மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்,கபிலர்

View Comments
குறுந்தொகை : குறிஞ்சி - தலைவி கூற்று

மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்,கபிலர்

மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம் என்ப யாவதும்
கொடியர் அல்லரெங் குன்றுகெழு நாடர்
பசைஇப் பசந்தன்று நுதலே
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே.

- கபிலர்