பழந்தமிழ் கவிதைகள்
குவியிணர்த் தோன்றி ஒண்பூ வன்ன
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 05 நவம்பர் 2011 19:00
- எழுத்தாளர்: மதுரைக் கண்ணனார்
- படிப்புகள்: 1507
குறுந்தொகை:. மருதம் - தலைவி கூற்று
குவியிணர்த் தோன்றி ஒண்பூ வன்ன
தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல்
நள்ளிருள் யாமத் தில்லெலி பார்க்கும்
பிள்ளை வெருகிற் கல்கிரை யாகிக்
கடுநவைப் படீஇயரோ நீயே நெடுநீர்
யாணர்ஊரன் தன்னொடு வதிந்த
ஏம இன்துயில் எடுப்பி யோயே.
-மதுரைக் கண்ணனார்.
Add a comment
அம்ம வாழி தோழி காதலர்
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 15 அக்டோபர் 2011 19:00
- எழுத்தாளர்: காவன் முல்லைப்பூதனார்
- படிப்புகள்: 2057

புல்வீழ் இற்றிக் கல்லிவர் வெள்வேர்
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 29 அக்டோபர் 2011 19:00
- எழுத்தாளர்: கபிலர்
- படிப்புகள்: 1529
குறுந்தொகை:. குறிஞ்சி - தலைவி கூற்று
புல்வீழ் இற்றிக் கல்லிவர் வெள்வேர்
வரையிழி அருவியின் தோன்றும் நாடன்
தீதில் நெஞ்சத்துக் கிளவி நம்வயின்
வந்தன்று வாழி தோழி நாமும்
நெய்பெய் தீயின் எதிர்கொண்டு
தான்மணந் தனையமென விடுகந் தூதே.
-கபிலர்.
கடும்புனல் தொகுத்த நடுங்கஞர் அள்ளல்
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 08 அக்டோபர் 2011 19:00
- எழுத்தாளர்: வாயிலான் தேவனார்
- படிப்புகள்: 1578
குறுந்தொகை: நெய்தல் - தலைவி கூற்று
கவரிதழ் அன்ன தூவிச் செவ்வாய்
இரைதேர் நாரைக் கெவ்வ மாகத்
தூஉந் துவலைத் துயர்கூர் வாடையும்
வாரார் போல்வர்நங் காதலர்
வாழேன் போல்வல் தோழி யானே.
-வாயிலான் தேவனார்
Add a comment
புனவன் துடவைப் பொன்போற் சிறுதினைக்
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 22 அக்டோபர் 2011 19:00
- எழுத்தாளர்: நக்கீரர்
- படிப்புகள்: 1557
குறுந்தொகை:குறிஞ்சி - தலைவி கூற்று
புனவன் துடவைப் பொன்போற் சிறுதினைக்
கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல்
அறியா துண்ட மஞ்ஞை ஆடுமகள்
வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்
சூர்மலை நாடன் கேண்மை
நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே.
-நக்கீரர்.
Add a comment
உள்ளின் உள்ளம் வேமே உள்ளா
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 01 அக்டோபர் 2011 19:00
- எழுத்தாளர்: ஔவையார்
- படிப்புகள்: 1770

திருப்பினெம் அளவைத் தன்றே வருத்தி
வான்றோய் வற்றே காமம்
சான்றோர் அல்லர்யாம் மரீஇ யோரே.
- ஔவையார்.