கடும்புனல் தொகுத்த நடுங்கஞர் அள்ளல்

View Comments

குறுந்தொகை: நெய்தல் - தலைவி கூற்று

Indian-motifs-20

கடும்புனல் தொகுத்த நடுங்கஞர் அள்ளல்
கவரிதழ் அன்ன தூவிச் செவ்வாய்
இரைதேர் நாரைக் கெவ்வ மாகத்
தூஉந் துவலைத் துயர்கூர் வாடையும்
வாரார் போல்வர்நங் காதலர்
வாழேன் போல்வல் தோழி யானே.

-வாயிலான் தேவனார்