குறுந்தொகை : நெய்தல் - தலைமகள் கூற்று

View Comments
நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே
இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற் கமைந்தநங் காதலர்
அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே.

-காமஞ்சேர் குளத்தார்