலைக் குளவியொடு பசுமரல் கட்கும்
காந்தள் வேலிச் சிறுகுடி பசிப்பிற்
கடுங்கண் வேழத்துக் கோடுநொடுத் துண்ணும்
வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப்
பாவையின் மடவந் தனளே
மணத்தற் கரிய பணைப்பெருந் தோளே.
- கபிலர்
Add a comment
பருவிலைக் குளவியொடு பசுமரல் கட்கும்
காந்தள் வேலிச் சிறுகுடி பசிப்பிற்
கடுங்கண் வேழத்துக் கோடுநொடுத் துண்ணும்
வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப்
பாவையின் மடவந் தனளே
மணத்தற் கரிய பணைப்பெருந் தோளே.
- கபிலர்
மால்வரை இழிதருந் தூவெள் அருவி
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 09 ஜூலை 2011 19:00
- எழுத்தாளர்: கபிலர்
- படிப்புகள்: 1701
குறுந்தொகை: குறிஞ்சி - தலைவன் கூற்று

மால்வரை இழிதருந் தூவெள் அருவி
கல்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரல்
சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகள்
நீரோ ரன்ன சாயல்
தீயோ ரன்னவென் உரனவித் தன்றே.
- கபிலர்
யானே ஈண்டை யேனே யென்னலனே
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 30 ஜூலை 2011 19:00
- எழுத்தாளர்: வெண்பூதியார்
- படிப்புகள்: 1540
குறுந்தொகை: நெய்தல் - தலைவி கூற்று

யானே ஈண்டை யேனே யென்னலனே
ஆனா நோயொடு கான லஃதே
துறைவன் தம்மூ ரானே
மறையல ராகி மன்றத் தஃதே.
- வெண்பூதியார்
Add a comment
ஆனா நோயொடு கான லஃதே
துறைவன் தம்மூ ரானே
மறையல ராகி மன்றத் தஃதே.
- வெண்பூதியார்
பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்து
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 02 ஜூலை 2011 19:00
- எழுத்தாளர்: கதக்கண்ணனார்
- படிப்புகள்: 1647
குறுந்தொகை : முல்லை - தலைவி கூற்று

பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்து
அரும்பே முன்னும் மிகச்சிவந் தனவே
மானே மருள்வேன் தோழி பானாள்
இன்னுந் தமியர் கேட்பிற் பெயர்த்தும்
என்னா குவர்கொல் பிரிந்திசி னோரே
அருவி மாமலை தத்தக்
கருவி மாமழைச் சிலை தருங் குரலே.
- கதக்கண்ணனார்.
Add a comment
அரும்பே முன்னும் மிகச்சிவந் தனவே
மானே மருள்வேன் தோழி பானாள்
இன்னுந் தமியர் கேட்பிற் பெயர்த்தும்
என்னா குவர்கொல் பிரிந்திசி னோரே
அருவி மாமலை தத்தக்
கருவி மாமழைச் சிலை தருங் குரலே.
- கதக்கண்ணனார்.