பழந்தமிழ் கவிதைகள்
புள்ளும் மாவும் புலம்பொடு வதிய
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 07 ஏப்ரல் 2012 19:00
- எழுத்தாளர்: நன்னாகையார்
- படிப்புகள்: 2077
நெய்தல் - தலைவி கூற்று
புள்ளும் மாவும் புலம்பொடு வதிய
நள்ளென வந்த நாரில் மாலைப்
பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீரோ எனவும்
வாரார் தோழிநங் காத லோரே.
-நன்னாகையார்
பெருநன் றாற்றிற் பேணாரும் உளரே
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 17 மார்ச் 2012 19:00
- எழுத்தாளர்: கபிலர்
- படிப்புகள்: 1760
குறிஞ்சி - தோழி கூற்று
பெருநன் றாற்றிற் பேணாரும் உளரே
ஒருநன் றுடையள் ஆயினும் புரிமாண்டு
புலவி தீர அளிமதி இலைகவர்
பாடமை ஒழுகிய தண்ணறுஞ் சாரல்
மென்னடை மரையா துஞ்சும்
நன்மலை நாட நின்னல திலளே.
-கபிலர்
Add a comment
மாரி ஆம்ப லன்ன கொக்கின்
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 31 மார்ச் 2012 19:00
- எழுத்தாளர்: குன்றியனார்
- படிப்புகள்: 1931
நெய்தல் - தோழி கூற்று
மாரி ஆம்ப லன்ன கொக்கின்
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர்ஞெண்டு
கண்டல் வேரளைச் செலீஇயர் அண்டர்
கயிறரி யெருத்திற் கதழுந் துறைவன்
வாரா தமையினும் அமைக
சிறியவும் உளவீண்டு விலைஞர்கை வளையே.
-குன்றியனார்
Add a commentநெய்தற் பரப்பிற் பாவை கிடப்பி
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 10 மார்ச் 2012 18:00
- எழுத்தாளர்: பொன்னாகனார்
- படிப்புகள்: 1516
நெய்தல் - தோழி கூற்று
நெய்தற் பரப்பிற் பாவை கிடப்பி
நின்குறி வந்தனென் இயல்தேர்க் கொண்க
செல்கம் செலவியங் கொண்மோ அல்கலும்
ஆரல் அருந்த வயிற்ற
நாரை மிதிக்கும் என்மகள் நுதலே.
-பொன்னாகனார்.
Add a comment
யானயந் துறைவோள் தேம்பாய் கூந்தல்
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 24 மார்ச் 2012 19:00
- எழுத்தாளர்: இளங்கீரனார்
- படிப்புகள்: 2026
குறிஞ்சி - தலைவன் கூற்று
யானயந் துறைவோள் தேம்பாய் கூந்தல்
வளங்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை
நுண்மணல் அறல்வார்ந் தன்ன
நன்னெறி யவ்வே நறுந்தண் ணியவே.
-இளங்கீரனார்
Add a comment
ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச்
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 03 மார்ச் 2012 18:00
- எழுத்தாளர்: மாதீர்த்தனார்
- படிப்புகள்: 1575
மருதம் - தோழி கூற்று
ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச்
சேய்த்தும் அன்றே சிறுகான் யாறே
இரைதேர் வெண்குரு கல்ல தியாவதும்
துன்னல்போ கின்றாற் பொழிலே யாமெம்
கூழைக் கெருமண் கொணர்கஞ் சேறும்
ஆண்டும் வருகுவள் பெரும்பே தையே.
-மாதீர்த்தனார்
Add a comment