பழந்தமிழ் கவிதைகள்
கௌவை யஞ்சிற் காமம் எய்க்கும்
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 17 டிசம்பர் 2011 18:00
- எழுத்தாளர்: ஆலத்தூர் கிழார்
- படிப்புகள்: 1722
குறுந்தொகை:குறிஞ்சி - தலைவி கூற்று

கௌவை யஞ்சிற் காமம் எய்க்கும்
எள்ளற விடினே உள்ளது நாணே
பெருங்களிறு வாங்க முரிந்துநிலம் படாஅ
நாருடை ஒசியல் அற்றே
கண்டிசின் தோழியவர் உண்டஎன் நலனே.
-ஆலத்தூர் கிழார்.
Add a comment
முட்கால் இறவின் முடங்குபுறப் பெருங்கிளை
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 26 நவம்பர் 2011 18:00
- எழுத்தாளர்: நம்பி குட்டுவனார்
- படிப்புகள்: 1575
குறுந்தொகை:நெய்தல் - தோழி கூற்று

முட்கால் இறவின் முடங்குபுறப் பெருங்கிளை
புணரி இகுதிரை தரூஉந் துறைவன்
புணரிய இருந்த ஞான்றும்
இன்னது மன்னோ நன்னுதற் கவினே.
-நம்பி குட்டுவனார்.
Add a comment
மென்தோள் நெகிழ்த்த செல்லல் வேலன்
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 10 டிசம்பர் 2011 18:00
- எழுத்தாளர்: தீன்மதி நாகனார்
- படிப்புகள்: 1597
குறுந்தொகை:குறிஞ்சி - தோழி கூற்று

மென்தோள் நெகிழ்த்த செல்லல் வேலன்
வென்றி நெடுவேள் என்னும் அன்னையும்
அதுவென உணரும் ஆயின் ஆயிடைக்
கேழிருந் துறுகற் கெழுமலை நாடன்
வல்லே வருக தோழிநம்
இல்லோர் பெருநகை காணிய சிறிதே.
-தீன்மதி நாகனார்.
Add a comment
மனையுறை கோழிக் குறுங்காற் பேடை
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 19 நவம்பர் 2011 18:00
- எழுத்தாளர்: ஒக்கூர் மாசாத்தியார்
- படிப்புகள்: 1486
குறுந்தொகை:மருதம் - தோழி கூற்று
மனையுறை கோழிக் குறுங்காற் பேடை
வேலி வெருகின மாலை யுற்றெனப்
புகுமிட னறியாது தொகுபுடன் குழீஇய
பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங்
கின்னா திசைக்கும் அம்பலொடு
வாரல் வாழிய ரையவெந் தெருவே.
-ஒக்கூர் மாசாத்தியார்.
Add a commentவாரா ராயினும் வரினும் அவர்நமக்கு
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 03 டிசம்பர் 2011 18:00
- எழுத்தாளர்: கிள்ளிமங்கலங்கிழார்
- படிப்புகள்: 1610
குறுந்தொகை:முல்லை - தலைவி கூற்று

வாரா ராயினும் வரினும் அவர்நமக்கு
யாரா கியரோ தோழி நீர
நீலப் பைம்போ துளரிப் புதல
பீலி ஒண்பொறிக் கருவிளை யாட்டி
நுண்முள் ஈங்கைச் செவ்வரும் பூழ்த்த
வண்ணத் துய்ம்மலர் உதிரத் தண்ணென்று
இன்னா தெறிதரும் வாடையொடு
என்னா யினள்கொல் என்னா தோரே.
-கிள்ளிமங்கலங்கிழார்.
Add a comment
மழைவிளை யாடுங் குன்றுசேர் சிறுகுடிக்
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 12 நவம்பர் 2011 18:00
- எழுத்தாளர்: வாயிலான் தேவனார்
- படிப்புகள்: 1546
குறுந்தொகை:முல்லை - தலைவி கூற்று

மழைவிளை யாடுங் குன்றுசேர் சிறுகுடிக்
கறவை கன்றுவயிற் படரப் புறவிற்
பாசிலை முல்லை ஆசில் வான்பூச்
செவ்வான் செவ்வி கொண்டன்று
உய்யேன் போல்வல் தோழி யானே.
-வாயிலான் தேவனார்.
Add a comment